வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

செல்போனில் விடாது பேசுபவரா நீங்கள்? ஒரு நிமிஷம் இங்க வாங்க!

 


இன்று அனைவரின் கைகளிலும், ஆறா விரலாய் செல்போன் ஒட்டி உறவாடுகிறது.

இந்த செல்போனை அதிகமாக உபயோகிப்பதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்து என்னென்னவென்று கீழே பாருங்க..!

தலைவலி

செல்போன் பயன்படுத்தும் சிலர், ஒற்றை தலைவலியால் நிறைய அவஸ்தைப்படுவார்கள். 

ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்களின் கதிர்வீச்சு, காதுகளில் அடிக்கடி அதிகமான ஒலியை பாய்ச்சுவதால், அவை தலைவலியை தூண்டிவிடுகிறது.

சோர்வு

மொபைல் போன்களில் இருந்து வெளிவரும் கதிர்கள், மூளையில் உள்ள செல்களை பாதித்து, 

விரைவிலேயே சோர்வை உண்டாக்கிவிடும். இதனால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமல் போய்விடும்.

தூக்கமின்மை

அளவுக்கு அதிகமாக செல்போன் பயன்படுத்தினால், மனதில் கவலை மற்றும் ஒருவித அழுத்தத்தை உண்டாக்கி, 

நிம்மதியான தூக்கத்தை கெடுத்துவிடும். 

மேலும் சில நேரங்களில் உளவியல் ரீதியான பிரச்சனையையும் உண்டாக்கிவிடும்.

ஞாபக மறதி

செல்போன்களில் அதிர்வுகள் மூளையில் தகவல்களை சேகரித்து வைக்கும் திறனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 

அதனால் தான், அதிகமான அளவில் செல்போன் பயன்படுத்தினால், ஞாபக மறதி நோய் ஏற்படுகிறது.

மலட்டுத்தன்மை

நிறைய ஆண்கள் செல்போன்களை பேண்ட் பாக்கெட்டுகளில் வைப்பதால்,

செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள்
மற்றும் வெப்பம், விந்துக்களின் உற்பத்தியில் 
பாதிப்பை ஏற்படுத்தி, 

அவற்றை அழித்துவிடும்.

நச்சு எதிர்வினை

செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் இரத்தணுக்களை உடைத்து, 

மூளைக்கு செல்லும் இரத்தத்தில் ஒருவித நச்சுத்தன்மையை உண்டாக்கிவிடும்.

காது கோளாறு
மொபைல் போனில் அளவுக்கு அதிகமான சப்தத்தில் வைத்து, நீண்ட நேரம் பாட்டு கேட்டாலோ அல்லது பேசினாலோ, 

அது செவிப்பறையில் அதிகமான அழுத்தத்தைக் கொடுத்து, காது வலி மற்றும் இதர பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

புற்றுநோய்

செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்கள், உடலில் கட்டிகள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். 

எந்த ஒரு ஆய்விலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், அது பற்றிய ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. 

எனவே “வருமுன் காப்பதே நல்லது” என்பதற்கேற்ப, அதனை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

அடிமையாக்கும்

நோமோஃபோபியா என்னும் ஒருவிதமான நோயை இது உண்டாக்கிவிடும். 

அதுவும் இது ஒருவித நிலையற்ற மனநிலையை உண்டாக்கி, 

வித்தியாசமான உலகில் இருப்பது போல் மனநிலையை மாற்றிவிடும். 

மேலும் சில நேரங்களில் அது இல்லாமல் எதையும் செய்யமுடியாது என்பது போல் செய்துவிடும்.


செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

புத்தகங்கள் படிக்கவேண்டும் ஏன்?

                                                    புத்தகங்கள் படிக்கவேண்டும் ஏன்?

ஒவ்வொறு மனிதனும் தனக்குள் கேட்க வேண்டிய முதல் கேள்வி,நான் ஏன் புத்தகங்களை படிக்க வேண்டும்?என்பதுதான்.இயறகையோடு எய்தி வாழ்க்கை நடத்துபவன் நல்ல உடல் ஆரோக்யத்தை பெறுகிறான். புத்தகங்களோடுதன் வாழ்க்கையை எய்தி வாழ்பவன் சிறந்த மன உறுதியையும் அறிவு என்னும் அசைக்க முடியாத ஆரோக்கியத்தை பெறுகிறான்.நமக்கு நிறைய அறிவு வேண்டும் என்றால் நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும்.ஒரு மனிதன் தன்னை உணரவும் புத்தகங்கள் இன்றியமையா இடத்தை பெறுகின்றன. பெரிய பெரிய அறிஞர்கள் படித்த படிப்பு(பட்டம்) வேண்டுமானால் சிறிதலவு இறுக்கலாம்,ஆனால் அவர்கள் படித்த புத்தகங்களின் எண்ணிக்கை அளவிடமுடியாதவை.அவை நமக்கு வாழ்கையை,சமூகத்தை,தடைகளை எப்படி தகர்கவேண்டும் என்கிற நுண்ணறிவை கற்று தறுகின்றன.

