அக்ரம்
ஒரு பெரிய அரண்மனையில் பணியாளராக பணிபுரிகிறார்.அவர் வேறு வேலைகளையும் அந்த வீட்டில் செய்வார்.அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது.ஒவ்வொரு முறையும் வீட்டில் எதையாவது திருடி சாப்பிடுவார்.ஒரு நாள் அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தனர்அக்ரம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.அப்பொழுது அவர் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்தார்.பிறகு அதிலிருந்த பழச்சாற்றையும்,இனிப்புகளையும் சாப்பிட்டார்.பிறகு இரண்டு ஆரஞ்சு பழங்களையும் சாப்பிட்டார்.
உடனடியாக யாரோ வீட்டின் மணியை அடித்தனர்.பயந்துவிட்டார் அக்ரம்.அவர் ``வீட்டின் உரிமையாளர் வந்துவிட்டாரோ?இந்த ஆரஞ்சுபழத் தொல்லிகளை நான் என்ன செய்வேன்?’’இதனை மறைத்து வைத்தாலும் அந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தாய் என்ற கேள்வி எழும்.இதனை இங்கேயே வைத்தாலும் பிடிபட்டு விடவேன்’’என்று எண்ணினார்.ஆகையால் அந்த ஆரஞ்சு பழத்தொல்லிகளையும் சாப்பிட்டுவிட்டு கதவைத்திறந்தார். ஆனால் வந்திருந்தது தபால்காரர்.அக்கனம் அக்ரம் யோசித்தார்``ஒரு திருடன் தான் நாம் என்று பிடி படுவோம் என்று பயந்துகொண்டே இருப்பான் நான் இனி திருட மாட்டேன்’’ என்றார்.
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்