வியாழன், 19 அக்டோபர், 2017

சிந்தனையா? சாதனையா?

                     சிந்தனையா?  சாதனையா?
இந்த உலகில் பல இன மத மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொறுவருக்கும் ஒரு ஒரு சுபாவம், சிலருக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை சிலருக்கு வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு தம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று ஆசை,சிலருக்கு வாழும் காலத்தில் மற்றவருக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணங்களுடன் வாழ்ந்து வருவார்கள்.அவர்க்ள் அனைவருமே இந்த உலகில் தான் வாழ்கிறார்கள், எனினும் சிலரன் எண்ணங்கள் மட்டுமே நிறைவேறுகிறது.

ஏன் பிறரின் எண்ணங்க
ள் போலியானதா?இல்லை அற்தமற்றவையா? சிலர் மட்டுமே அவர்களது எண்ணங்களின் மீது நம்பிக்கை வைத்து அதனை நிறைவேற்றுகிறார்கள்,அவர்களின் நல்ல சிந்தணைகளுக்கு வடிவம் கொடுக்க விரும்புகிறார்கள்.அவர்கள் தமது நேரங்களை சரியான முறையில் பயண்படுத்த முற்பட்டவர்கள்.நாம் சாதனையாளர்களாக வருவதும், சிந்தனைகளோடு மட்டும் வாழ்வது நம் கைகளில் தான் உள்ளது.

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

                                                நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
நாம் எப்பொழுதும்  ஒரே போல் இருக்க நாம் ஜடம் அல்ல ரோபோட்களும் அல்ல. நாம் மனிதர்கள் இன்பம், துன்பம், விரக்தி, சோகம், அபரிமிதமான மகிழ்ச்சி, அளவுகடந்த கோபம் போன்ற குணங்கள் மனிதனுக்குள் இருப்பது இயல்பு. ஆனால் அந்த ஒவ்வொறு உணர்ச்சிகளையும் நாம் எவ்வாறு கையால்கிறோம் என்பதிலேயே இருக்கிறது புத்தி. அதற்க்காக எல்லா இடங்களிலும் நம்மால் பொறுமை காத்து இருக்க முடியாது.





           ஆகையால் சில நேரங்கள் நாம் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூட்டது. வாழ்க்கையில் இப்பொழுது இன்பமாக இனிப்பாக இருக்கும் சில செய்திகள் பிறகு நமக்கு கசப்பாக மாறும். ஆகையால், நமது வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொறு முடிவும் மிக சரியாக தொலைநோக்கு பார்வையுடன் எடுக்க வேண்டும். உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே தண்டித்துக்கொள்ளக் கூடாது. சில உறவுகள் நம்மிடம் வந்து செல்லும் ஆனால், அவைகளை கண்டு நாம் வருத்தப்படவோ, நம்மை விட்டு சென்று விட்டனரே என்று வேதனைக்கொள்ளவோ கூடாது. அனைத்தினையும் வாழ்வில் ஒரு அங்கமாக பார்க்த் தொடங்கினால், நம் வாழ்கையை அழகாக உணரலாம்.

தங்கள் வாழ்வில் என்றாவது பெரிய நட்சத்திரம் எவரையாவது சந்தித்ததுண்டா?

தங்கள் வாழ்வில் என்றாவது பெரிய நட்சத்திரம் எவரையாவது சந்தித்ததுண்டா?


ம்ம்ம்…….முதலாமாண்டு படித்துக்கொண்டிருக்கையில் எங்களிற்க்கு ஒரு பேராசிரியர் திருக்குறளை காட்சி படுத்தி காட்டி கொண்டிருந்தார். அப்பொழுது அவரை பற்றி புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை மறுநாள் கல்லூரிக்கு சென்ற போது உங்களின் தமிழ் பேராசிரியர் நான் என் பெயர் முனைவர்.இரா.குணசீலண். தமிழை வாழ்வென கொண்ட ஒரு உண்தமான மனப்பான்மை கொண்ட மகா மன்னர்.எவரொருவருக்கும் தான் செய்வதில் எப்பொழுதும் அக்ரையும் ஈடுபாடும் உருவாவதில்லை, எதை செய்தாலும் என்னேரமும் மிகச் சிறந்தமுறையில் செய்துவிடவேண்டும் என்ற எண்ணம் பிறந்துவிடாது, தன் தாய்மொழியைதே தன் முழூ தன்மானமாகவும் முழூ அடையாளமாகவும் கொண்டு செயல்படுவதில்லை.

