சனி, 21 அக்டோபர், 2017

பலமொழி விளக்கம்

களவும் கற்று மற.

தீய பழக்கமான களவு (திருட்டை) நாம் கற்று கொண்டு, மறந்து விட வேண்டும்

உண்மையான பொருள்:

களவும், கத்தும் மற.
களவு – திருடுதல்; கத்து- பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
theft க்கான பட முடிவு

பலமொழி விளக்கம்

ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.

ஆயிரம் நோயாளிகளை கொன்றவன் பாதி வைத்தியன்.

உண்மையான பொருள்:
ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.
நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.vaithiyan க்கான பட முடிவு

பலமொழி விளக்கம்

கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு)

கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம்.

கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது...
donkey க்கான பட முடிவு

பலமொழி விளக்கம்

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை
தானே வளரும்.

மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்

ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான
பொருள்.
pregnant ladies க்கான பட முடிவு

பலமொழி விளக்கம்

"உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும் "

நம்முடைய பேச்சு வழக்கில் அதிகமாய் பயன்படுத்தப் படும் பழமொழிகளில் ஒன்று இது . எதுகை மோனை நடை என்பதற்க்காக தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கணும் என்பதையும் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் தற்காலத்திற்கு பொருந்தக் கூடிய அறிவியல் உண்மை ஒன்றை அற்புதமாய் எடுத்துரைக்கும் பழமொழி இது .

ஒரு மனிதனின் இரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பின் அளவு இருக்க வேண்டும் .அதற்கு மேல் இரத்தத்தில் சேரும் உப்பு வியர்வை,சிறுநீர் மற்றும் மலம் வழியே வெளியேறி விடுகிறது.ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது நம்சிறு நீரகம். இப்போது சொல்லுங்கள் நாம் நம் உடலில் சேரும் தேவையில்லாத உப்புகளை வெளியேற்ற எவ்வளவு நீர் அருந்த வேண்டும். இதை தான் பெரியவர்கள் உப்பைத் தின்னவன் தண்ணிகுடிக்கணும் என்று சொல்லி வைத்தார்கள் .