புதன், 1 ஜூன், 2016

பென் டிரைவில் வைரஸ் தாக்கினால்..!!!






தற்போது தகவல்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்படுவை யு.எஸ்.பி,பென் டிரைவ்கள்.இதில் முக்கியமான பிரச்சனை ’வைரஸ்’ தான்.வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென் டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கும் வாய்ப்பு அதிகம்.
அவ்வாறு பாதிக்கும் போது உங்கள் பென் டிரைவில் உள்ள பைல்கள்  மறைக்கப்பட்டு விடும்.கணினியில் பென் டிரைவை திறந்தால் எந்த பைலும் இருக்காது.காலியாக இருக்கும்.ஆனால் ‘பிராப்பர்டீஸ்’ சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.காரணம் நம் தகவல்களை வைரஸ் மறைத்து வைத்துவிட்டது.
பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் பார்மட்(format) செய்து பென் டிரைவை திரும்பப் பெறலாம்.ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்தப் பைல்களை பத்திரமாக மீட்பது என்று பார்ப்போம்.
இதற்கு நீங்கள் எந்த மெனபொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாகச் செய்துவிடலாம்.கீழே உள்ள வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றி பைல்களை மீட்டெடுக்கலாம்.
 



1.முதலில் பென் டிரைவை உங்கள் கணினியில் செருகிக் கொள்ளுங்கள்.
2.Start-Run-CMD-Enter கொடுக்கவும்.
3.இப்பொழுது பென் டிரைவ் எந்த டிரைவில் உள்ளது என்று பாருங்கள்.மை கம்ப்யூட்டர் செல்வதன் மூலம் அதைக் கண்டறியலாம்.
4.உதாரணமாக E என்ற டிரைவில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அதற்கு நீங்கள் E என்று கொடுத்து ‘என்டர்’ அழுத்த வேண்டும்.
5. attrib s h/s/d *.* என டைப் செய்யுங்கள்.ஒவ்வொரு பகுதிக்கும் சரியான ஸ்பேஸ் கொடுக்கவும் .நீங்கள் சரியாகக் கொடுத்துள்ளீர்கள் என்று உறுதி செய்துகொண்டு என்டரை அழுத்துங்கள்.சில வினாடிகள் பொறுத்திருங்கள்.இப்போது உங்கள் பென் டிரைவை சோதித்துப் பாருங்கள்.பைல்கள் அனைத்தும் திரும்ப வந்திருக்கும்.

செவ்வாய், 31 மே, 2016

தவறாகப் பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் சரியான அர்த்தங்களும் ..!




1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தப்
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்தப் பண்ணு...
இதாங்க சரி...

2.படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டைக் கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான் ....

3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...
காலப்போக்கில்....

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரைக் குறை கூற
உபயோகிக்கிறோம்...
மாறுவோம்... பிறரை மாற்றுவோம்...

ஏற்றமும்... இறக்கமும்... உள்ளது வாழ்க்கை....



Image result for ஏற்றமும்... இறக்கமும்...



*பரமபதம்*
எண்ணிக்கையில் கூட்டலையும்... பெருக்கலையும்... விளையாட்டாய் கத்துகொடுத்தது

*கிட்டிபுள்*
வெட்டி வெளியில் எறிந்தாலும்... மீண்டு(ம்) தொடக்கத்திலிருந்து துவங்கி இலக்கையடைய சொல்லிகொடுத்தது

*தாயம்*
அடுக்கியது சரித்து... மீண்டும் அடுக்கி அழித்தலும் ஆக்கமும் நம்முள்ளுண்டு... என உணர்த்தியது.

*ஏழுகல்*
வேறு வழியில்லை என்றநிலை வரும்வரை போராடு... என பொட்டில் செதுக்கியது.

*சதுரங்கம்*
ஒளிந்தவர்களைக் கண்டுபிடிக்கும் பொறுமையும்... ஒளிந்து தனிமைநேரப் பெருமையையும்.. பெற்றுதந்தது.

*ஐஸ்பால்*
சமமாக இல்லாது ஊனமாக இருந்தாலும் சாதிக்கனும் எனநெறி ஊட்டியது.

*நொண்டி*
இருக்குமிடத்தில் எடுத்து... இல்லாவிடத்தில் நிரப்பும்குணம்... மனம் பதித்தது.

*பல்லாங்குழி*
நண்பன் உயரம்போக முதுகும்.... தோளும்.... குனிந்து ... பணிந்து நிற்க சொல்லிக் கொடுத்தது.

*பச்சைகுதிரை*
அதனால் தானோ என்னவோ அந்தகாலத்தில் தற்கொலைகள் அவ்வளவாக இருந்ததில்லை ...

யார் இந்த குற்றாலீஸ்வரன்..???

                             Image result for குற்றாலீஸ்வரன் நீச்சல் வீரர்                            

இந்தப் பெயரைக் கேட்டதும் ஒரு சிறுவன் அதுவும் தமிழ்நாட்டில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் இந்தியாவிலும் உலக அளவிலும் நடந்த பல நீச்சல் போட்டிகளிலும் வெற்றி பெற்று பதக்கங்களை வாங்கி வந்து தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தவன் என்பதும் அவனது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது என்பதும் பலருக்கும் நினைவுக்கு வரலாம்.
     பத்திரிக்கைகள் பாராட்டின. பேட்டிகள் பிரசுரமாயின. ஆனால், இளம் வயதில் சாதனைகள் பல புரிந்த குற்றாலீஸ்வரனின் வாழ்க்கை வேதனையும் நிறைந்தது.
     முதலில் சாதனைகளை பார்ப்போம்…….
சிறு வயதில் இருந்தே கடலில் நீண்ட தூரம் நீந்தி செல்வதில் ஆர்வம் கொண்டிருந்த குற்றாலீஸ்வரன் தன்னுடைய 12 வயதில் ஆங்கிலக் கால்வாயில் நீந்தி கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளராக இடம் பெற்றார். அதன் பிறகு உலக அளவில் அதிக தூரமாக கருதப்பட்ட 81 கிலோ மீட்டர் தொலைவை மேற்குவங்காளத்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு தங்கபதக்கம் பெற்றார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியிலும் கலந்து கொண்டார். ஜூரிச்சில் நடந்த போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.
     அவரது வெற்றிகள் குவிந்தன. அதன் விளைவாக உலக அளவில் நடத்தப்பட இருந்த மாரத்தான் நீச்சல் போட்டியில் (2004) கலந்து கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த போட்டிகள் பிரேசிலும், அமெரிக்காவிலும் நடைபெற இருந்தன.
     அந்த சமயத்தில் அவர், தான் இனிமேல் நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவது இல்லை என்று அறிவித்து விட்டார்.
     காரணம்…..
ஒவ்வொரு போட்டிகளில் கலந்து கொள்ள தேவைப்படும் லட்சக்கணக்கான ரூபாய் செலவை அவரது குடும்பத்தினரால் சமாளிக்க முடியாததும், அவரை ஊக்குவிக்க தனிப்பட்ட நிறுவனங்கள்  ஊக்கத் தொகை (“ஸ்பான்ஸ்ர்”) செய்ய முன் வராததும் தான் காரணம் என்று அறிகிறோம்.

     இந்தியாவில் கிரிக்கெட்டைத் தவிர, இதர விளையாட்டுக்களையும், விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானால் கிரிக்கெட்டைத் தவிர இதர விளையாட்டுகளிலும் இந்தியா சிறந்து விளங்கும்.
                                     (படித்ததில் பிடித்தது)