வெள்ளி, 9 டிசம்பர், 2016

அப்துல்கலாம் நினைவு கவிதை

Image result for a.p.j


அன்று என் பிறந்த நாள் 
      இன்றோ அப்துல்கலாம் இறந்த நாள்
அன்று நான் யோசித்தது என்னமோ
      இன்றோ அவர் கூறும் கனவுகள்
கவிதையின் இனிமையில்
     சுவைத்தது அவர் கதைகள்
காற்றின் சுவாசத்தில்
     மிதந்தது அவர் வார்த்தைகள்
வாழ்வின் எல்லையில்
     அவர் எடுத்த முடிவுகள்

2020-ல் வாழ்க இந்தியா என்று கூற
    அவர் மறைந்தார் கல்லறையில்.....

சனி, 3 டிசம்பர், 2016

டாக்கடர்.கிராக்கி

                                                                டாக்கடர்.கிராக்கி
                         
 ஒரு நாள் தவளை ஒன்று தன் குலத்தை விட்டு அருகே காட்டுப்பகுதிக்கு உள்ளே உள்ள நதிக்கு இடம் மரியது.அந்த வனப்பகுதிக்குள் ஒரு வீட்டை அமைக்க சென்றது.அங்கு சென்ற பின் எந்த விலங்குகளையும் தவளை காணவில்லை.ஆனால், தவளைக்கு அனைவரையும் கண்டு அவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்று ஆசை.ஆதலால், பெரிய கரடின்மேல் ஏரி ``நண்பர்களே அனைவரும் வெளியே வாருங்க்கள் நான் உங்களை சந்தித்து நண்பனாக வேண்டும்.நான் அருகாமையில் இருக்கும் கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன்’’.இந்த தவளையின் குரல் கேட்டு அனைத்து விலங்குகளும் வந்தது.மான்,ஆமை,வாத்து,பட்டாம்பூச்சி, மற்றும் நரி அனைத்தும் வந்தது. ``முதலில் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.என் பெயர் டாக்டர்.கிராக்கி நான் அனைத்து விதமான நோய்களையும் தீர்ப்பதற்கான மருந்துகளையும் வைத்திருக்கிறேன் என்னை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம்’’ என்றது.இதனைக் கேட்ட நரி ``உன்னால் அனைத்து நோய்களையும் தீர்க்க முடியும் என்றால், உன்னுடைய ஊனமுற்றது போன்ற கால்களை ஏன் சரி செய்ய இயலவில்லை? நீ எப்படி அமர்ந்திருக்கிறாய் பார்’’என்று கோலி செய்தது.அதனைக் கேட்ட அனைத்து விலங்குகளும் சிரித்துக்கொண்டே வீடு திரும்பினர்.

                                                                  (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி.


வெள்ளி, 2 டிசம்பர், 2016

டூ யு நோ ஸ்விம்மிங் ?

                                                            டூ யு நோ ஸ்விம்மிங் ?

ஒரு முறை கஞ்சதனமான ஞானி ஒருவர் எப்பொழுதும் மக்களை ``உனக்கு இந்த  வேலையைகூட செய்ய இயலவில்லை ? உங்களுக்கேல்லாம்  சமயத்தைபற்றியும் வாழ்க்கை தத்துவத்தை பற்றி ஏதுவும் தெரியவில்லை ஆகையால் உங்கள் வாழ்க்கை அர்த்தமற்றது’’.என்று பழிப்பார்.ஒரு நாள் அவர் ஒரு வேலைக்காக ஆற்றை கடக்கவேண்டிய நிலை.அங்கு ஒரு சிறிய படகை கண்டார் அதனுள் ஏறி அமர்ந்தார்.அந்த படகின் உரிமையாளர் எனக்கு அதற்காக நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்றார்.`` ! நீ என்னிடம் பணம் கேட்கிறாயா? நான்,செல்லும் வழியில் உனக்கு நிறைய அறிவுச்செல்வத்தை தருகின்றேன்’’ என்றார்.
            ``உனக்கு துளசி தாஸ்ஸை தெரியும் இல்லை இராமாயண் பற்றி ஏதாவது தெரியுமா?.....என்றார்.அவர் அவனுக்கு பணம் தருவதை தவிர்க்க நிறைய செய்திகளை அவனிடம் ``உனக்கு தெரியுமா?’’ என்றே கேட்டுக்கொண்டு வந்தார்.இந்நிலையில் நடூ ஆற்றில் சுழல் ஒன்னு வந்தது. அந்த படகு உரிமையாளரால் படகை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை ஆகையால் அந்த ஞானியிடம்``உங்களுக்கு நீச்சல் தெரியுமா?’’ என்று கேட்டார்.அதற்கு அவர் ``எனக்கு தெரியாது’’ என்றார். இத்தனை விஷயங்கள் தெரிந்த உங்களுக்கு இந்த சிறு உயிர் காக்கும் கலை தெரியவில்லையே இப்போது நான் குதித்துவிடுவேன் தாங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?என்று கூறி குதித்தான்.அந்த ஞானி சுழலில் சிக்கி இறந்தார்.
                                                     
                                                            (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி