வெள்ளி, 10 மார்ச், 2017

சில அரிய சுவையான தகவல்கள்...



நீங்கள் இதுவரை அறிந்திராத சில சுவையான உண்மைத் தகவல்கள்

 1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்,லட்டு கிடையாது.

 2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

3. இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்” முதலில் மொழிபெயர்க்கப்பட்டது

. 4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்

 5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

 6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

 7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

 8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

 9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

 10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது. விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.

 11)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

 12)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம். 13) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

 14) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

 15) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்

. 16)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

 17) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்

வியப்பான பொது அறிவு



அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய வியப்பொபான பொது அறிவு தகவல்கள்...

ஒட்டகசிவிங்கியின் நாக்கு கரு நீல நிறத்தில் இருக்கும்.

புலிகளின் ரோமங்களில் இருக்கும் கோடுகள் போல அதன் தோலிலும் கோடுகள் இருக்கும். ஒரு புலிமீது இருக்கும் கோடுகள் போல வேறு எந்த புலிக்கும் இருக்காது. ஒவ்வொரு புலிக்கும் வெவ்வேறு அமைப்பில் தான் கோடுகள் இருக்கும்.

யானைகளால் 3 மைல்கள் தொலைவில் இருக்கும் தண்ணீரை நுகர முடியும்.

ஆமைகளின் பாலினத்தை அது எழுப்பும் ஒலியை வைத்து வித்தியாசப்படுத்தலாம். 

ஞாயிறு, 5 மார்ச், 2017

500 வது பதிவு!


தமிழக அரசு மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இணைந்து இணையத்தில் தமிழை வளா்க்கும் நோக்குடன் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், அவற்றுக்குட்பட்ட இணைவுபெற்ற கல்லூரிகளிலும் கணித்தமிழ்ப் பேரவைகளை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தியது.

                        கே.எஸ்.ஆா் மகளிர் கலை  அறிவியல் கல்லூரியில், தாளாளா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி எம்ஜேஎப் அவா்களின் அனுமதியுடன், செயலா் திரு. ஆா் சீனிவாசன் மற்றும் செயல்இயக்குநா் திருமதி கவிதா சீனிவாசன் அவா்களின் வாழ்த்துக்களுடன், முதல்வா் முதல்வா் மா.கார்த்திகேயன் அவா்கள் நெறிகாட்டுதலில் கணித்தமிழ்ப் பேரவை 15.12.2015 இனிதே தொடங்கப்பட்டது. தமிழ்இணையக் கல்விக்கழகத்திலிருந்து திரு.தமிழ்ப்பரிதி ஐயா அவர்கள் கலந்துகொண்டு எம் கல்லூரி கணித்தமிழ்ப்பேரவைக்கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
 
கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக,  முனைவா் இரா.குணசீலன் அவர்கள் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

மாணவிகளின் ஒத்துழைப்புடன்,
1. கணினியிலும், தமிழிலும் ஆா்வமிக்க 

100 மாணவா்களைத் தேர்ந்தெடுத்தல்.


2. ஒருங்குறி முறையிலான தமிழ்த்தட்டச்சு முறையைக் கற்பித்தல்.


3. தமிழ்த்தட்டச்சு தெரியாதவா்களாக இருந்தால் அவா்களுக்கு தமிழ் 99 

முறையை பயிற்றுவித்தல்.


4. தமிழ் வலைப்பதிவில் எழுதும் முறையை அறிமுகப்படுத்துதல்.


5. தமிழ்விக்கிப்பீயா குறித்த அறிமுகம், அதன் பிற திட்டங்கள் குறித்த 

அறிமுகம், அதில் பங்களிப்பாளராகும் வழிமுறைகளைத் தெரிவித்தல்


6. தமிழ்க்குறுஞ்செயலிகள் குறித்த அறிமுகத்துடன் அவற்றை 

உருவாக்குவதற்கான பயிற்சிகளை வழங்குதல்


7. தமிழ் மென்பொருள்களை உருவாக்குதல்.


8. இணையத்தில் மின்னூல் உருவாக்குதல்


9. இணையத்தில் உள்ள நூலகங்களைப் பயன்படுத்த துணைநிற்றல்


10. இலவச மென்பொருள்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி 

அவற்றைப் பயன்படுத்த வழிவகுத்தல் 


என்னும் நோக்கங்களுடன் எம் கல்லூரியின்  கணித்தமிழ்ப் பேரவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எமது பணியைப் பாராட்டி தமிழ்இணையக் கல்விகழகம் ஆதார நிதியாக ரூ 25000 வழங்கியுள்ளது.
இன்று எம் கல்லூரியில் 600 மாணவிகள் தமிழ் ஒருங்குறி வழியிலான தமிழ்த்தட்டச்சுப் பயிற்சிபெற்றுள்ளனர்.
கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல்கல்லூரியின் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவருகிறார்கள்.
எம் கல்லூரி மாணவிகள் கல்வி, அறிவியல், வணிகம், ஆன்மீகம், உளவியல், இலக்கியம், மொழிபெயர்ப்பு, படைப்பாக்கம் என எல்லாத்துறைகளிலும் எழுதிவருகிறார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து பார்வையாளர்களையும், மறுமொழிகளையும் பெற்றுள்ளனர். தமிழ்மணம் திரட்டியில தரவரிசையில் எம் கல்லூரி வலைப்பதிவு 122 வது இடத்தில் உள்ளது.
இன்று 500 பதிவு என்னும் இலக்கை அடைந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இந்த வலைப்பதிவில் எழுதிய ஒவ்வொரு மாணவிகளையும் வாழ்த்துகிறேன். குறிப்பாக வணிகவியல் துறை மாணவிகள் செ.வைசாலி, மற்றும் அ.கோகிலா, மற்றும் ஆங்கிலத்துறை மாணவி ஜெ.ஜனனி, மூன்றாமாண்டு கணிதவியல் மாணவி கு.நந்தினி ஆகியோருக்கு எனது சிறப்பான பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொ்ளகிறேன். அவர்களை ஊக்குவித்த எம் முதல்வர் முனைவா் மா.கார்த்திகேயன் அவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், வலையுலக உறவுகளுகம் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

