திங்கள், 20 பிப்ரவரி, 2017

உலக சமூக நீதி தினம்



ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 20ஆம் தேதி உலக சமூக நீதி தினம் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி அதிகமாகிக் கொண்டே வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் கண்ணியமான வேலைகளை அனைவருக்கும் வழங்கி மனித வளத்தை மேம்படுத்த வேண்டும்.

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நியாயங்களை கேட்டு அவர்களுக்கு சமூக நீதி கிடைத்திட வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் 2007ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில் நீதி வாழ்கிறதா என்று நீங்கள் தான் கூற வேண்டும்..?

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

தாலி கட்டுவது ஏன்..?


தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சு நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதையும், இரண்டாவது முடிச்சு குலப்பெருமையை நீ பாதுகாப்பாய் என்பதையும், மூன்றாவது முடிச்சு குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

வரலாற்றில் இன்று...





சத்ரபதி சிவாஜி

⚔ வீரமிக்க மாமன்னன் சத்ரபதி சிவாஜி 1627ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள சிவநேரி கோட்டை என்ற இடத்தில் பிறந்தார்.

⚔ தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என கருதப்படும் இவருடைய ஆட்சிக் காலத்தில், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார்.

⚔ வீரத்தையும், போர்த்திறமையையும், கலையுணர்வையும் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் சத்ரபதி சிவாஜி 53வது வயதில் (1680) மறைந்தார்.

உ.வே.சாமிநாத ஐயர்

✍ தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் 1855ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி கும்பகோணத்துக்கு அருகே உத்தமதானபுரம் என்ற சிற்று}ரில் பிறந்தார்.

✍ பழந்தமிழ் ஏடுகள் பழையனவாக இருந்ததால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்று பல இடர்களை எதிர்கொண்டு, அழிந்து மறைந்து போகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித் தேடி அச்சிட்டு, பதிப்பித்தார்.

✍ இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தார். அவற்றை அழிவிலிருந்து காத்ததோடு அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் தமிழின் பெருமையை உணர்த்தியுள்ளார்.

✍ தமிழ் இலக்கியத்துக்காக இறுதிவரை பணியாற்றிய இவர் 87-ஆம் வயதில் (1942) மறைந்தார்.


கோபர்நிகஸ்

👉 உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிகோலஸ் கோபர்நிகஸ் 1473ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி போலந்து நாட்டின் தோர்ன் நகரில் பிறந்தார். இவர் இயற்பெயர் மைகொலாஜ் கோபர்நிக். பல்கலைக்கழகத்தில் படித்தபோது, நிகோலஸ் கோபர்நிகஸ் என்று மாற்றிக்கொண்டார்.

👉 எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சிகள் நடைபெற்றன. வானியல் குறித்து அதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து, சு+ரிய மையக் கோட்பாட்டை வகுத்தார். கோள்களின் பின்னோக்கிய நகர்வு, அவற்றின் ஒளி வேறுபாடுகள் ஆகியவற்றையும் விளக்கினார். விண்மீன்கள் அமைந்துள்ள இடங்களை வரையறுத்துக் கூறினார்.

👉 இவரது காலத்துக்குப் பிறகே இவரது கோட்பாடுகளை கலிலியோ உள்ளிட்ட பிரபல வானியலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆன் தி ரெவல்யு+ஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ் என்ற நு}லில் தனது ஆய்வுகள் குறித்து எழுதியுள்ளார். இதில் பு+மி தனது அச்சில் சுழல்கிறது என்பதையும் பு+மியை சந்திரன் சுற்றி வருகிறது என்றும் துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்.

👉 வானியல் ஆய்வாளராக மட்டுமல்லாமல், சட்ட நிபுணர், மருத்துவர், பழங்கலை அறிஞர், மதகுரு, ஆளுநர், அரசுத் தூதர் என பல துறைகளில் சிறந்து விளங்கிய நிகோலஸ் கோபர்நிகஸ் 70-வது வயதில் (1543) மறைந்தார்.


உருவாக்கியவர்கள்


உருவாக்கியவர்கள்:

  1. இந்திய தேசிய ராணுவம் – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
  2. அரவிந்தர் ஆசிரமம் – அரவிந்த கோஷ்
  3. ராமகிருஸ்ண இயக்கம் - சுவாமி விவேகானந்தர்
  4. சர்வதேச இயக்கம் – ஆச்சார்ய வினபா பவே
  5. சாரணர் இயக்கம் – ராபர்ட் பேடன் பவுல்
  6. ஹோம் ரூல் இயக்கம் – அன்னி பெசன்ட்
  7. அரிமா சங்கம் – மெற்வின் ஜோன்ஸ்
  8. செஞ்சிலுவைச் சங்கம் – ஹென்றி டூனான்ட்
  9. பிரம்ம சமாஜம் – ராஜாராம் மோகன் ராய்

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

உணர்வுகள்...!!!


Image result for smiley face

                      
          அனைவருக்கும் வணக்கம். என் பெயர் சுஹாசினி மகேந்திரன். நான் வலைப்பதிவில் எழுதும் முதல் கட்டுரை இது தான். உணர்வுகள் என்ற தலைப்பு சற்று வித்தியாசமானது தான்.
                        உணர்வுகள் உள்ளவர்கள் மனிதர்கள், அந்த உணர்வுகளை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள் மாமனிதர்கள். எல்லா உணர்வுகளையும் சரி சமமாக எடுத்துக் கொண்டால் பிரச்சனை என்பதே இல்லை.
                        இதற்கு ஒரு உதாரணம் கூற ஆசைப்படுகிறேன். ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த தருணம் அது. அவரைக் காணச் சென்ற சுவாமி விவேகானந்தர் தன் குருவிடம் சில கேள்விகளைக் கேட்கிறார்.
                        அதில் முதலாவது. மக்கள், கடவுள் எனக்கு மட்டும் ஏன் துன்பத்தைத் தருகிறார்? என்று துன்பம் வரும் வேளையில் கவலை கொள்கிறார்களே அது ஏன்? என்று கேட்க, அப்போது ராமகிருஷ்ணர் சொல்கிறார், மக்கள் தனக்கு இன்பம் வரும் போது கடவுள் ஏன் எனக்கு மட்டும் இன்பம் தருகிறார் என்று வினவுவதில்லை. ஆனால் துன்பம் வரும் வேளையில் மட்டும் அக்கேள்வியை எழுப்புகிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் எந்த உணர்வையும் சரிசமமாக எடுத்துக் கொள்வதில்லை என்பதே.
             மேலும் அவர் கூறியதாவது, தங்கம் நெருப்பில் பட்டு உருகும் போது அது மிளிர ஆரம்பிக்கும். அது போலத் தான் மனிதனும் துன்பங்களை அடையும் போது தான் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான்.
             துன்பம் வரும் வேளையில் இதுவும் கடந்து போகும் என்று மனதில் கொள்வதே சிறந்தது.