வியாழன், 5 மே, 2016

பெரியார் மாவட்டம் தான் ஈரோடு...!!!




ஈரோடு மாவட்டத்தில் 17.09.1879 அன்று வெங்கட நாயக்கர்-சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் தான் தந்தை பெரியார்.

சமுதாயத்தில் சாதி,சமயம்,வேறுபாடு அகலவும் மூடநம்பிக்கை முற்றிலுமாக ஒழியவும்,மனிதநேயம் தழைக்கவும் பாடுபட்ட மாமேதையாவார்.

ஈரோடு  நகர மன்றத்தின் தலைவராக இருந்து எண்ணற்ற சாதனை புரிந்தார்.

தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றினார்.

கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமையினை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

1925-ல் சுயமரியாதை இயக்கம் கண்டார்.குடியரசு ஏட்டை துவக்கினார்.

1927-ல் வருணாசிரமம் ஒழிந்தால் தான் தீண்டாமை ஒழியும் என்று காந்தியாரிடம் வாதாடினார்.

1937-ஆம் ஆண்டு கட்டாய இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

1938-ல் சென்னையால் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் ’பெரியார்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

1944-ல் சேலம் மாநாட்டில் நீதிக்கட்சி ,திராவிடர் கழகமாக பெயர்  மாற்றம் பெற வகை செய்தார்.

1950-ல் பெரியார் பொன்மொழிகள் நூலுக்காக ஆறுமாதம் சிறைத் தண்டனை விதிக்கப் பெற்று பத்து நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

1951-ல் வகுப்புரிமைக்காகக் கிளர்ச்சி நடத்தி இந்திய அரசியல் சட்டத்தை முதன் முறையாகத் திருத்தச் செய்தார்.

1967-ல் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள்,’யான் பெற்ற அரசு என் தந்தைக்குரிய பரிசு’ என்று குறிப்பிட்டு தமது ஆட்சியையே தந்தை பெரியாரின் பெரும் சமுதாயப் பணிக்கு காணிக்கையாக்கினார்.

1970 ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி  பாராட்டியது.

தந்தை பெரியார் தமிழகத்தின் வரலாற்றில் ஓரு சகாப்தமாக காலகட்டமாக திருப்பு முனையாக திகழ்ந்தவராவார்.

டிசம்பர் 19 அன்று சென்னை தியாகராய நகரில் சொற்பொழிவு ஆற்றினார்.அதுவே அவரது இறுதிச் சொற்பொழிவு.அதுவே அவரது மரண சாசனம்.

டிசம்பர் 24 காலை 7.22 மணிக்கு தந்தை பெரியார் தம் 95-ம் அகவையில் மறைந்தார்.அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

டிசம்பர் 25 அரசு மரியாதையுடன் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 4.57 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அடக்கம் செய்யப்பட்டது.


1974-ல் தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு ’எம்.வி.தமிழ்ப் பெரியார்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

1975-ல் ஈரோட்டில் பெரியார் வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு பெரியார்-அண்ணா நினைவகமாக ஆக்கப்பட்டது.

இப்படிப்பட்ட ஒரு சமூக சீர்த்திருத்தவாதி பிறந்து வாழ்ந்த இம்மண்ணில் நானும் பிறத்தேன் வளர்கிறேன் என்பதில் பெருமிதமாக உள்ளது.

என்னுடைய ஊரு ஈரோடுங்க…!!!!

அறுவகைப் பெயர்கள்


                            அறுவகைப் பெயர்கள்
பெயர்ச்சொல்
ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை
                            பொருட்பெயர்
                            இடப்பெயர்
                            காலப்பெயர்
                            சினைப்பெயர்
                            குணப்பெயர்
                            தொழிற்பெயர்
பொருட்பெயர்;
பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும். 
 
 


எடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும்.
இடப்பெயர்
இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.


எடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம்.
காலப்பெயர்
காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.



எடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை
சினைப்பெயர்
சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.




எடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை.
குணப்பெயர்
குணம் – பண்பு. பொருட்களின் குணத்தை (பண்பை) குறிப்பது குணப்யெராகும்.




எடுத்துக்காட்டு – உண்மை, பெருமை, வெம்மை, செம்மை, பசுமை.
தொழிற்பெயர்
செய்யும் தொழிலைக் குறிப்பது தொழிற்பெயராகும்.

 





எடுத்துக்காட்டு – தச்சு, உழவு, ஆட்டம், காவலர்.

பின்வரும் சொற்கள் எந்த பெயரைக் குறிக்கும் என கூறுக
கண், பொறுமை, ஓட்டுனர், தை, கடை, கட்டில்.



புதன், 4 மே, 2016

நாட்டை விற்காதே,மயங்காதே..!!!





தேர்தல் நெருங்கிவிட்டது 240 தொகுதியிலும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டு வாக்குகளை சேகரிக்க பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.ஒவ்வொரு கட்சியினரும் போட்டிப் போட்டு தங்களின் தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை மக்களிடையே தெரிவித்து வருகிறார்கள்.அறிவிப்பது  அவர்களின் கடமை.சரி நாட்டை விற்காதே என்று கூறினேன் அல்லவா..!!அது என்னவென்றால் 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை விற்க நினைக்கும் அனைவருக்குமே இந்த பதிவை சமர்பணம் செய்கிறேன்.

5*365=1825

1825/500=0.27397260

அப்படினா மொத்தமாக ஐந்து வருடத்திற்கு 0.27 பைசா  அதாவது இன்றைய காலக்கட்டத்தில் தொலைந்து போன பைசா மதிப்பு இதற்கு ஆசைப்பட்டு விலைமதிப்பில்லா நமது ஓட்டை தகுதியில்லாத ஒருவருக்கு விற்க நினைக்கிறோம்.இது தவறு.மேலும் அவர்கள் அறிவிக்கும் இலவசங்களை கண்டு மயங்காமல் அடுத்த ஐந்து வருடம் ஆட்சி செய்ய தகுதியுடையவரா..?? அவர் என்று யோசித்து வாக்களியுங்கள்.



சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.(கு.எ; 664)

செயல்திறன் பற்றிச் சொல்வது எல்லோருக்கும் எளிது.சொல்லியபடி செய்து முடிப்பது அரியதாம்,என்பது குறளின் பொருள்.இதனை அறிந்து வாக்களியுங்கள்.

மேலும் உங்கள் ஒட்டுதான் உங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவே சிந்தித்துச் செயல்படுவீர் நட்புக்களே.எனது கருத்தில் தவறுகள் இருந்தால் மன்னியுங்கள்.நாளைய விடியல் நமது விரல் நுனியில்…!!!நன்றி.


 

செவ்வாய், 3 மே, 2016

எழுத்தாளர்கள் எழுதிய விதம்...!



சில மேல்நாட்டு  எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை உருவாக்கிய முறைகளும், எழுதிய விதங்களும் விசித்திரமானவை. அவர்களில் சிலர்,

ஃபிராங் ஓ கான்னர் என்ற எழுத்தாளர் கதைகளை எழுதுவதற்கு முன்பு கதைக் கருவைச் சிந்தித்துத் திட்டமிடாமல் எழுதத் தொடங்கிவிட்டு, மனதில் தோன்றியதை எழுதிக்கொண்டே போவார். கதை முழுவதையும் எழுதிமுடித்த பிறகுத் தான் எழுதியது ஒரு அற்புதப் படைப்பு என்பது அவருக்குப் புலப்படும்.

நெல்சன் ஆல்க்ரென் என்ற எழுத்தாளர் தொடர்ந்து எழுதிக் கொண்டே போவார். கதையில் சுவையான சம்பவத்தைப் புகுத்திய பிறகுத்தான் தொடர்ந்து எழுதிமுடிக்கக் கதைப் பொருள் கிடைக்குமாம் அவருக்கு.

