புதன், 4 மே, 2016

நாட்டை விற்காதே,மயங்காதே..!!!





தேர்தல் நெருங்கிவிட்டது 240 தொகுதியிலும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டு வாக்குகளை சேகரிக்க பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.ஒவ்வொரு கட்சியினரும் போட்டிப் போட்டு தங்களின் தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை மக்களிடையே தெரிவித்து வருகிறார்கள்.அறிவிப்பது  அவர்களின் கடமை.சரி நாட்டை விற்காதே என்று கூறினேன் அல்லவா..!!அது என்னவென்றால் 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை விற்க நினைக்கும் அனைவருக்குமே இந்த பதிவை சமர்பணம் செய்கிறேன்.

5*365=1825

1825/500=0.27397260

அப்படினா மொத்தமாக ஐந்து வருடத்திற்கு 0.27 பைசா  அதாவது இன்றைய காலக்கட்டத்தில் தொலைந்து போன பைசா மதிப்பு இதற்கு ஆசைப்பட்டு விலைமதிப்பில்லா நமது ஓட்டை தகுதியில்லாத ஒருவருக்கு விற்க நினைக்கிறோம்.இது தவறு.மேலும் அவர்கள் அறிவிக்கும் இலவசங்களை கண்டு மயங்காமல் அடுத்த ஐந்து வருடம் ஆட்சி செய்ய தகுதியுடையவரா..?? அவர் என்று யோசித்து வாக்களியுங்கள்.



சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.(கு.எ; 664)

செயல்திறன் பற்றிச் சொல்வது எல்லோருக்கும் எளிது.சொல்லியபடி செய்து முடிப்பது அரியதாம்,என்பது குறளின் பொருள்.இதனை அறிந்து வாக்களியுங்கள்.

மேலும் உங்கள் ஒட்டுதான் உங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவே சிந்தித்துச் செயல்படுவீர் நட்புக்களே.எனது கருத்தில் தவறுகள் இருந்தால் மன்னியுங்கள்.நாளைய விடியல் நமது விரல் நுனியில்…!!!நன்றி.


 

செவ்வாய், 3 மே, 2016

எழுத்தாளர்கள் எழுதிய விதம்...!



சில மேல்நாட்டு  எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை உருவாக்கிய முறைகளும், எழுதிய விதங்களும் விசித்திரமானவை. அவர்களில் சிலர்,

ஃபிராங் ஓ கான்னர் என்ற எழுத்தாளர் கதைகளை எழுதுவதற்கு முன்பு கதைக் கருவைச் சிந்தித்துத் திட்டமிடாமல் எழுதத் தொடங்கிவிட்டு, மனதில் தோன்றியதை எழுதிக்கொண்டே போவார். கதை முழுவதையும் எழுதிமுடித்த பிறகுத் தான் எழுதியது ஒரு அற்புதப் படைப்பு என்பது அவருக்குப் புலப்படும்.

நெல்சன் ஆல்க்ரென் என்ற எழுத்தாளர் தொடர்ந்து எழுதிக் கொண்டே போவார். கதையில் சுவையான சம்பவத்தைப் புகுத்திய பிறகுத்தான் தொடர்ந்து எழுதிமுடிக்கக் கதைப் பொருள் கிடைக்குமாம் அவருக்கு.

பிரபல ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் ஸெகாவ் சிந்தித்துத் திட்டமிடாமல் ஒரே மூச்சில் கதையை எழுதி முடிப்பது வழக்கம். கதை எழுதும் போது அவர் பார்க்கும் எந்த பொருளும், நிகழ்ச்சியும் அவரது கதை பொருளாக அமைந்து விடுவது வழக்கம்.

அண்டோனி பார்ஸன் என்ற துப்பறியும் நாவலாசிரியர் எழுத ஆரம்பித்தால் ஊன் உறக்கமின்றி நாவலை எழுதி முடிப்பார். எழுதி முடித்தப்பின் வயிறு முட்ட உணவு உண்டு, இரண்டு முன்று நாட்கள் உறங்குவாராம்.

