சனி, 21 அக்டோபர், 2017

பலமொழி விளக்கம்

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்ள நேரிடும்.
உண்மையான பொருள்:?

மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு / மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கி கொள்ள நேரிடலாம்.

இந்த இரண்டு கருத்தும் தவறு.


உண்மையான பழமொழி

மங்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே


மங்கு + திரை

மங்குதல் என்றால் ஒளி மங்குதல் திரை என்றால் இங்கு அலை என்று பொருள்
மங்குதிரை என்னும் வினைத்தொகை ஒளி மழுங்கு அலைகள் என்ற பொருளில் கானல் நீரை குறிக்கும்

கானல் நீரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் இப்பழ மொழியின் உண்மையான அர்த்தம்
mankuthirai க்கான பட முடிவு

பலமொழி விளக்கம்

அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல
அரசனை மேல் (ஆசை) நம்பிக்கொண்டு, தன கணவனை கைவிட்டது போல.

உண்மையான பொருள்:

அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல

அரசினை என்பது அரச மரத்தை குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தை சுற்றுவார்கள். கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரச மரத்தை சுற்றுவது பயன் தராது.
arasamaram க்கான பட முடிவு

பலமொழி விளக்கம்

களவும் கற்று மற.

தீய பழக்கமான களவு (திருட்டை) நாம் கற்று கொண்டு, மறந்து விட வேண்டும்

உண்மையான பொருள்:

களவும், கத்தும் மற.
களவு – திருடுதல்; கத்து- பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
theft க்கான பட முடிவு

பலமொழி விளக்கம்

ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.

ஆயிரம் நோயாளிகளை கொன்றவன் பாதி வைத்தியன்.

உண்மையான பொருள்:
ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.
நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.vaithiyan க்கான பட முடிவு

பலமொழி விளக்கம்

கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு)

கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம்.

கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது...
donkey க்கான பட முடிவு