🌺உலக அறிஞர் வாழ்வில் வள்ளுவம்🌺
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர்; 94 ஆண்டுக் காலம் வாழ்ந்தவர்.
அவர் 'காய்கறி உணவு முறையே சிறந்தது' என்னும் கொள்கையினை கடைப்பிடித்து வந்தவர்.
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும்”
என்னும் குறட்பாவின் கருத்தினை அவர் அடிக்கடி எடுத்துரைப்பதுண்டு.
1948-ல் 'டைம்ஸ் ஆப் லண்டன்' என்னும் பத்திரிகை ஒரு கருத்துப் படத்தினை வெளியிட்டது. அதில் பெர்னார்ட் ஷா ஒரு நாற்காலியில் அமர்ந்து இருப்பார். அவருடைய காலடியில் ஆடு, மாடு, மான், பன்றி, புறா போன்ற விலங்குகளும் பறவைகளும் நன்றிஉணர்வோடு அவரைப் பார்த்த வண்ணம் படுத்துக் கொண்டும் நின்று கொண்டும் இருக்கும்.
அவரைச் சுற்றிலும் சிங்கம், புலி, கரடி போன்ற கொடிய விலங்குகள் அமைதியாக நின்று கொண்டு அவரை ஆர்வத்தோடு நோக்கிய வண்ணம் இருக்கும்.
இந்தக் கருத்துப் படம் வள்ளுவருடைய 'கொல்லான் புலாலை மறுத்தானை' என்னும் குறட்பாவின் கருத்தினைப் புலப்படுத்துவதற்காக வரையப்பட்டது.
பொருள் பொதிந்த இந்தக் கருத்துப் படத்தினை டில்லியில் இருந்து வெளிவரும் 'ஷங்கர்ஸ் வீக்லி' 1949-ல் அப்படியே வெளியிட்டு, படத்தின் கீழே மேலே காட்டிய திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தது.
'புலால் உணவு உண்பதையே தம் வாழ்க்கைப் போக்காகக் கொண்டுள்ள மேற்கத்திய மக்கள் இடையே புலால் உண்ணாமையே சிறந்த வாழ்க்கை நெறி என்பதனை உணர்த்துவதற்காகப் பெர்னார்ட் ஷா இந்தத் திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்கி வந்தார்' என்பதனை உணர்த்தவே இந்தக் கருத்துப் படம் வெளியானது.
💐வான்புகழ் வள்ளுவம்💐