செவ்வாய், 10 அக்டோபர், 2017

எலக்ட்ரான்கள்

எவ்வளவு
தொலைவில்
இருந்தாலும்,,,
காதல்
என்னவோ
கருவை
நோக்கியே.....

# எலக்ட்ரான்கள் #

----மு. நித்யா.

சாதி

வரலாறு
கடந்து....
சந்ததிகள்
கடந்து...
விஞ்ஞான
வளர்ச்சிகள்
கடந்து....
இன்றும்
மாறாமல்
இருப்பது
ஒன்று
மட்டுமே......

# சாதி #

----மு. நித்யா.

சகோதரன்

ஏனோ
தெரியவில்லை,,,
இந்த
பிரபஞ்சத்தையே
வெற்றி
கொண்டது
போல
எனக்குள்
ஒரு
ஆனந்தம்
உன்னுடன்
நடக்கையில்....

# சகோதரன் #

----மு. நித்யா.

குரு

நீ
கண்கலங்க
வைக்க
வேண்டும்....
அவரை
வேதனைபடுத்தி
அல்ல...
உன்
வெற்றி
மாலைகளால்.....

# குரு #

மு. நித்யா.

தாயின் கைகள்

உன்
கைகளால்
உண்ணும்
போது
தான்
உணர்ந்தேன்,,,
அமிர்தத்தின்
சுவை
என்னவென்றே......

# தாயின் கைகளால் #

----மு. நித்யா.