வெள்ளி, 2 ஜூன், 2017

ட்ரீம் கம்ஸ் ட்ரூ


Image result for கனவுகள் மெய்படும்
        
ஏழை பிக்கு பான்சிலால்  கடைக்கு சென்றார்.பான்சிலால் பிக்குவிடம்``ஏன் இங்கு இப்படி நிற்கிறாய்’’என்று கேட்டார்.நேற்று எனக்கு ஒரு கனவு வந்தது. ``அதனால் என்ன இப்பொழுது?’’என்றார்.``நான் நினைத்தேன் எனக்கு இங்கு ஒரு தங்கம் கிடைக்கும் என்று’’மறுமொழி கூறினான்.

            பான்சிலால் சிரித்துக்கொண்டே``அட முட்டாளே கனவுகள் எல்லாம் பழிக்காது.அப்படி கனவுகள் பழிக்குமானால் என் கனவைப்பற்றி உனக்கு சொல்கிறேன்.எனது கனவில் உன் வீட்டு தோட்டத்தில் புதையல் இருந்த மாதிரி தெரிந்தது.’’பிக்கு பின் தன் வீட்டிற்கு ஓடிச் சென்றான்.வழியில் ``சில நேரங்களில் கனவு நினைவாகலாம்’’என்று நினைத்தான்.உடனடியாக அவனது கால் ஓடு பானையை தட்டியது.அந்த பானை முழுக்க தங்க காசுகள் நிறைந்திருந்தது.பிக்கு சந்தோசமாக``என் கனவை பழிக்க செய்த பான்சி லாலிற்கு நன்றி இனி நான் ஏழை கிடையாது என்றார்.    
                            தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

ரக்மான்ஸ் கோல்ட்

                                                 
ஒரு நாள் ரக்மான் தனது வீட்டிக்கு வெளியே அமர்ந்து சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டிருந்தான்.சில நொடிகளில் ஏதோ மின்னிக்கொண்டிருந்ததை பார்த்தான்.உடனே`` அது ஒரு அழகான தங்கத்தாலான வீடு!’’.அவன் அந்த வீட்டை நோக்கி ஓடினான்.அங்கு சென்றவுடன் அப்படி ஒன்றும் அவன் கண்ணில் தென்படவில்லை.அங்கு இருந்தது ஒரு பழைய வீடுதான்.சூரிய வெளிச்சம் அதற்கு தனி பொழிவை கொடுத்தது.ஆகையால் மலைக்கு திரும்பி செல்ல முடிவு செய்தான்.



            திரும்பி பார்க்கையில் ஒரு மலை உச்சியில் தகதக வென மின்னியது.ரக்மான் சிரித்துக்கொண்டே``! அது தங்கமல்ல இப்பொழுது ஒன்றை புரிந்துகொண்டேன் மினுவதெல்லாம் பொன்னல்ல’’.    

                                             தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

திங்க் பிப்போர் யூ ஸ்பீக்

                                        
ஒரு நாள் ஏழை  மரவெட்டி ஒருவரின் வீட்டிற்கு தேவதை வந்தாள் அவள் அவர்களிடம்``நீங்கள் வெகு நாட்கள் கடினமாக உழைத்துவிட்டீர்கள் முன்று வரங்கள் என்னிடம் கேளுங்கள்’’என்றாள்.கணவன் மனைவி இருவரும் சிந்திக்கத்தொடங்கினர்.அவரது மனைவி``நாம் நிறைய பணம் கேட்போம்’’ அல்ல பிறகு அந்த திருடர்கள் நம் பணத்தை கொள்ளை அடித்துவிடுவார்கள் என்றனர்.ஆகையால் நாங்கள் சிந்தித்து கூறுகிறோம் என்று கூறிவிட்டனர்.



            அன்று அடுப்படியில் அமர்ந்து என்ன கேட்கலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தனர்.மனைவி சொன்னாள்``நமக்கு உண்ண கோழி கிடைத்தால் நன்றாக இருக்கும் தட்டில் தானாக கோழி வரவேண்டும் என்று யோசனை கூறினாள்.மரவெட்டி நீ ஒரு வரத்தை வீணாக்கிவிட்டாய் என்றார்.இப்பொழுது அவர் ``போ அவளது மூக்கில் ஒட்டிக்கொள் என்றார்.பிறகு அந்த கோழி மூக்கில் தொத்திய பின் அந்த ஜோடி பயந்துவிட்டனர்.உடனடியாக நாங்கள் இந்த சிக்கலில் இருந்து விடுபட வேண்டும் என்று கூறினர்.பின்பு மூன்று வரங்களும் தீர்ந்தன.
தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

தி க்ரோஸ் வான்டிடி

Image result for காகம்

காகம் ஒன்று தனது நிறத்தை பற்றி கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது. எப்பொழுதுமே ``நான் கருப்பாக உள்ளேன்,பார்க்க அசிங்கமாக உள்ளேன்!’’ என்று புலம்பிக்கொண்டே இருந்தது.

            ஒரு நாள் மயில்கள் காகம் தங்கி இருக்கும் மரத்தடியில் வந்து உலாவிக்கொண்டு இருந்தன.பின்பு அவை சென்றிருந்த சில இடங்களில் இறகுகள் கிடந்தன.அதனை பார்த்து மீண்டும் மனம் வருந்தியது காகம்.அந்த இறகுகளை எடுத்துக்கொண்டு தனது நண்பனான குரங்கிடம் சென்றது.அதனின் உதவியுடன் தனது உடம்பில் சிறகுகளை பொருத்திக்கொண்டது.பின்னர் அந்த மயில் கூட்டத்திற்கு சென்று இப்பொழுது நானும் தங்களைப்போன்று தான் என்னையும் தங்களின் கூட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ளுங்கள் என கூறியது. ஆனால் அந்த மயில் கூட்டம் கோபம் கொண்டு அதனை விரட்டி விட்டது. காகத்தின் கூட்டமும் ``நீ என்னவாவாக இருக்கிறாய் என்பதில் பெருமைபடவில்லை’’ஆகையால் அந்த காகம் தனிமையிலேயே வாழ்ந்தது.
                                தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

தி மாஜிகல் பாட்





Image result for பேராசை
ஒரு நாள் ஒரு மனிதனும் அவனுடைய மனைவியும் தோட்டத்தில் விதைகளை விதைக்க தோன்டிக்கொண்டிருந்தபோது,ஒரு பானை தட்டுப்பட்டது.அவர்கள் அதனை வெளியே எடுத்தனர்.உள்ளே பார்க்கும்போது கோடாரி பானைக்குள் விழுந்தது.அதனை வெளியே எடுக்கும்போது கையோடு இன்னொன்று வந்தது.அதிலிருந்து `` அப்படியானால் ஒன்று போட்டால் இரண்டாக கிடைக்கிறது இதில்’’ என்று அறிந்தனர்.

            பின்பு அதிலிருந்து நிறைய பணம் போட்டு பணத்தை ஈட்டனர். ஒரு நாள் அவன் மனைவி பணத்தை எடுக்கும்போது உள்ளே விழுந்துவிட்டாள்.அவளை வெளியே எடுக்கும்போது இன்னொரு மனைவி வந்தாள்.அவளை வெளியே எடுக்கும்போது இன்னொருவள் வந்தாள். மொத்தம் பத்து மனைவி இறுதியில் வந்தாள்.ஆகையாள் பேராசை என்றுமே பெரு நஷ்டம் ஏற்படுத்தும்.         
        தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்