அன்றாடம் நீண்ட
நேரம் கணினியை பயன்படுத்துவோருக்கு உடலில் சோர்வு,பின் கழுத்து,முதுகு மற்றும் தலைவலி,கைகள்,மணிக்கட்டு
மற்றும் தோள்பட்டை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.தொடர்ந்து
கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் இமைகளில் சிமிட்டல் குறைந்து கண்கள் உலர்
தன்மை அடைகின்றன.இதனால் கண்களில் உறுத்தல்,எழுத்துகள் இரண்டாகவும் பலவாகவும் தெரிதல்,பார்வைத்
தெளிவற்றுத் தோன்றுதல் போன்ற சிரமங்கள் ஏற்படுகின்றன.இந்நிலைகளை தவிர்க்க என்ன செய்யலாம்
என்று பார்க்கலாம்.
புதன், 22 ஜூன், 2016
செவ்வாய், 21 ஜூன், 2016
மாய மந்திரம்! இந்திர ஜாலம்!
மாயா ஜாலாம் தொடர்கிறது..
இந்த இந்திர ஜாலம் பற்றி 1300 ஆண்டுகளுக்கு முன் தண்டி என்ற கவிஞர் எழுதிய தசகுமார சரித்திரம் என்ற வடமொழிக் கதைப் புத்தகத்தில் ஒரு சுவையான கதை வருகிறது.
சுவையான மாய மந்திரக் கதை
மகத நாட்டில் ராஜவாஹனன் என்ற இளவரசன் வசித்து வருகிறான். அவனுடைய தந்தையை மாளவ மன்னன் மானசாரன் தோற்கடித்து காட்டுக்கு விரட்டி விடுகிறான். ராஜவாஹனன் தாய் தந்தையரின் அனுமதி கேட்டு நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்படுகிறான். அவனுடன் வந்த பத்துப் பேரையும் இடையில் தவற விடுகிறான். பின்னர் அவன் மட்டும் தனியாகப் பயணம் செய்து உஜ்ஜையினி நகரை அடைகிறான். அதுதான் மானசார மன்னனின் தலை நகரம். அந்த மன்னனுக்கு அவந்திசுந்தரி என்ற அழகிய மகள் உண்டு. எதிர்பாராத விதமாக உஜ்ஜையினி நகரில் அவனுடைய பழைய நண்பனைச் சந்திக்கிறான். அவன், அவந்தி சுந்தரியின் தோழியைத் திருமணம் செய்துகொண்டு செல்வாக்குடன் விளங்குபவன். அவர்கள் மூலமாக அவந்தி சுந்தரியைச் சந்திக்கிறான். காதல் மலர்கிறது. ஆனால் தந்தையைக் காட்டிற்கு விரட்டிய மன்னனின் மகளைக் காதலிப்பதால் வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாது.இதுபற்றி எண்ணி எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தபோது, வித்யேஸ்வரா என்ற மந்திரவாதியின் தொடர்பு கிடைக்கிறது. அவன் உதவி செய்ய முன்வருகிறான். இருவரும் ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி அவந்திசுந்தரி தனது தந்தை மானசாரனிடம் சொல்லி ஒரு மாயாஜாலக் காட்சியை ஏற்பாடு செய்கிறாள். அதில் அற்புதமான காட்சிகள் வருகின்றன.
(தொடரும்..)
திங்கள், 20 ஜூன், 2016
நோபல் பரிசு
Øஇது உலகின்
மிகப் பெரிய விருதாகக் கருதப்படுகிறது.
Øஇலக்கியம்,
இயற்பியல், வேதியியல், மருத்துவம், உடலில், சமாதானம் மற்றும் பொருளாதாரம் என்னும்
6 துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வருடந்தோறும் இவ்விருது வழங்கபடுகிறது.
Ø ஆல்பிரட்
நோபல் என்பவர் இவ்விருதை உருவாக்கினர். இவர் டைனமைட் என்ற வெடி பொருளைக் கண்டு பிடித்தவர்.
Ø1900ல்
“நோபல் அறக்கட்டளை” நிறுவப்பட்டது.