பிரபல ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் ஸெகாவ் சிந்தித்துத் திட்டமிடாமல் ஒரே மூச்சில் கதையை எழுதி முடிப்பது வழக்கம். கதை எழுதும் போது அவர் பார்க்கும் எந்த பொருளும், நிகழ்ச்சியும் அவரது கதை பொருளாக அமைந்து விடுவது வழக்கம்.

அண்டோனி பார்ஸன் என்ற துப்பறியும் நாவலாசிரியர் எழுத ஆரம்பித்தால் ஊன் உறக்கமின்றி நாவலை எழுதி முடிப்பார். எழுதி முடித்தப்பின் வயிறு முட்ட உணவு உண்டு, இரண்டு முன்று நாட்கள் உறங்குவாராம்.

ஜார்ஜ்பெர்னார்ட்ஷா ஒரு நாளைக்கு ஐந்து பக்கங்களுக்கு மேல் ஒரு வார்த்தை கூட எழுத மாட்டார். ஐந்தாவது பக்கம் எழுதி முடிக்கும் போது ஒரு வாக்கியம் பாதி எழுதபட்டிருந்தால் கூட எழுதுவதை நிறுத்தி விட்டு,அதை மறுநாள் தான் எழுதத் தொடங்குவார்.

சார்லஸ் டிக்கன்ஸ் தான் எழுதும் நகைச் சுவையைப் படித்துத் தானே வயிறு குலுங்கச் சிரிப்பாராம். சோகக் கட்டத்தை எழுதும் போது அந்தப்பக்கம் முழுவதும் சிந்தும் கண்ணீர் துளிகள் காகிதத்தின் மேல் உதிர்ந்து சிதறுமாம். அவர் எழுதிய நாவல் முழுவதையும் பலதடவை படித்துப் படித்துப் பார்த்து பலமாற்றங்கள் செய்து சீராக்குவாராம்.  

                                           (படித்ததில் பிடித்தது)

திங்கள், 2 மே, 2016

அவரை ஊர்


Image result for குற்றாலீஸ்வரன் நீச்சல் வீரர்

இதென்ன அவரை ஊர் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? பெங்களூர் தான் அவரை ஊர்!
பெங்காலு என்ற ஒரு வித அவரையிலிருந்து உண்டானதாகும் பெங்களூர். இது கன்னடப் பெயர்.
ஒருகாலத்தில் மைசூரை ஆண்டு வந்த வீரப்பன்னாளா என்ற அரசன் வேட்டைக்குச் சென்றபோது தன் பரிவாரங்களிலிருந்து தனியே பிரிந்து, இருளில் வழித்தவறி ஒரு குடிசையை அடைந்தான். அங்கு ஒரு வயதான மூதாட்டி இருந்ததைக் கண்டு தனக்கு உணவு தரும் படி வேண்டினார் அரசர் .

அந்த மூதாட்டியிடம் அச்சமயம் பெங்காலி என்ற அவரையைத் தவிர உணவாகக் கொடுக்க வேறொன்றும் இல்லை. ஆகவே அந்த அவரையை வேகவைத்து அரசனுக்கு பரிமாறினார் மூதாட்டி. அரசனும் அதை உண்டு தன் குதிரைக்கும் கொடுத்தார். மறுநாள் காலையில் தலைநகருக்கு திரும்பியவுடன் அச்செய்தியை எல்லாருக்கும் அறிவித்து, தனக்கு உதவி செய்த அந்த மூதாட்டிக்கு சன்மானம் அளித்ததுடன், அந்த இடத்தில் ஓர் ஊரையும் உண்டாக்கி, அதற்கு பெங்காலு என்றும் பெயரிட்டார். அப்பெயர் மாறி பெங்களூர் என்றாயிற்று.
                                            (படித்ததில் பிடித்தது)