சனி, 4 மார்ச், 2017

தி ப்பாக்’ஸ் ரிவென்ஞ்




பசியுடன் இருக்கும் நரி ஒன்று கிராமத்துக்குள் நுழைந்தது.அது நன்கு விழைந்து இருந்த பூசனிக்காய் அருகில் சென்றது.சுற்றி முற்றி பார்த்ததில் ஒருவரும் அதன் கண்களுக்கு தென்படவில்லை.ஆகையால் அதில் ஒரு பூசனிக்காயை ருசித்தது.சாப்பிட்டு முடித்து நடந்து காட்டுக்குள் செல்லும் அந்த கனத்தில் அந்த காட்டு விவசாயி ஓடி வந்து`எவ்வளவு தைரியம் இருந்தால் எனது அருமையான பூசனிக்காய்களை திருடி இருப்பாய்?என்றான்.அதற்கு நரி `நான் மிகவும் பசியாக இருந்தேன் அதனால் ஒன்றை மட்டும் ருசித்தேன்என்று கூறியது.அதனால் கோபத்தில் இருந்த அந்த விவசாயி அதன் காலில் நெருப்பை கட்டி விட்டான்.நரியும் கோபமடைந்து அந்த காட்டை கொழுத்திச் சென்றது.                              தரவு 
                                      டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்

கௌதம புத்தா

                                                             

புத்தர் உலகப் புகழ்பெற்ற ஒரு மத போதகர்.அவரின் மதம் ``பௌத்தம்’’. அனைத்து ஆசைகளையும் துறந்து பௌத்தம் என்ற சமயத்தை கண்டார்.இந்த பௌத்த சமயத்தை உலகளவில் பலர் பின்பற்றுகின்றனர்.
            புத்தர் அரச குல பரம்பரையில் பிறந்தவர்.ஜோதிடர் ஒருவர் மன்னரிடம்``தங்கள் மகன் அரசாட்சி புரியாமல் அனைத்தையும் துறந்து போவார்’’ என்று கூறியதால்,மன்னர் புத்தரை வெளிஉலகிற்கே காட்டாமல் வளர்த்தார்.ஆகையால் அவர் இளம் வயதை அரண்மனையில் மிக செழிப்பாக கழித்தார்.தனது 16ஆம் வயதில் அழகான யசோதையை மனந்தார்.வளர வளர வெளியுலகை காணும் ஆவல் இவருக்குள் ஏற்பட்டது.ஆகையால் ஒரு இரவில் அரண்மனையை விட்டு வெளியேரினார்.அப்போது நிகழ்ந்த 3 நிகழ்வுகள் இவர் வாழ்வை புரட்டி போட்டது.முதலில் முதுமையால் தவிக்கும் ஒரு மனிதரை கண்டார்.இரண்டாவதாக முதுமை அடைந்த ஒரு மனிதர் நோயால் பாதிக்கப்பட்டு தவித்ததைக் கண்டார்.இறுதியாக இறந்து போன பிணம் ஒன்றைக் கண்டார்.இந்த அனைத்து நிகழ்ச்சியும் இவரை அதிர்ச்சியில் ஆழ்த்தின.பின்பு வாழ்வின் `உண்மையைதேடத் தொடங்கினார். அதற்காக பல நாட்கள் தன்னை உணவு உட்கொள்ளாமல் வருத்திக்கொண்டார்.பின்பு இது சரியான வழியில்லை என்று தீர்மானித்து இறுதியாக ``போத்கையா’’ என்ற இடத்தில்``போதி’’மரத்தடியில் அமர்ந்து சிந்திக்க ஆரம்பித்தார்.பின்னர் ஒரு அசரிதி அவர் காதில் விழுந்தது.அது ``ஆசையே அழிவிற்கு காரணம்’’என்றது.அன்றுமுதல் ஒரு பிச்சைபாத்திரத்தை மட்டுமே தனக்கு சொந்தமாக கொண்டு,மக்களுக்கு ``சரியான பார்வை’’
``சரியான சிந்தணை’’
``சரியான பேச்சு’’
``சரியான செயல்கள்’’
``சரியான வாழ்க்கை’’
``சரியான முயற்சி ’’
``சரியான மனப்பான்மை’’ மற்றும்
``சரியான தியானம்’’ என மக்களை நல்வழியில் செலுத்திய அவர்483BC அன்று தனது80ஆவது வயதில் இயற்கை எய்தினார்.