Ø இந்த
விருதின் பரிசுத் தொகை 7.25 கோடி 1901 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
Øபொருளாதாரத்திற்கான
நோபல் பரிசு 1969-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பரிசு சுவிடன் நாட்டின் மத்திய வங்கியால்
தோற்றுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Ø இயற்பியல்,
வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு “ ஸ்டாக்
ஹோமில்” வழங்கப்பட்டு வருகிறது.
Øஅமைதிக்கான
நோபல் பரிசு பரிசு மட்டும் நார்வே நாட்டின் தலைநகரம் ஒஸ்லோவில் வழக்கப்படுகிறது.
மாய மந்திரம்! இந்திர ஜாலம்!
சிறு வயதில் சர்கஸ், பொருட்காட்சி, விழாக்கள் போன்றவற்றில் மாயா ஜாலக் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். டெலிவிஷன் வந்த பிறகு அதிலும் பல ‘மாஜிக்’ தந்திரக் காட்சிகள் வந்தன. இந்திர ஜாலம் என்பது இதற்கான வடமொழிச் சொல். தமிழில் இதற்குக் கண்கட்டு வித்தை என்று பெயர். ஆனால் அதிலும் வித்தை என்பது சம்ஸ்கிருதம்! மாயாஜால தந்திரக் காட்சிகள் என்றால் எல்லோருக்கும் எளிதில் விளங்கும். காமசூத்திர நூல் எழுதிய வாத்ஸ்யாயனர், இதையும் பெண்களுக்கான 64 கலைகளில் ஒன்றாகச் சேர்த்திருக்கிறார்.
ஆதிகாலம் முதற்கொண்டு இந்தியர்கள் செய்துவந்த மிகப்பெரிய மாயாஜாலக் காட்சி ‘கயிறு வித்தை’ என்பதாகும். இதைப் பற்றி பல வெளி நாட்டு யாத்ரீகர்கள் எழுதி வைத்துள்ளனர். மந்திரவாதி ‘’\சூ! மந்திரக் காளி!’’ சொன்னவுடன் ஒரு கயிறு தானாகவே மேலே எழும்பும். அதைப்பிடித்துக் கொண்டு ஒரு மந்திர வாதி வானத்தை நோக்கி மேலே மேலே செல்வான். பிறகு மறைந்து போய் விடுவான். சில காட்சிகளில் அவன் பெயரைக் கூப்பிட்டவுடன் கீழே வந்து நிற்பான். இபின் படூடா என்ற யாத்ரீகர் 700 ஆண்டுகளுக்கு முன் இதே போல ஒரு காட்சியை சீனாவில் பார்த்ததாக எழுதிவைத்துள்ளார்.
ஆதிசங்கரர் எழுதிய வேதாந்த பாஷ்யத்தில் இந்த கயிற்று வித்தையைக் குறிப்பிட்டு இதை மாயம் என்கிறார். ஆக அவரது காலத்துக்கு முன்னரே 2000 ஆண்டுகளாக இந்த வித்தை இந்தியாவில் காட்டப்பட்டு வருகிறது!! இதற்கும் இந்திரனுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் வானவில்லை இந்திரனின் வில் (இந்திர தனுஸ்) என்று சம்ஸ்கிருதத்தில் அழைப்பர். அது போல இந்த ‘’மாஜிக் ஷோ’’வும் வண்ணம் நிறைந்ததாக இருந்ததால் இப்பெயர் வந்திருக்கலாம்.

ஞாயிறு, 19 ஜூன், 2016
வலியை மறக்க குழந்தையிடம் கற்று கொள்ளுங்கள்..!!
ஒரு திருநங்கை சகோதரியுடன் பேசி கொண்டிருந்தேன்.கடவுள் செய்த தவறுதானே உங்கள் இந்த வலிக்கு காரணம் என்றேன்,
சகோதரி சொன்னால் இது வலி அல்ல வரம் என்று
ஒரு பெண்ணின் உணர்வுகளை உன்னால் உணரமுடியுமா என்று கேட்டாள் ?
நான் என்னால் முடியாது என்றேன் ஆனால் அவள் சொன்னாள் எங்களால்
முடியும் என்று
ஒரே நேரத்தில் ஆண் பெண் இருவர் உணர்வுகளை எங்களால் உணரமுடியும் இது எங்களுக்கு வலியல்ல வரம் என்றாள்
இந்த சமுகத்தால் புறக்கணிக்கப்பட்டு மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள்
கடவுள் செய்த தவறையும் வரம் என நினைத்து வாழ கற்று கொள்கிறார்கள்
நாமோ சின்ன சின்ன வலிகளையும் பேரிய வலியாய் நினைத்து வருந்தி வாழ்நாளை கண்ணீரில் கழிக்குறோம்
உலகில் கவலையில்லாத மனிதர்கள் கல்லறையில் தான்இருக்கிறார்கள்
கருவறையில்கூட மனிதனுக்கு வலி இருக்கிறது
மனிதனை தாய் வலியில்தான் பிறசவிக்கிறாள்
அந்த வலியைவிடவா
நம் கவலையின் வலி பெறியது
அந்த வலிக்கு தாய் பயந்திருந்தால் இங்கு மனிதர்களே இருந்திருக்க போவதில்லை
எனக்கு தெறிந்த தம்பதிகள் ஒருவர் இருந்தார்கள் அவர்களுக்கு வேறு ஒரு உறவே இல்லை
இருவருக்கும் ஒருவருக்கொருவர்தான் உறவு
ஓர்நாள் அதிகாலையில் அந்த கணவன் மரித்துப்போனான் நான் அங்கு போனபோது அந்த சகோதரி தனிமையில் அழுது கொண்டிருந்தாள்.
இப்போது நான் யாருக்கு அழுவது
இறந்த அந்தபோன அந்த கணவனுக்கா?
இல்லை இருந்த அந்த ஒரே உறவையும் இழந்து வாடும் அந்த சகோதரிக்கா? மனமெல்லாம் பாரமாய் அங்கிருந்து வந்து விட்டேன்
சமிபத்தில் அந்த சகோதரியை பார்த்தேன் புன்னகையோடு! சொன்னாள் அண்ணா நீங்கள் எல்லாம் இருக்கும் நம்பிக்கையிதான் வாழ்கிறேன் என்று
நம்பிக்கைகள்தான் வலியை மறக்க மருந்தாகிறது
வலியை மறக்க குழந்தையிடம் கற்று கொள்ளுங்கள்
முடிந்த போன நொடி போழுதை அப்போதே குழந்தைகள் மறந்து விடுகிறது
பிறக்க போகும் அடுத்த நிமிடங்களை எண்ணிக்கொண்டிருப்பதில்லை கிடைத்த நிமிட பொழுதை வலிகளை மறந்து அனுபவிக்கிறது
அதனால் தான் குழந்தைகள் எப்போதும் புன்னகையோடு இருக்கிறது
அந்த புன்னகைதான் எல்லோருக்கும் பிடிக்கிறது
கோவமாய் அடித்துவிட்டு
அழுது கொண்டிருக்கும் குழந்தையை
புண்ணகையோடு கரம்விரித்து
அழைத்து பாருங்கள்
கண்ணீர் கோடுகள் அழியாமலே புண்ணகையோடும் வந்துவிடும் அக்குழந்தைகள்
அதுதான் குழந்தையின் சந்தோசத்திற்குக் காரணம்
கவலைகள் மறப்பது
வலிகளை மறப்பதற்கு இழந்து போன இழப்புகளை மறந்து விடுங்கள் எல்லாவற்றையும் ரசிக்க கற்று கொள்ளுங்கள்
பிறருக்கு விட்டு கொடுங்கள்
அடுத்தவர்கள் தவறுகளை முடிந்தவறை மன்னித்து மறந்துவிடுங்கள்
சின்ன சின்ன விட்டு கொடுத்தல்கள்தான் பெரிய வலிகளுக்கு மருந்தாய் இருக்கிறது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)