திங்கள், 30 மே, 2016

பலத்துறைச் சார்ந்த காணொலிகள்..!!!




பலத்துறைச் சார்ந்த காணொலிகள் ஒரே இடத்தில் காண இயலக்கூடிய  வலைப்பக்கம் குறித்த பதிவாக இப்பதிவு அமையவுள்ளது.சமீபத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறைக்கு சென்று இருந்தோம்.அங்கு கான் அகாடமி என்ற வலைப்பக்கம் குறித்தும் அவற்றில் பலத்துறைச் சார்ந்த காணொலிகள் பற்றியும் வகுப்புகள் நடைபெற்றன.

ஆஸ்கார் வைல்ட்

                             
                                        ஆஸ்கார் வைல்ட்—20ஆம் நூ(நாடகத் துறை)
அஸ்கர் வைல்ட் ஃபிங்கள் ஓ’ ப்லகர்டிக் வில்ஸ் வைல்ட்91854—1900)என்பவர் ஒரு ஐரிஷ் நாடகம்,ந1வல்,கட்டுரை மற்றும் கவிதைகள் எழுதுபவர். வித்தியாசமான பல நாடகங்களை 1880 முழுவதும் எழுதிய பின் லண்டனின் இலக்கியத் துறையில் பெரும் புகழை ஈட்டினார்,`தி பிச்சர்  ஆப் போரியன் க்ரே` என்ற நயத்தை பயண்படுத்தியிருப்பார்.இவர்`ஏஸ்திசம்` என்று சொல்லப்படும் அலகியல் துறை படைபில் தத்துவங்கள மிக ஈடுபாட்டுடன் வெளிக்கொண்டுவந்திருப்பார்.இதனை வால்டர் பாடர் மற்றும் ஜான் ரஸ்கின் என்ற இருவரிடம் கற்றார்.
            வைல்ட்’ஸ் புகழ்பெற்ற கவிதையான `ரிவேன்னா` தி நியூடிகேட் பரிசை 1878ஆம் ஆண்டு பெற்றது.அதனை தொடர்ந்து `போம்ஸ்` மற்றும் `தி ஸ்பினக்ஸ் என்பதெல்லாம் இவரது ஆரம்பகால படைப்புகளாக இருந்தன. இவர் சிறையில் இருந்த காலத்தில் `தி பேலேட் ஆப் ரீடிங் கோல்` என்பதை இயற்றினார்.இவரது கதைகள் மற்றும் புதினங்களில் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.இதற்கு அப்பார்பட்டு(1887)`லாட் ஆர்தூர் சாவைல்’ஸ் கிரைம்`, `தி கேன்டர் வைல் கோஸ்ட்(1887), தி ஹேப்பிரின்ஸ் அன்ட் அதர் டேல்ஸ்(1888) மற்றும்`தி பிச்சர் ஆப் டோரியன் கிரே` போன்றதெல்லாம் இவரது மிக முக்கியன படைபுகள்,1897 ஆம் ஆண்டு `டி பிரோஃபவுன்ட்` என்ற நீண்ட கடித்தில் ஆன்மீக பயணம் குறித்து சிறையில் இருக்கும்போது எழுதினார்.
            புகழ் மற்றும் வெற்றியின் உயரத்தில் இருக்கும்போது நான்று சிறந்த நகைச்சுவை படைப்பை வெளியிட்டார்,
                    I.     லேடி வின்டர்மியர்ஸ்’ஸ் பேன்
                    II.     அ வுமன் ஆப் நோ இம்பார்டன்ஸ்
                   III.     அன் ஐடியல் ஹஸ்பன்ட்    மற்றும்
                   IV.     தி இம்பார்டன்ஸ் ஆப் மீயிங் எர்நஸ்ட்
என்பது இவரது மிகச்சிறந்த(master piece)ஆகும்.இறுதியாக தனது 46ஆம் வயதில் வருமையின் காரணத்தால் இயற்கை எய்தினார்.

                  

ஜி.பி.ஷா


               ஜி.பி.ஷா—20ஆம் நூ(நாடக த்துறை)


