வர வர மாமியார், கழுதை போல ஆனாளாம்.
அழகாக/அறிவாக நடக்கும் ஒருவர், நாளடைவில் மாறி நடந்தால், இப்படி சொல்லுவார்கள்.
உண்மையான பொருள்:
வர வர மாமியார், கயிதை போல ஆனாளாம்.
கயிதை என்பது ஊமத்தங்காயை குறிக்கும். ஆரம்பத்தில் ஊமத்தம் பூவாக இருக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். பின்னர் நாளாக நாளாக அது காயாக மாறி, சுற்றிலும் முள் போல இருக்கும். கொடிய விஷம் கொண்டது. அது போல மாமியார் பேசுவதும்,நடப்பதும், நாளாக நாளாக கயிதை போல இருக்கும் என்று அர்த்தம்.
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்ள நேரிடும்.உண்மையான பொருள்:?மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு / மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கி கொள்ள நேரிடலாம்.இந்த இரண்டு கருத்தும் தவறு. உண்மையான பழமொழி மங்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே மங்கு + திரைமங்குதல் என்றால் ஒளி மங்குதல் திரை என்றால் இங்கு அலை என்று பொருள் மங்குதிரை என்னும் வினைத்தொகை ஒளி மழுங்கு அலைகள் என்ற பொருளில் கானல் நீரை குறிக்கும் கானல் நீரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் இப்பழ மொழியின் உண்மையான அர்த்தம்
அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல
அரசனை மேல் (ஆசை) நம்பிக்கொண்டு, தன கணவனை கைவிட்டது போல.
உண்மையான பொருள்:
அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
அரசினை என்பது அரச மரத்தை குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தை சுற்றுவார்கள். கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரச மரத்தை சுற்றுவது பயன் தராது.
களவும் கற்று மற.தீய பழக்கமான களவு (திருட்டை) நாம் கற்று கொண்டு, மறந்து விட வேண்டும்உண்மையான பொருள்:களவும், கத்தும் மற.களவு – திருடுதல்; கத்து- பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.ஆயிரம் நோயாளிகளை கொன்றவன் பாதி வைத்தியன்.உண்மையான பொருள்:ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.