திங்கள், 11 ஏப்ரல், 2016
ஏலாதி
முன்னுரை:
பதிணெண் கீழ்கணக்கு
நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் கணிமேதாவியர். இது 80 வெண்பாக்களைக் கொண்டது.ஏலம் முதலிய
வாசனைப் பொருட்களை சேர்த்து தயாரிக்கும் மருந்தை ஏலாதிப்பொடி என்றும் ஏலாதிக் குளிகை
என்றும் கூறுவர். இதை போன்று மனதிற்கு உகந்த நல்ஒழுக்கங்களை முதலாவதாக வைத்து புனையப்பட்ட
பாடல்களை உடையதால் இது ஏலாதி எனப்பட்டது.
பெரியோர்க்கு உரிய தன்மைகள்:
தானே ஒருவனை கொலை செய்யாமல் இருத்தல். பிறர் கொலை செய்தலையும்
விரும்பாதல், பொய் சொல்லாமல் இருப்பவர் பிறர் மனைவியை விரும்பாதவர். கீழ்மக்களுடன்
சேர்தலை விரும்பாதவர். தீய சொற்களை பேசாமல் இருத்தல் ஆகிய இயல்புகள் பெருந்தன்மையில்
பெரியவனுக்கு உரியனவாம்.
எளிது அரிது:
சாவது எளிது, அரிது,
சான்றாண்மை, நல்லது
மேவல் எளிது, அரிது,
மெய்போற்றல், ஆவதன் கண்
சேறல் எளிது, நிலை அரிது,
தெள்ளியர் ஆய்
வேறல் எளிது, அரிது,
சொல்.
விளக்கம்:
சாவது எளிது ஆனால் கல்வியில் சிறந்து விளங்குதல் அரிது திருமண
வாழ்வை ஏற்பது எளிது ஆனால் பற்றற்ற ஒழுக்கத்தை காத்தல் அரிது. துறவறத்தின் கண் செல்லுதல்
எறிது ஆனால் அதன் படு நடப்பது அரிது. எதனையும் சொல்லுதல் எளிது. ஆனால் தெளிந்து அதன்படி
நடத்தல் அரிது.
நண்பர்களுக்கான ஆறு குணங்கள்:
சாதல், பொருள் கொடுத்தல்,
இன்சொல், புணர்வு உவத்தல்
நோதல், பிரிவில் கவறலே,
ஓதலின்
அன்புடையார்க்கு உள்ளன
ஆறுகுணம் ஆக,
மென் புடையார் வைத்தார்
விரித்து
.
விளக்கம்:
நண்பர்கள் இறந்தவிடத்து
தாமும் துக்கம் தாங்காமல் இறத்தலும் அவர்களுக்கு பொருள்குடுத்து உதவி செய்தலும், இனசொல்
கூறுதலும், அவர்களுடன் இருப்பதை விரும்புதலும், அவர்கள் வருந்தும்போது வருந்துதலும்
, அவர்கள் பிரியும்போது, கலங்குதலும் ஆன ஆறு இயல்புகளும் நண்பர்களுக்கு இருக்க வேண்டிய
குணமாகும்.
மங்கையற்கு அறிவுரை:
மையேர் தடங்கண் மயில்
சாயலாய்!
மெய்யே உணர்ந்தார் மிக
உரைப்பர்; பொய்யே
குறளை, கடுஞ்சொல், பயன்இல்
சொல்நான்கும்
மறலையின் வாயினவாம்
மற்று.
விளக்கம்:
மைதீட்டிய
அழகான பெரிய கண்கனையுடைய மயிலைப் போன்ற பெண்ணே! சான்றோர் மேன்மையான நற்சொற்களையும்
மெய்யையும் மிகவும் பேசுவார்.பொய்யும் புறங்கூறலும் வன்சொல்லும் பயனில்லாத சொற்களும்
ஆகிய இவை நான்கும் புல்லறிவு உடையான் வாயில் வருவனவாம்.
உதவ வேண்டியவர்கள்:
தாய்இழந்த
பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி
வாய் இழந்த
வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார்
கைத்தூண்
பொருள் இழந்தார், கண்ணிலவாக்கு ஈந்தார்
வைத்து
வழங்கி வாழ்வார்
விளக்கம்:
தாயை இழந்த மகனுக்கும், தன் மணவனை இழந்த மனைவிக்கும்,
ஊமைக்கும், வாணிகத்தில் பொருள் இழந்தவர்க்கும், கண்ணில்லாத குருடர்களுக்கும் வேண்டுவன
கொடுத்தவர்கள் பொருளை மிச்சமாய் வைக்காமல் தனக்கும், மற்றவர்க்கும் கொடுத்து உதவுவர்.
முடிவுரை:
இவ்வாறு
வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை கணிமேதவியார் ஏலாதியில் கூறியுள்ளார்.
இனியவை நாற்பது
முன்னுரை:
பதிணெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று இனியவை நாற்பது.
இது நாற்பது வெண்பாக்களை கொண்டது. ஒவ்வொரு வெண்பாவிலும் 3 முதல் 4 கருத்துகள் இடம்
பெறுகின்றன. மக்கள் தங்கள் வாழ்வில் பின் பற்ற வேண்டிய இனிய செயல்கள் இந்நூலில் திரட்டித்
தரப்பட்டுள்ளன.மேலும் சங்க காலத்தில் நடைமுறையில் இல்லாத பழக்கங்கள் பற்றி இந்நூலில்
கூறுகிறது.
