புதன், 14 டிசம்பர், 2016

காலத்தின் அருமை


Image result for காலம்
  • தேர்வில் தவறிவிட்ட மாணவனுக்கு தெரியும் ஓர் ஆண்டின் அருமை..!
  • குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பெற்றெடுத்த தாய்க்க தெரியும் ஒரு மாதத்தின் அருமை..!
  • வார இதழ் ஆசிரியருக்கு தெரியும் ஒரு வாரத்தின் அருமை..!
  • காதலிக்காக காத்திருக்கும் காதலனுக்கு தெரியும் ஒரு மணிநேரத்தின் அருமை..!
  • இரயிலைத் தவற விட்ட பயணிக்குத் தெரியும் ஒரு நிமிடத்தின் அருமை..!
  • விபத்தில் நூலிலையில் தப்பித்தவற்கு தெரியும் ஒரு வினடியின் அருமை..!
 காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எனவே ஆண்டோ மாதமே வாரமே நொடியோ எல்லா நேரத்தையும் பொன் போல போற்றி வாழ்ந்தால் வாழ்கையில் வெற்றி நிச்சயம்..!

                                                                                                             ஐ.ரம்யா,
இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை.

பெண்ணின் சில நாட்கள்

எங்கள் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப்பேராசிரியர் கோ.தவமணி அவர்களால் எழுத்தப்பட்ட கவிதையை பகிர உள்ளேன்..

சனி, 10 டிசம்பர், 2016

தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம்..!!


Image result for anna university

தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கனமழை, முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவு மற்றும் பொது விடுமுறை காரணமாக, தள்ளிவைக்கப்பட்ட இளங்கலை, முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வரும் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகள் மற்றும் புதிய தேதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 9 டிசம்பர், 2016

அப்துல்கலாம் நினைவு கவிதை

Image result for a.p.j


அன்று என் பிறந்த நாள் 
      இன்றோ அப்துல்கலாம் இறந்த நாள்
அன்று நான் யோசித்தது என்னமோ
      இன்றோ அவர் கூறும் கனவுகள்
கவிதையின் இனிமையில்
     சுவைத்தது அவர் கதைகள்
காற்றின் சுவாசத்தில்
     மிதந்தது அவர் வார்த்தைகள்
வாழ்வின் எல்லையில்
     அவர் எடுத்த முடிவுகள்

2020-ல் வாழ்க இந்தியா என்று கூற
    அவர் மறைந்தார் கல்லறையில்.....

புதன், 7 டிசம்பர், 2016