மாணவப்பருவத்தில் இருக்கும்
நாம் அனைவரும் ஏதேனும் ஒரு செயலில் வெற்றி பெற நினைத்தால் அதற்கு தகுந்த பறிற்சி மட்டும்
எடுத்தால் போதாது. அதற்கு முறையான பயிற்சியுடன் கூடிய முயற்சியும் எடுக்க வேண்டும்.
நீங்கள் ஒரு பாடத்தை படிக்கிறீர்கள் என்றால் அதில் பயிற்சியுடன் முயற்சி எடுக்க வேண்டும்.
நீங்கள் ஒரு விளையாட்டு வீராங்கனையாக இருந்தால் அதில் வெற்றிக் கோப்பையை வெல்ல பயிற்சியுடன்
முயற்சி எடுக்க வேண்டும். நாம் அனைவரும் கற்றது
கையளவு கல்லாதது உலக அளவு. ஒரு வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியை பார்த்தீர்கள்
என்றால் அவள் பயிற்சியுடன் கூடிய முயற்சி எடுத்திருப்பாள். காந்தியடிகளின் முயற்சிக்கு
பின்பு தான் உலகில் ”அகிம்சை கிடைத்தது”,
அன்னை தெரசாவின் முயற்சிக்கு பின்பு தான் உலகில் “அன்பு நிலவியது”, காமராசரின் முயற்சிக்கு பின்பு தான் உலகில் உள்ள ஏழை
மக்களுக்கு “கல்வி கிடைத்தது”. ஆகையால்
மாணவர்களே நாம் செய்கின்ற அனைத்து செயலிலும் பயிற்சிக்கு அதிகமான முயற்சியை எடுத்து
வாழ்வில் வெற்றி பெற வேண்டும்..
புதன், 15 மார்ச், 2017
ஞாயிறு, 12 மார்ச், 2017
அரிய செய்திகள்
பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. * நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும். * கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம். * மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன. * ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள். * மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார். * பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும். * உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான். * ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம். * பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது. * பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். * நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை. * நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும். * யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம். * ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும். * தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன். * முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு. * தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.
பென்ஸீன் மூலக்கூறு
பொதுவாக பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற ஒரு பழமொழி இருக்கிறது . இதைப் பற்றி நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் . அப்படிப்பட்ட பாம்புகள் நம் கனவில் வந்தால் நம் எல்லோருக்கும் அன்றைய உறக்கம் ஒரு கனவாகத்தான் மாறிப்போகும் .ஆனால் ஒரு அறிவியல் அறிக்கை சொல்கிறது பாம்பு கனவில் வந்தால் மிகவும் நல்லது என்று நம்புவீர்களா !? உண்மைதான் நண்பர்களே இன்று உலகத்தில் உயிர் காக்கும் மருந்துகளில் முன்னோடியாக விளங்கும் பென்ஸீன் மூலக்கூறு கண்டறிய அலெக்சாண்டர் ஃப்ளெமிங் நீண்ட நாட்களாக முயன்றும் அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வந்தார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பாம்பு, புதிய வடிவத்தை உணர்த்திவிட்டுச் சென்றது. அதற்குப் பின்னரே அவர் பென்சிலினுக்கான மூலக்கூறு (பென்ஸீன் கூட்டமைப்பு) வடிவத்தை கண்டு பிடித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .
உலகத்தின் முதல் பெண்கள்
பல் மருத்துவர்
– அமாலிய அசூ
பொறியாளர் – அமலின்
ராபட்ஸ் ஜோன்ஸ்
மருத்துவர் – எலிசபெத்
பெலக்வெல்
காவலர் – சோபியர்
ஸ்டான்லி
கடல் பொறியாளர்
– சோனாலி
விமானி – அமெரிய
இயர்ஹர்டு
குடியரசுத் தலைவர்
– பீரபெல் மார்டினைஸ்
ஆளுனர் – பியுட்
ரோரிகான்
விண்வெளி பயணி
– கல்பனா சாவ்லா
சமூக சேவகி – அன்னை
தெரசா
விஞ்ஞானி – மேரி
கியுரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)