ஜார்ஜ்பெர்னார்ட்ஷா ஒரு நாளைக்கு ஐந்து பக்கங்களுக்கு மேல் ஒரு வார்த்தை கூட எழுத மாட்டார். ஐந்தாவது பக்கம் எழுதி முடிக்கும் போது ஒரு வாக்கியம் பாதி எழுதபட்டிருந்தால் கூட எழுதுவதை நிறுத்தி விட்டு,அதை மறுநாள் தான் எழுதத் தொடங்குவார்.

சார்லஸ் டிக்கன்ஸ் தான் எழுதும் நகைச் சுவையைப் படித்துத் தானே வயிறு குலுங்கச் சிரிப்பாராம். சோகக் கட்டத்தை எழுதும் போது அந்தப்பக்கம் முழுவதும் சிந்தும் கண்ணீர் துளிகள் காகிதத்தின் மேல் உதிர்ந்து சிதறுமாம். அவர் எழுதிய நாவல் முழுவதையும் பலதடவை படித்துப் படித்துப் பார்த்து பலமாற்றங்கள் செய்து சீராக்குவாராம்.  

                                           (படித்ததில் பிடித்தது)

திங்கள், 2 மே, 2016

அவரை ஊர்


Image result for குற்றாலீஸ்வரன் நீச்சல் வீரர்

இதென்ன அவரை ஊர் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? பெங்களூர் தான் அவரை ஊர்!
பெங்காலு என்ற ஒரு வித அவரையிலிருந்து உண்டானதாகும் பெங்களூர். இது கன்னடப் பெயர்.
ஒருகாலத்தில் மைசூரை ஆண்டு வந்த வீரப்பன்னாளா என்ற அரசன் வேட்டைக்குச் சென்றபோது தன் பரிவாரங்களிலிருந்து தனியே பிரிந்து, இருளில் வழித்தவறி ஒரு குடிசையை அடைந்தான். அங்கு ஒரு வயதான மூதாட்டி இருந்ததைக் கண்டு தனக்கு உணவு தரும் படி வேண்டினார் அரசர் .

அந்த மூதாட்டியிடம் அச்சமயம் பெங்காலி என்ற அவரையைத் தவிர உணவாகக் கொடுக்க வேறொன்றும் இல்லை. ஆகவே அந்த அவரையை வேகவைத்து அரசனுக்கு பரிமாறினார் மூதாட்டி. அரசனும் அதை உண்டு தன் குதிரைக்கும் கொடுத்தார். மறுநாள் காலையில் தலைநகருக்கு திரும்பியவுடன் அச்செய்தியை எல்லாருக்கும் அறிவித்து, தனக்கு உதவி செய்த அந்த மூதாட்டிக்கு சன்மானம் அளித்ததுடன், அந்த இடத்தில் ஓர் ஊரையும் உண்டாக்கி, அதற்கு பெங்காலு என்றும் பெயரிட்டார். அப்பெயர் மாறி பெங்களூர் என்றாயிற்று.
                                            (படித்ததில் பிடித்தது)

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

ஃரான்சிஸ் பேகன்

ஃரான்சிஸ் பேகன்

பேகனின் வாழ்க்கை:
            பேகன் ஜனவரி22,1561ஆம் ஆண்டு பிறந்தார்.கேம்பிரிஜ் பல்கலைக்கலகத்தில் பயின்று சட்டப்படிப்பை தம் தொழிலாக தேர்வு செய்தார்,பின்னர் ராணியின் ஆலேசகராக முன்னேறினார்.மவாழ்வில் மன்னர் ஜெம்ஸ்சின் வருகையும் இவர்க்கு சாதகமாகவே அமைந்த்து.1613இல் வழக்கறிஞர்,1617அல் அரச பாதகாவலர் இருதியாக 1623இல் சென்ட்ஸ் ஆல்பன்ஸ்சில் aristocratic அவைவையில் உறுப்பினரானார்.
             தீடீரென பேகன் வாழ்வில் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தார். இவர் தாகாத சில செயல்களில் ஈடுபட்டு40,000ஆயிரம் பவுன்ஸ் அபராதம் விதித்து நாங்கு நாட்கள் சிறை தண்டனையும் ஆனுபவித்தார்.விரைவில் அவர்க்கு மன்னிப்பும் வழங்கப்பட்டது.
பேகனது சில லத்தின் படைப்புகள்:
             டி அக்மென்டிஸ் செயின்டியாரம்
             நொவம் ஆர்காஆனம்
             சில்வ சில்ஃவாரம்
             ஸ்கேலா இன்டலெக்டஸ் அன்ட் ப்ரோட்ரோமி
சில ஆங்கில படைப்புகள்:
             ``தி நியி அட்வான்ஸ்மன்ட் ஆப் லர்நிங்'',``நியு அட்லான்டிஸ்''