நட்பு கொள்ளுதல்:
குற்றங்களை செய்யாமல் தீய வழியை பின் பற்றாமல் நாடோறும்
சென்று கற்றல் மிக இனியவை, பிறரிடம் கடன் வாங்காமல் தன் மாட்டை கொண்டு உழுவுதல் மிக
இனியவை. அது போல் ஒருவரிடம் நட்பு கொள்ளும் போது அவரது குணத்தையும் பழக்கங்களையும்
நன்கு அறிந்து நட்பு கொள்ளுதல் வேண்டும்.
தரும செயல்கள்:
நம்மால் முடிந்தவரை
தரும செயல்களை செய்தல் மிக இனியவை, நன்னெறிப்பட்டார் சொல்லும் பயனுடைய சொல்லைக் கேட்டு
அதன் வழி பின்பற்றுதல் இனியவை.
மாட்சிமையுடைவரின்
செல்வம்:
குழந்தைகள் மிக
ஆரோக்கியத்துடன் எந்த நோய் நொடியும் இல்லாமல்
வாழ்வது இனியவை. சபையில் அஞ்சாதவனாய் சபைகேற்ற கருத்துகளை சொல்பவனின் கல்வி
இனியவை. எந்த பொருளின் மீதும் மயக்கம் இல்லாதவராய் உள்ளத்தில் மாட்சிமை உடையவரை அடையும்
செல்வம் நீங்காமல் இருப்பது இனியவை.
குற்றம் இல்லாமல்
வாழ்தல்:
சமூகத்தில் தனது
மானம் இழந்த பின் உயிர்வாழாமல் இருப்பது இனியவை. தான் பெரியன் என்று கூறிக்கொண்டு வாழாமல்
பிறரிடத்தில் அடங்கி வாழ்வது இனியவை.அது போல் குற்றம் ஒன்றும் செய்யாமல் நல்ல வழியில்
பொருள் ஈட்டியதும் பொருளுடைமையும் எல்லா மக்களுக்கும் இனியவை.
பிறக்கு கொடுத்தல்
இனியவை:
நன்கு கற்றவர்
முன் தன் கல்வியை சொல்லி பெருமையடைவது இனியவை. எள்ளவும் பிறரிடம் இரவாமல் தன்னிடம்
இருப்பதை பிறக்கு கொடுத்து வாழ்வது இனியவை.
ஆராய்ந்து வாழ்தல்:
பிறர் பொருளை அபகரிக்காமல்
தன் பொருளைக் கொண்டு வாழ்வது இனியவை. பாவங்களை செய்து சேர்க்காமல் அறம் செய்து வாழ்வது
இனியவை. மறந்தும் கூட நல்ல குணங்கள் இல்லாதவரிடம் சேராமல் நல்ல வழியை ஆராய்ந்து அறிந்து
வாழ்தல் இனியவை.
வேறுபடாமல் வாழ்தல்:
தனக்கு பொருள்
வருகின்ற நெறியினை அறிந்து பிறக்கு கொடுத்தல் இனியவை. பெரிய பயனையுடைதாம் விரும்பியவற்றை
ஆராய்ந்து செய்யாதவராய் தாயினும் தம்மியல்பின் வேறுபடாமல் வாழ்வது இனியவை.
பொருளை அபகரிக்காமல்
வாழ்தல்:
ஒருவன் செய்த நன்றியின்
பயனைக் கருதி வாழ்வது இனியவை, சபையில் ஒரு சார்பாக மாட்சிமையோடும் வாழ்தல் இனியவை.
அறிவில்லாதவரிடம் இருக்கும் பொருளை அபகரிக்காமல் வாழ்வது மிகவும் இனியவை.
முடிவுரை:
அவ்வாறு கூறப்படும்
கருத்துகளை, நல்ல செயல்களை பின் பற்றி வாழ வேண்டும் என்று பூதஞ் சேந்தனார் கூறுகிறார்.
ஞாயிறு, 10 ஏப்ரல், 2016
பழங்களின் பெயர்
ஹந்தி -ப்பல் தமிழ் - பழம்
1.ஆம் மாம்பழம்
2.அங்கூர் திராட்சை
3.கேலா வாழைப்பழம்
4.அனார் மாதுளம்பழம்
5.அம்ருத் கொய்யாப்பழம்
ஞாயிறு, 3 ஏப்ரல், 2016
பங்குச் சந்தைக்கு நேரமாச்சு.. (தொடர்ச்சி)
அன்புடையீருக்கு வணக்கம்,
பங்கு வர்த்தகம் என்றால் என்ன என்பது தெரியாமலும் தெரிந்தும் அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது அதில் இலாபம் அதிக அளவில் கிடைக்குமா..???அல்லது நஷ்டம் தான் அதிகளவில் கிடைக்குமா..???இல்லை அதில் முதலீடு செய்வது எந்த அளவிற்கு பயனை நம்மால் அடைய முடியுமா என்ற எண்ணத்தோடு குழம்பி தவிப்போருக்கான ஒரு சிறிய தெளிவை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகளை மட்டும் பார்த்து வருகிறோம்.இந்த வாரம் பங்குச் சந்தையில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு வகைக்களாக பிரிக்கலாம் என்பதை பற்றி காணலாம்.
பங்கு வர்த்தகம் என்றால் என்ன என்பது தெரியாமலும் தெரிந்தும் அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது அதில் இலாபம் அதிக அளவில் கிடைக்குமா..???அல்லது நஷ்டம் தான் அதிகளவில் கிடைக்குமா..???இல்லை அதில் முதலீடு செய்வது எந்த அளவிற்கு பயனை நம்மால் அடைய முடியுமா என்ற எண்ணத்தோடு குழம்பி தவிப்போருக்கான ஒரு சிறிய தெளிவை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகளை மட்டும் பார்த்து வருகிறோம்.இந்த வாரம் பங்குச் சந்தையில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு வகைக்களாக பிரிக்கலாம் என்பதை பற்றி காணலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)