ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

ரெயில் பெட்டி தொழிற்சாலை


Image result for சென்னை பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலை

ஆர்ப்பாட்டம் எதுவும் இன்றி சாதனை படைக்கும் நிறுவனம் என்றால் சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையை சொல்லலாம். “இன்டிக்ரல் கோச் பேக்டரி” எனப்படும். இது, சென்னையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று.இங்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளார்கள் வேலை செய்கிறார்கள்.

புதன், 20 ஏப்ரல், 2016

தமிழ் எழுத்துக்கள்



                             தமிழ் எழுத்துக்கள்

முன்னுரை

        தமிழ் எழுத்துகளின் வகைகளையும்  அதை ஒலிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு  பற்றியும் சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழ் எழுத்துக்களை  உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.  

உயிர் எழுத்துக்கள்
     முதல் வரை உள்ள 12 எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கிறோம். உயிர் இன்றி எந்த உயிரும் உயிர் வாழ முடியாது, அதுபோல உயிர் எழுத்துக்கள் இன்றி எந்த எழுத்தையும் உச்சரிக்க முடியாது. பிற எழுத்துக்கள் பிறப்பதற்கு அடிப்படையாக இருப்பதால் உயிர் எழுத்து எனப் பெயர் பெற்றது. உயிர் எழுத்துக்களை தனியே ஒலிக்கலாம். உதாரணமாக அ-பசு, ஈ-உயிரினம்.

மெய் எழுத்துக்கள்
      க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துக்கள் மெய் எழுத்துகள் எனப்படும். மெய் எழுத்துக்களை தனியே ஒலிக்க முடியாது. தனியே ஒலித்தால் பொருள் தராது. க் தனியே ஒலித்தால் எந்த பொருளும் தராது. உயிர் இன்றி மெய் இயங்காது.
க் என்ற மெய் எழுத்திற்கு முன்னால் “இ” என்ற உயிரும் பின்னால் “உ” என்ற உயிரும் மென்மையாக சேரும் போது க் என்ற மெய் எழுத்து தோன்றுகிறது.

உயிர்மெய்எழுத்துக்கள்
     முதல் வரை உள்ள 216 எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எனப்படும். உயிரும் மெய்யும் சேர்ந்து தோன்றுவது உயிர்மெய் எழுத்தாகும். க் என்ற மெய் எழுத்தோடு “அ” என்ற உயிர் சேர்ந்தால் “க” என்ற உயிர்மெய் எழுத்து தோன்றுகிறது. இவ்வாறே பிற எழுத்துக்களும் தோன்றுகிறது.

மாத்திரை
     உயிர் மெய்  எழுத்தை  ஒலிக்க எடுத்துக் கொள்ளும்  கால அளவு மாத்திரை எனப்படும். ஒரு முறை கண்ணிமைக்கும் நேரம் அல்லது ஒரு முறை கைநொடிக்கும் நேரம் ஒரு மாத்திரை எனப்படும். எழுத்துக்களுக்கு ஏற்றார் போல் கால அளவு மாறுபாடுகிறது.

குறில் எழுத்துக்கள்
     ஒரு எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு குறைவாக இருந்தால் அது குறில் எனப்படும்.  அ, இ, உ, எ, ஒ போன்ற எழுத்துக்கள் ஒலிக்க  குறைந்த கால அளவு அதாவது ஒரு மாத்திரை கால அளவு எடுத்துக் கொள்வதால் இது குறில் எனப்படுகிறது.

நெடில் எழுத்துக்கள்
      ஒரு எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு அதிகமாக இருந்தால் அது நெடில் எனப்படும். ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ போன்ற எழுத்துக்களை உச்சரிக்க அதிக கால அளவு அதாவது இருமாத்திரை கால அளவு எடுத்துக் கொள்வதால் இது நெடில் எனப்படுகிறது.

மெய் எழுத்திற்குரிய மாத்திரை
      மெய் எழுத்துக்கள் குறுகிய காலத்தில் மறைந்து விடும். மெய் எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு அரை மாத்திரை ஆகும். உயிரும் மெய்யும் சேரும் போது உயிர் தெரியாது மெய் மட்டுமே தெரியும். க் என்ற மெய் எழுத்தோடு அ என்ற உயிர் எழுத்து சேரும் போது க என்ற உயிர்மெய் தோன்றும் க என்ற மெய்யே தெரியும். அ என்ற உயிர் எழுத்து தெரியாது.

ஆய்த எழுத்து
     ஆய்த எழுத்து எப்போதும் உயிருக்கும் மெய்யுக்கும் நடுவில் தான் இருக்கும். அஃது என்ற சொல்லில் வருவது போல உயிர்மெய் நடுவில் மட்டுமே ஆய்தம் இடம்பெறும். எனவே இது உயிருக்கும் மெய்யுக்கும் நடுவில் வைக்கப்படுகிறது. ஆய்த எழுத்து ஒலிக்க ஆகும் கால அளவு சில இடங்களில் ஒரு மாத்திரையாகவும் சில இடங்களில் இரண்டு மாத்திரையாகவும் இருக்கும்.

முடிவுரை
      இத்தகைய பாகுபாடு தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் இல்லை எனலாம். தமிழ் மொழியில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. இக்கட்டுரையில் தமிழ் எழுத்துக்களின்  வகைகளையும் அதை ஒலிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு பற்றியும் பார்த்தோம். 