பெறும்பாலும் பேகனின் கட்டுரை மனிதன் பொதுவாழ்விலும்,தனிப்பட்ட வாழ்விலும் கடைபிடிக்க வேண்டிய நெறிகளைப்பற்றி அமையும்.மொத்தம்58 கட்டுரைகள் பேகன் எழுதியுள்ளார்.இவரது மொத்தமான சில கட்டுரைகள் ``எஸ்சேஸ் ஆர் கௌன்சில்ஸ் சிவில் ஆன்ட் மாரல்ஸ்``என்ற படைப்பில் வெளிவந்தது.

வாட் மற்றும் சர்ரே

                                             வாட் மற்றும் சர்ரே


16ஆம் நாற்றாண்டின் ஆரம்ப காலத்தில் சர் தாமஸ் வாட் சானட் என்று சொல்லப்படும்14வரிகள் கொண்ட பாடல்வகையை ஆங்கிலத்தில் பயண்படுத்தினர்.இதனை சர்ரே பின்பு விரிவாகப் பயண்படுத்தினர். இத்தாலியில் பெட்ரார்ச் என்பவர்தான் முதன் முதலில் சானட் வகையை அறிமுகப்படுத்தினர்.வாட் இதில் சில வேறுபாடுகளுடன் ஆங்கிலத்தில் பயண்படுத்தினார்.
சர் தாமஸ் வாட்:
            வாட் யார்ஷ்ஷயர் என்ற பரம்பரயை சேர்ந்தவர்.இவர் கேம்ப்ரிஜ் பல்கலைக்கலகத்தில் பயிண்றார்.தன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட கருத்தை உட்கொண்டு இவரது பாடல்கள் அமையும்.இவரது பாடல்கள் மற்றும் சானட் வகைகள் இவர் இறப்பிற்கு பின் டோட்டில்ஸ் மிசிலனி என்ற பதிப்பில் வெளிவந்த்து.மேலும் இவரது பாடல்கள்,சானட்ஸ்,கேலி நடை பாடல்கள்,இற்ப்பாட்டு முதலிய பல வகையான நயங்களைக்கொண்டு எழுதியுள்ளார்.இவரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்,
            மை லூட், அவேக்
            ஈஸ் இட் பாசிபில் மற்றும்
            ஐ ஃஐன்ட் நோ பீஸ்
ஹென்ரி ஹோவர்ட் இஎல் ஆப் சர்ரே(henry howard earl of surrey):

ஹென்ரி ஃப்ரான்ஸ் மற்றும் ச்காட்லண்டில் போர்வீரராக பணிபுரிந்தார்.இவர் பாடல்கள் வெறுபட்ட கருத்தை வெளிப்படுத்துவார்.இவரின் குறிப்பிடத்தக்க நூல்கள்,
            வின்சர் கேசில்
            வின்சர் வால்ஸ்
            ப்ரவுட் வின்சர்

இருவருக்குமே இயற்க்கைக்கான மென்மையான அன்பு உண்டு.சர்ரேவின் உண்மையான ஈடுபாடு(real passion)அவரது பாடல்களில் தெறியாது ஆனால் கற்பனைக்காதலை கருவாகக் கொண்டு வாசகர்களை ஈர்த்துள்ளார்.