இவை அனைத்தையும் ஒற்றுமை கொண்டு ஓருடலில் ஒரு சக்தியின் வடிவாக பார்த்து வளர்ந்துகொண்டிருக்கிறோம்.

(இவை வருணனை அல்ல எனது அனுபவத்தின் வெளிப்பாடு)

தி க்காஸ் மானிட்டர்

                                                                தி க்காஸ் மானிட்டர்
எல்லா மாணவர்களும் வெளியூர் பிரயாணம் செய்வதற்க்காக மிக சந்தோசமாக காணப்பட்டனர்.ஆசிரியர் அமரை அழைத்து``அமர் நான் உன்னை இந்த வகுப்பு பொருப்பாளராக நியமித்திஇருக்கின்றேன் அனைவரும் பேருந்தில் ஏறி விட்டனரா?யாரும் கையையோ! தலையையோ வெளியே விடக்கூடாது! பின்னர் அன்வரின் எண்னிக்கையையும் நன்றாக வெளியில் வைத்துக்கொள்!” என்றார் ஆசிரியர்.அமரும் ``நீங்கள் கூறிய அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்கிறேன்” என்று கூறினான்.


           அனைவரும் நன்றாக அந்த பிரையானத்தில் விளையாடி பின்னர் பேருந்தில் ஏறினர்.அப்போழுது அமர் தலையை வெளியே நீட்டிக்கொண்டிருந்தான். அதனைக் கண்ட அவனது ஆசிரியர்``அமர் என்ன செய்கிறாய்? அனைவரையும் கவனிக்க உன்னை நான் நியமித்தால் நீயே அந்த எல்லையை மீறுகிறாய்” என்று கண்டித்தார். அதற்க்கு அமர்``ஐயா நான் அனைத்து மாணவர்களும் ஏறிவிட்டனரா என்று பார்கிறேன்’’ என்றான் அமர். அமரை திட்டியதற்க்காக அவர் அப்போது ``வருத்தப்பட்டார்.

தி லேசி ப்பேர்ட்ஸ்

                                                 தி லேசி ப்பேர்ட்ஸ்
ரிங்கி மிங்கி என்று இரு பறவைகள் இரண்டு இருந்தன.இரு பறவைகளுமே சோம்பேரிகள்..அவைகள் எப்பொழுதுமே வேலை செய்வதை தவிர்க்க ஏதாவது காரணங்கள் கூறிக்கொண்டே இருக்கும்.ஒருகடும் பனியான நாளில் இதமான காற்று வீசிக்கொண்டிருந்தது. அங்கு பனிமழையும் பொழிந்தது.
துரதஷ்டவசமாக அவர்கள் கூட்டில் ஒரு ஓட்டை விழுந்தது. அந்த படும் பனக் காற்று மெதுவாக அவர்கள் கூட்டிற்க்கு சென்று, அவர்களின் கூட்டை உரையச் செய்தது. இரு பறவைகளுமே பனியில் நடுங்கின. மிங்கி``எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?ஏன் ரிங்கி கூட்டை சரி படுத்தாமல் இவ்வளவு சோம்பேறியாக இருக்கிறாள்?”இன்னொறு புறம் மிங்கி இதனை சரி செய்வாள் என எண்ணினால் ரிங்கி.

           இருவருமே ஒருவரையொருவர் நாடி இருந்ததால் கூடு சரி செய்யப்படாமலேயே இருந்தது.நேரம் ஆக ஆக கூட்டிற்குள் பனி மெல்ல மெல்ல உள்ளே செல்ல இருதியாக கூடு முழுவதும் பனியால் சூழ்ந்தது. குளிரில் நடுங்கி இரண்டும் மடிந்தது. இறப்பதற்க்காக பயந்த அந்த இரு பறவைகள் தங்களின் சோம்பேறி தனத்தை கைவிட்டு கூட்டை சரி செய்ய முயலவில்லை.