தன்னம்பிக்கை
அளவோடு பேசினால் பல
பிரச்சனைகளைத் தவிர்த்து விடலாம். பேச வேண்டியவற்றை மட்டும் பேசத் தெரிந்துகொண்டால்
நேரத்தை மிச்சப்படுத்தலாம். கூடுமான வரையில் மவுனமாக இருக்கப் பழகிக் கொண்டால் பலரிடமிருந்து
நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
பேசிப்பேசி பெரிதாக
என்ன கண்டுவிடப் போகிறோம்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் நியாயத்தைப் பேசினாலும்கூட,
பல இடங்களில் உங்கள் வார்த்தைகள் அநியாய வார்த்தைகளாகத்தானே விமர்சிக்கப்பகின்றன.
அண்ணனுக்குத் தம்பியிடம்
பேச முடியவில்லை; கணவனுக்கு மனைவியிடம் பேசத்தெரியவில்லை; தந்தைக்கு மகனின் பேச்சில்
உடன்பாட்டில்லை; பணக்காரனுக்கு ஏழையின் பேச்சில் அக்கறையில்லை; சந்தேகக்காரனுக்கு யாருடைய
பேச்சிலும் நம்பிக்கை இல்லை.
(தொடரும்)