செவ்வாய், 19 ஏப்ரல், 2016

குழந்தைகள் பயத்துக்கு பெற்றோரே காரணம்

                குழந்தைகள் பயத்துக்கு பெற்றோரே காரணம்
முன்னுரை


ஒரு குழந்தைப் பயப்படுகிறது என்றால், உடனே நாம் பயம் அவன் கூடவே பிறந்தது என்கிறோம். உண்மையில் பயம் என்ற உணர்வு குழந்தைகள் பிறக்கும் போது கூடவே பிறந்துவிடுகிறதா? இல்லை என்கிறது உளவியல். பயத்துக்கு காரணம் பொற்றோர்களே என்று மேலும் அது தெரிவிக்கிறது.
இளங்கன்று பயமறியாது

பெற்றோர்கள் தங்கள் குழந்தை தைரியமாக இருக்க வேண்டும் என்று, கருவாக இருக்கும் போதே நினைத்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நிச்சயமாக வாழ்வில் வெற்றியாளனாக திகழ்வான் என்று கூறுகிறது. மாறாக பெரியவர்களுக்கு பயந்து  குழந்தை கட்டுப்பாடோடு வளரவேண்டும் என்று நினைப்பவர்களின் குழந்தைகள், பயம் உடன் பிறந்ததாகி விடுகிறது. அதேபோல் குழந்தைகள் வளரும் பருவத்தில் சாப்பிடுவதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ “பூச்சாண்டி வருகிறான்” என்று பயமுறுத்தி வளர்த்தாலே வருங்காலத்தில் அவர்களுக்கு பயம் அதிகமாகி, தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு இருக்கிறது.
வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு
விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க
அவங்க வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க என்கிறது ஒரு பாடல்.

பயத்தின் அறிகுறிகள்
அதேபோல், “இவனுடன் பேசாதே”, “அவனுடன் பேசாதே” என்று கூறி  வளர்க்கப்படும் குழந்தைகள் ஒருவித பய உணர்ச்சியோடு வளருவார்கள். பயத்தை உளவியலாளர்கள் உடல்ரீதியாக, உணர்வு ரீதியாக என இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். உடல் ரீதியான பயத்திற்கு அதிக வியர்வை, வழக்கத்தை விட  அதிகமான இதயத்துடிப்பு போன்றவை அறிகுறிகள். எவ்வளவு பெரிய சோகம் என்றாலும் அதை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அழுவதும், முகத்தை கடுமையாக உர்ரென்று வைத்துக் கொள்வதும் உணர்வு ரீதியான பயத்தின் வெளிப்பாடுகள். பெரியமீசையோடு திரிபவர்களுக்குத்தான் அதிக பயம் இருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். பேய்ப் படங்கள் பயத்தை தருவதற்கு மட்டும் அல்ல, பயத்தைப் போக்குவதற்கும் பயன்படுமாம். அதற்காகவே சிலர் பேய்ப் படங்களை விரும்பிப் பார்க்கின்றனர்.
பயத்திற்கான காரணங்கள்
பயத்துக்கான காரணங்களில் ஒன்று, அளவு கடந்த எச்சரிக்கை உணர்வு கொண்டது. ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பே எதிர்மறையாக, நடந்து விடுமோ என்று பூதாகரமாக கற்பனை செய்து கொள்வதில் பயம் தொடங்குகிறது. மேலே சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறி கீழே விழுந்துவிடுமோ, பயணம் செய்யும் பேருந்து விபத்தில் சிக்கி விடுமோ, பாலத்துக்கு அடியில் போகும்போது அந்த  பாலம் இடிந்து தம் தலையில் விழுந்து விடுமோ என்றெல்லாம் நிறைய பேர் பயப்படுவதுண்டு. இத்தகைய பயத்தைப் போக்க முதலில் குழந்தைகளை வெளியுலகோடு பழக விட வேண்டும்.
முடிவுரை

 வீட்டுக்குள்ளே அடைத்து வைத்து வீடியோ கேம்ஸ் ஆடவிடும் போது அவர்களுக்கு பயமும் உணர்ச்சிவசப்படும்  தன்மையும் அதிகமாகி விடுகிறது. அதுமட்டுமல்ல, உடன் பழகும் நண்பர்கள் பயம் மிக்கவர்களாக இருந்தால், உங்களுக்கும் அந்த பயம் குணம் தொற்றி கொள்ளும் என்கிறார்கள். மனநல மருத்துவர்கள்.

சனி, 16 ஏப்ரல், 2016

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் எப்படி..??

அன்புடையீருக்கு வணக்கம்,

கடந்த வாரம் பங்குச் சந்தையில்  ஈடுபடுவர்களை பற்றி பார்த்தோம்.இப்பொழுது  பங்குச் சந்தையில் எவ்வாறு ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி காணலாம்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

அலுவலகங்கள்

              
Image result for அலுவலகம்

ஹந்தி – கார்யாலய்                       தமிழ் – அலுவலகங்கள்

1.ஆயகர் கார்யாலய்         -  வருமானவரி அலுவலகங்கள்
2.ஸர்காரீ தஃப்தர் சாஸகீய கார்யாலய்  -   அரசாங்க அலுவலகங்கள்
3.டாக்கர்                                - தபால் நிலையம்
4.த்தானா                              -  காவல் நிலையம்
5.ரேல்வே ஸ்டேஷன்       - ரயில்வே ஸ்டேஷன்
6.புஸ்தகாலய்                    -நூலகம்
7.பைங்க்                              - வங்கி
8.அதாலத் நியாலய்       -  நீதிமன்றம்
9.பத்ரிகா கார்யாலய்   -  பத்திரிக்கை அலுவலகம்

10.பத்தன் நியாஸ்         -  துறைமுகம்