      ``புத்தகங்களை தலைகுனிந்து பார்த்தால்
       உலகம் உண்னை தலை நிமிர்ந்து பார்க்கும்’’
என்ற பென்மொழிக்கினங்க இந்த உலகம் உங்களை தலைநிமிர்ந்து பார்கவேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு இன்றுமுதல் நமக்கு நல்புத்தியை புகட்டும் புத்தகங்களை நாம் படிக்கத் தொடங்குவோம்.


செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

அதிரடியாக ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக்கின் 'அகுய்லா'..!

மிகப்பெரிய சமூக வலைதலமான பேஸ்புக், இன்டர்நெட் மூலம் உலகை இணைக்கும் திட்டமான சூரிய சக்தி மூலம் இயங்கும் தனது ட்ரோன் ஆன 'அகுய்லா'வை (Aquila) தொடங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று தொடங்கப்பட்ட இந்த ட்ரோன் தான் உலகை முன்னேற்ற உதவும் முதன்மை இணைய அணுகலை (primary internet access) கொண்டு முதல் முழு அளவிலான டிரோன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அகுய்லா ட்ரான் ஆனது பறக்கவல்ல தற்கால விமானம் வடிவமைப்பின் முன்னோட்டம் என்றும் இதன் மூலம் வளரும் உலகின் அத்தியாவசிய இணைய அணுகல் பெற முடியும் என்றும் பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் பதிவின் கீழ் 'இரண்டு ஆண்டு பொறியியல் வேலைகளுக்கு அகுய்லா ட்ரோன் வெற்றிகரமாக தனது முதல் விமான விமானத்தை தொடங்கியது என்பதை அறிவிக்க பெருமைப்படுகிறேன். சூரிய சக்தி மூலம் இயங்கும் இந்த விமானம் உலகின் தொலை தூர பகுதிகளுக்கு 'பீம்' () வழிமுறையில் இணைய வசதியை வலபிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக நீண்ட ஆளில்லா விமானம் சார்ந்த வரலாற்றை நாங்கள் உருவாக்கிவிட்டோம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
'மாதிரிகள் மற்றும் விமானம் அமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து இரண்டு ஆண்டுகளாய் சேகரிக்கப்பட்ட தரவுவுகளின் கீழே இதன் இயக்கம் இருக்கும். இதற்கு முன்பு நிகழ்த்தப்படாத வண்ணம் 60,000 அடி உயரத்தில் இருந்துகொண்டே லேசர்கள் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் 'அக்குய்லா' ஒரு மாதங்களுக்கும் மேல் வானத்தில் தங்கும்' என்றும் மார்க் சூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
'உலகம் முழுவதையும் இன்டர்நெட் மூலம் இணைப்பது மற்றும் இணைய வசதிக்கான சாத்தியமே இல்லாத 4 பில்லியன் மக்களை ஆன்லைனுக்கு கொண்டு வருவது தான் எங்கள் முக்கிய நோக்கம்' என்றும் மார்க் சூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஒன்பது வருட காத்திருப்பு, இஸ்ரோவின் பார்வையில் பட்ட 'ப்ரதம்'..!


மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (Indian Institute of Technology Bombay - IIT-B) 'விண்மீன் கனவுகள்' இறுதியாக ஒன்பது ஆண்டு காத்திருப்பிற்கு பின், அடுத்த மாதம் விண்ணை தொட இருக்கிறது.
10 கிலோ எடைகொண்ட அந்நிறுவனத்தின் 'மாணவர் செயற்கைக்கோள்' (Studebt Satellite) ஆன 'ப்ரதம்' (Pratham), இஸ்ரோ நான்கு கட்ட போலார் எஸ்.எல்.வியை (பி.எஸ்.எல்.வி.) உதவியுடன் வரும் செப்டம்பர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்த இருக்கிறது.
இஸ்ரோவின் முக்கிய செயற்கைக்கோள்கள் ஆன ஸ்காட்சாட் (ScatSat) மற்றும் பிற சில முக்கியமான செயற்கைக்கோள்களுடன் சேர்த்து ப்ரதம் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. முதலில் 2007-ஆம் ஆண்டில் இஸ்ரோவினால் உறுதி செய்யப்பட்ட 'ப்ரதம்' செயற்கைக்கோள் பல்வேறு காரணங்களுக்காக தாமதங்கள் உண்டாகி , அதன் வெளியீட்டு அட்டவணை தேதியானது பின்தங்கிகொண்டே போனது.
'ப்ரதம்' ஒரு அயன்மண்டலத்துக்குரிய ஆய்வு செயற்கைக்கோள் என்பதும் இதன் முக்கிய பணி பூமியின் மண்டிலத்தின் (Earth's ionosphere) எலக்ட்ரான்களை எண்ணுவதென்பதும் குறிப்பிடத்தக்கது. நான்கு மாத பணி காலம் கொண்ட ப்ரதம் விண்வெளியில் 720 கி.மீ. என்ற உயரத்தில் நிறுத்தப்படும். அதன் தரவுகள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் ஜி.பி.எஸ் தகவல்களில் உள்ள பிழைகளை திருத்த உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.