சுகமான சுமையாய்
மார்பில் சுமந்து வளர்த்தவர்!
தொலைநோக்கு
சிந்தனைக்கு வித்திட்டவர்!
மிரட்டலில் பயந்து
பணிய வைத்தவர்!
அன்பில் நனைய வைத்தவர்!
தைரியத்தை ஊட்டி
வளர்த்தவர்!
தோள் கொடுத்து வளர்த்த தோழன்!
“உன்னால் முடியும்”
என்னும் வார்த்தையை
அறிமுகப்படுத்தியவர்!
என்றும் உறுதுனையாக இருப்பவர்;
என்னை நினைத்து
என்றும் பெறுமைபடுபவர்!
நான் செய்யும் தவறை சுட்டி காட்டுபவர்!
என் மேல் எனக்கு
இல்லாத நம்பிக்கை
அவருக்கு
என்றும் இருக்கும்!
அவர் யாராக இருக்க
முடியும் என் “தந்தை”யை தவிர?