                              ஜார்ஜ் பெர்நாட் ஷா(1856—1950)ஐயர்லேன்டில் டப்லின் என்ற இடத்தில் பிறந்தார்.1884ஆம் ஆண்டு ப்ஃ போபியன் சமூகத்தின் துடுக்கான உறுப்பிணரானார்.பின்னர் 1885 முதல் 1908க்கு இடையில் இவர் ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையார்.இவர் ஒரு ஐரிஷ் நாடகத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர்.இவர் திரையரங்கில் தன் வாழ்கையை இழுத்துக்கொண்டு வீட்டு வரையரைங்கள்,சமயம், பண விஷயம்(finance)மற்றும் தூர்விநியோகம் பற்றி எழுதினார்.அறுவதுக்கும் பேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.அக்காலத்தின் முன்னி நாடக எழுத்தாளராகி 1925 ஆம் ஆண்டு ஆஸ்கர் மற்றும் நோபல் பரிசினை பெற்றார்.ஜி.பி.ஷாவின் முதல் நாடகப் புத்தகமான `ப்லேஸ் அன்பிலசென்ட்`(1895) என்பதில் `வின்டோலர்ஸ் ஹவுஸ்`, `தி பில்லாண்டர்`, மற்றும் `மிஸ்சஸ் வாரன்’ஸ் ப்ரோபசன்ட்` என்பதிலும் `ஆர்ம்ஸ் அன்ட் மேன்`, `கேன்டீடா`, `தி மேன் ஆப் டேஸ்டினி` மற்றும் `யு நேவர் கேன் டேல்` போன்ற பல நாடகத்தை சேர்த்துள்ளார் மேலும் `தி டேவில்’ஸ் டிசிபில்`(1897) `சீசர் அன்ட் கிலியேப்பட்ரா`(1898) மற்றும் `கேப்படன் பிராஸ்போவுன்ட்’ஸ் கான்ரோவிர்சியோன்`(1899—1900) போன்றவையெல்லாம் `திரீ ப்லேஸ்லபார் பியூரிடன்ஸ்` என்பதிலிருந்து தொகுக்கப்பட்டவையாகும். இவரது  சிறந்த படைப்புகளாக `தி ஆப்பில் கார்ட்` மற்றும் `பிக்மாலியன்` என்பதை சொல்வர்.நாடகங்களை அடுத்து நிறைய நாவல்களையும் ஷா வெளியிட்டுள்ளார்.அது இல்லாமல் எண்ணிக்கையில்லாத அரசியல் மற்றும் விமர்சக கதைகளையும் வெளியிடுள்ளார்.

(எ.கா) `தி குஇன்டசேன்ஸ் ஆப் இப்சென்டிசெம்`, `டிராமாடிக் ஒபீனியன்ஸ் அன்ட் எஸ்சேஸ்` என்பன புகழ்பெற்றவையாகும்.

மனித கணிணி......!



சாகுந்தலாதேவி;

      கணிதத்தில் பிறவி மேதை என்று கூறப்படுபவர். உலக அளவில் பாராட்டப்படுபவர். கின்னஸ் புத்தகத்தில் இவரது சாதனை பதிவாகி உள்ளது.
      கணிணி வேகமா? அல்லது இவரது மனம் வேகமா? என்று தீர்மானிப்பது கடினம். இவரை ”மனித கணிணி” என்று கூறுவதும் உண்டு. ஆனால் இவர் அதை விரும்புவது இல்லை.
     மனித மூளை கணிணியை விட நுட்பமானது என்னும் கருத்தை உடையவர். 1980ம் ஆண்டு ஜுன் மாதம் 18 ஆம் தேதி அன்று லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கணிணி தேர்ந்தெடுத்து கொடுத்த 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என்கிற இரண்டு 13 இலக்க எண்களை மனதினாலேயே பெருக்கி சரியான விடையை 28 நொடிக்குள் கூறிவிட்டார்.
     1939 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிறந்தவர். சாகுந்தலா தேவியின் தந்தை சர்க்கஸில் பணிபுரிந்து வந்தவர். சாகுந்தலா தேவி மனதினாலேயே பெருக்கும் திறமை அவரது மூன்றாம் வயதிலேயே வெளிப்பட்டது.
     அவருக்கு ஆறு வயதான போது மைசூர் பல்கலைகழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவருடைய திறமை நிரூபிக்கப்பட்டது. அதன் பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரது திறமை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. அப்போது அவருக்கு வயது 8.
     1980 ஆம் ஆண்டில் மீண்டும் இரண்டு 13 இலக்க எண்களை பெருக்கி 28 நிமிடங்களுக்குள் கூறினார். எல்லாம் மனதாலேயே அவர் செய்தார். சரியான விடையை மனதால் கண்டுபிடிக்க எடுத்துக்கொண்ட நேரத்தை விட, அந்த விடையை எண்களாக கூற எடுத்துக்கொண்ட நேரமே அதிகம் என்று பின்னர் தெரிவித்தார்.
     தான் சிறந்த கணித மேதையாக இருப்பது மட்டுமல்லாமல் தன்னைப் போன்ற கணித மேதைகள் உருவாக எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்க பல புத்தகங்கள் எழுதி உள்ளார்.
                                   


ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்..??


இப்பதிவு எனக்கு கொடுத்த நண்பர் தினேஷ் அவர்களுக்கு நன்றிகள்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்? ஐந்து முக்கிய காரணங்கள்...


மருத்துவ துறை செலவு பணவீக்கம் கடந்த சில வருடங்களாக இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வருகிறது. இந்தச் சமயத்தில் இந்தியாவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களின் எண்ணிக்கை உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது மிக மிகவும் குறைவாகதான் உள்ளது. பல்வேறு ஆய்வுகளின்அடிப்படையில் பார்க்கும் போது, இந்திய மக்கள் தொகையில் சுமார் 11-13 சதவிகிதம் பேர் தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார்கள். அதுமட்டுமின்றி உலக வங்கியின் அறிக்கையின்படி மருத்துவ செலவுகளுக்காக பெரும்பாலானோர் கடன் வாங்கியும், சொத்துகளை விற்றும் செலவழிக்கிறார்கள். இப்படி செய்யாமல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எப்படி பயன்படுத்தி பயன்பெறலாம் என்றும் ஏன் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம் தேவை என்பது குறித்தும் பார்ப்போம்.