ஞாயிறு, 12 மார்ச், 2017

பென்ஸீன் மூலக்கூறு



Image result for penicillin


பொதுவாக பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற ஒரு பழமொழி இருக்கிறது . இதைப் பற்றி நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் . அப்படிப்பட்ட பாம்புகள் நம் கனவில் வந்தால் நம் எல்லோருக்கும் அன்றைய உறக்கம் ஒரு கனவாகத்தான் மாறிப்போகும் .ஆனால் ஒரு அறிவியல் அறிக்கை சொல்கிறது பாம்பு கனவில் வந்தால் மிகவும் நல்லது என்று நம்புவீர்களா !? உண்மைதான் நண்பர்களே இன்று உலகத்தில் உயிர் காக்கும் மருந்துகளில் முன்னோடியாக விளங்கும் பென்ஸீன் மூலக்கூறு கண்டறிய அலெக்சாண்டர் ஃப்ளெமிங் நீண்ட நாட்களாக முயன்றும் அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வந்தார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பாம்பு, புதிய வடிவத்தை உணர்த்திவிட்டுச் சென்றது. அதற்குப் பின்னரே அவர் பென்சிலினுக்கான மூலக்கூறு (பென்ஸீன் கூட்டமைப்பு) வடிவத்தை கண்டு பிடித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

வாழ்க்கை


                              வாழ்க்கை

                                           

                        தானாக உயரும் வயது !!
                      விடாமல் துரத்தும் காலம் !!
                        தடுக்க முடியாத நேரம் !!
                      கடக்கத் துடிக்கும் இளமை !!
                      காலைத் தடுக்கும் சமூகம் !!
                       தொட வேண்டிய இலக்கு !!
                இத்தனை போராட்டம் தான் வாழ்க்கை !!
                                             

உலகத்தின் முதல் பெண்கள்

                   உலகத்தின் முதல் பெண்கள்

                               

பல் மருத்துவர் – அமாலிய அசூ
பொறியாளர் – அமலின் ராபட்ஸ் ஜோன்ஸ்
மருத்துவர் – எலிசபெத் பெலக்வெல்
காவலர் – சோபியர் ஸ்டான்லி
கடல் பொறியாளர் – சோனாலி
விமானி – அமெரிய இயர்ஹர்டு
குடியரசுத் தலைவர் – பீரபெல் மார்டினைஸ்
ஆளுனர் – பியுட் ரோரிகான்
விண்வெளி பயணி – கல்பனா சாவ்லா
சமூக சேவகி – அன்னை தெரசா
விஞ்ஞானி – மேரி கியுரி 

வெள்ளி, 10 மார்ச், 2017

சில அரிய சுவையான தகவல்கள்...



நீங்கள் இதுவரை அறிந்திராத சில சுவையான உண்மைத் தகவல்கள்

 1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்,லட்டு கிடையாது.

 2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

3. இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்” முதலில் மொழிபெயர்க்கப்பட்டது

. 4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்

 5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

 6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

 7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

 8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

 9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

 10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது. விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.

 11)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

 12)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம். 13) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

 14) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

 15) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்

. 16)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

 17) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்

வியப்பான பொது அறிவு



அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய வியப்பொபான பொது அறிவு தகவல்கள்...

ஒட்டகசிவிங்கியின் நாக்கு கரு நீல நிறத்தில் இருக்கும்.

புலிகளின் ரோமங்களில் இருக்கும் கோடுகள் போல அதன் தோலிலும் கோடுகள் இருக்கும். ஒரு புலிமீது இருக்கும் கோடுகள் போல வேறு எந்த புலிக்கும் இருக்காது. ஒவ்வொரு புலிக்கும் வெவ்வேறு அமைப்பில் தான் கோடுகள் இருக்கும்.

யானைகளால் 3 மைல்கள் தொலைவில் இருக்கும் தண்ணீரை நுகர முடியும்.

ஆமைகளின் பாலினத்தை அது எழுப்பும் ஒலியை வைத்து வித்தியாசப்படுத்தலாம்.