சனி, 21 அக்டோபர், 2017
பலமொழி விளக்கம்
"உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும் "
நம்முடைய பேச்சு வழக்கில் அதிகமாய் பயன்படுத்தப் படும் பழமொழிகளில் ஒன்று இது . எதுகை மோனை நடை என்பதற்க்காக தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கணும் என்பதையும் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் தற்காலத்திற்கு பொருந்தக் கூடிய அறிவியல் உண்மை ஒன்றை அற்புதமாய் எடுத்துரைக்கும் பழமொழி இது .
ஒரு மனிதனின் இரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பின் அளவு இருக்க வேண்டும் .அதற்கு மேல் இரத்தத்தில் சேரும் உப்பு வியர்வை,சிறுநீர் மற்றும் மலம் வழியே வெளியேறி விடுகிறது.ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது நம்சிறு நீரகம். இப்போது சொல்லுங்கள் நாம் நம் உடலில் சேரும் தேவையில்லாத உப்புகளை வெளியேற்ற எவ்வளவு நீர் அருந்த வேண்டும். இதை தான் பெரியவர்கள் உப்பைத் தின்னவன் தண்ணிகுடிக்கணும் என்று சொல்லி வைத்தார்கள் .

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
இந்தப் பழமொழி தவறுதலாக மருவி எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கல்லை, புல்லை, ஜடப்பொருளை தாவரத்தை ஒரு பெண்மனியின் கணவனாக ஏற்கமுடியுமா?
கல்லான் ஆயினும் கணவன், புல்லன் ஆயினும் கணவன். என்பதே சரி.
கல்லான் கற்காதவன். எழுத்தறிவு இல்லாதவன். அவனை அவள் தன் உழைப்பால், அறிவினால் சீர்தூக்கிவிடமுடியும். புல்லன் எனபதற்கு அறிவற்றவன் என்பது பொருள். அவனையும் அவனது மனைவி உயர்ந்தவனாக மாற்றமுடியும்

தன் நம்பிக்கை
ஒரு விவசாயியின் கிணறில் " கழுதை"ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது ...!
கழுதைவெளியில் எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சியை விவசாயி தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட பல முயற்சிகள் கடும் தோல்வியில் முடிந்தன ..!
பாவப்பட்டு இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்..?
அந்த பாதி கிணறுக்குள் மண்ணை போட்டு மூடி விடுவதாக .. கழுதைமீது மண்ணை போட்டனர்.கழுதை
சற்றும் பதட்டமின்றி தான் எப்படியும் மேலே வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தது.
விவசாயிகள் மண்ணை அதன் மீது போட போட கழுதைஉடலை உதறி உதறி தன் காலுக்கு கீழ் சேர்த்து இறுதியில் தானாகவே வெளியே வந்தது.
.
"மற்றவர்கள் உங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு சூழ்ச்சியாக ஏளனம், நையாண்டி, பழி சுமத்தல் ,சேறு பூசுதல் என்று பல மாறுபட்ட கோணங்களில் வருவார்கள்'.
நீங்கள் அவற்றை அடித்தளமாக வைத்து உண்மையை நிலைநாட்ட விடாமல் முன்னேறி வாருங்கள் இந்த பாதிக்கப்பட்ட கழுதைபோல.
எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்தே விடாதீர்கள்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)