செவ்வாய், 8 மார்ச், 2016

அடிசன் அன்ட் ஸ்டீல்

அடிசன் அன்ட் ஸ்டீல்(18ஆம் நூற்றாண்டு)

இவர்கள் இருவரும் வார இதல்களின் தந்தை எனக்கருதப்படுவர்.இவர்கள் வாழ்ந்த காலத்தில் மக்கள் புது விதமான இலக்கியத்தை வார இதழ்கள் மூலம் எதிர்ப்பார்த்தனர்.மேலும் அலெக்ஸான்டர் போப் ஆண்டில்,
                        டானியல் டிஃஓ
                        ஜொனாத்தன் ஸ்விஇப்ட்
                        சர் ரிச்சார்ட் ஸ்டீல் மற்றும்
                        ஜொசப் அடிசன்   
என்பவர்களும் சிறந்த வார எழுத்தாளர்களாக கருதப்பட்டனர்.
இவர்கள் இருவரும் பதினெட்டாம் நாற்றாண்டில் சிறந்த இடத்தை தமக்கென தக்கவைத்துக் கொண்டனர்.
அடிசன்:
இவர் ஒரு நகரவாசி.மிகவும் கூச்ச சுபாகம் உடையவர்,தன் நம்பிக்கை உடையவர் மற்றும் கட்டுப்பாடுடையவர்.முக்கியமான இவரது படைப்புகள்,
                        ``தி கெம்பைன்’’
                        ``கேடொ’’
                        ``ரொசமன்ட்’’
                        ``தி டிரூமர்’’
என்பனவாகும்.இவர்கள் இருவரும் சேர்ந்து``தி ஸ்ப்பெக்டேட்டர்’’என்ள இதழைத் தொடங்கினர்.இதில்``சர் ரேஜர் டி கவர்ட்லீ’’என்ற கற்பனை கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தினர்.


ஸ்டீல்:
இவர் ஒரு மேதை.இவர் அடிசனுடன் பொது அறங்கில் அரசியல் சார்பாக பல வாதங்களை மேற்க்கொண்டாலும் படைப்புலகத்தில் இருவரும் ஒன்று சேர்திடுவர்.இவரது படைப்புகள்,
                  தி ஃயூனரல்
                  தி லையிங் லவ்வர்
                  தி டின்டர் ஹஸ்பன்ட்டு
                  தி கான்சியஸ் லவ்வர்ஸ்
                  தி இங்கிலிஷ்மென்
என்பன குறிப்பிடத்தக்கன.


            

டாக்டர் சாமுவெல் ஜான்சன்

                                                 டக்டர்.ஜானெசன்(18ஆம் நூற்றாண்டு)

டாக்டர் சாமுவெல் ஜான்சன் ஒரு கவிஞர்,மருமொழி கூறுபவர், கட்டுரையாலர்,நாவலர்,மற்றும் லொக்ஸிகோகிராப்பர்.இவர் கடிதங்கள் எழுதுவதிலும் மொழிபெயர்ப்பிலும் வல்லவர்.இவர் லண்டன் என்ற கவிதையை``கெவ்ஸ் மாகசினில்’’வெளியிட்டு அதில் தம்மை இனைத்துக்கொண்டார்.பின்னர்``தி வனிடி ஆஃப்ஹூமன் விஷ்ஷஸ்’’ மற்றும் சோகக்கதையான``ஐரன்’’என்ற கதையை நியே கிலாசிகள் முரையில் எழுதினார்.அவர் ஒரு வார இதலான``தி ராம்ப்லர்’’ என்பனைத் தொடங்கினார்.அதனை அடுத்து``தி அட்வென்ச்சுரர்’’,``தி இட்லர்’’என பல்வேறு வார இதல்களைத் தொடங்கினார்.இவை அனைத்திலும்``தி ராம்ப்லர்’’ புகழ் பெற்றதாகும்.

மேலும் இவர் ஆங்கில வார்த்தைகளுக்கான அற்த்தத்தை தெறிந்துகொள்ளும் வகையில்``டிக்ஸ்னரியை’’இந்த உலகிற்கு அறிமுகம் செய்தார்.இவரது வேறு படைப்புகள்,
            ஷெக்ஸ்ப்பியர்(மருமொழி கூறும் நூல்)
            ராசிலஸ்(தத்துவக் கதைகள்)
            தி லவ்ஸ் ஆப் தி மொஸ்ட் எமினன்ட் இங்கிலிஷ் போயட்ஸ்
என்பனவாகும்.இவர் பின்னர்``வொஸ்ட் மினிஸ்டர் அபே’’என்னும் இடத்தில் புதைக்கப்பட்டார்.இந்த இடத்தில் கவிஞர்களை மட்டும் தான் புதைப்பர்.
இவரது எழுதும் நடை:

இவர் படைப்புகளில் நாகரீகம்,அதிக அளவு பொது அறிவுடன் எழுதுவார். இவரின் தரமும் சுவையும் இவரை ஒரு கன்சர்வேட்டிவ்(அரசியல் கட்சி) என்று உணர்த்துகிரது.பொதுவாக இவர் ஒரு எதிற்மறை நபர்.ஜன்சன் ``லைப் ஈஸ் புராக்ரஸ் ஃரம் வான்ட் டு நாட் ஃரம் எஞ்சாய்மென்ட் டு எஞ்சாய்மென்ட்’’ என்பார்.

வாய்ப்புக்களை உருவாக்குவோம் சாதனை படைப்போம்

விண்வெளியில் கால் பதித்த கல்பனா சாவ்லாவோ;
தன் முதுகில் குழந்தையை சுமந்து; கையில்
வாளை ஏந்தி போர் புரிந்த ஜான்சி ராணியோ;
பாரதத்தின் முதல் பெண் மருத்துவரான
     முத்துலட்சுமி ரட்டியோ;
பாரதத்தின் முதல் பெண் நீதிபதியான
     பத்மினி ஜேசுதுரையோ;
பாரதத்தின் முதல் பெண் காவல் துறை அதிகாரியான
     கிரண் பேடியோ;
வாய்ப்புக்காக காத்திருக்கவில்லை!
தன் இலட்சியத்தின் வழி வாய்ப்புக்களை
உருவாக்கிக் கொண்டதால் தான் சாதனை
என்னும் சிகரத்தை எட்டிப்பிடித்தார்கள் ஆனால்
நாம் மட்டும் ஏன் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்?
இந்த மகளிர் தினத்தில் இருந்தாவது வாய்ப்புக்காக
காத்திருக்காமல் வாய்ப்புக்களை உருவாக்கி

சாதனை படைக்க முயற்சிப்போம்!

சி.ஆர்.பி.எஃப்-ல் 3136 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.!!


இந்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான சி.ஆர்.பி.எஃப் என அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஜம்மு-காஷ்மீர் மண்டலம், தெற்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மத்திய மண்டலங்களில் காலியாக உள்ள 3136 டெக்னீஷியன் மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image result for c r p f logo

மொத்த காலியிடங்கள்: 3136

காலியிடங்கள் விவரம்:

தெற்கு மண்டலத்தில் - 888

தமிழ்நாடு - 157

ஆந்திரா - 127

தெலுங்கானா - 89

கர்நாடகா - 122

கேரளா - 71

பாண்டிச்சேரி - 02

மகாராஷ்டிரா - 190

குஜராத் - 127

கோவா - 03

ஜம்மு - காஷ்மீர் - 560

மத்திய மண்டலம் - 1247

வடகிழக்கு மண்டலம் - 441

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம், ஐ.டி.ஐ (2 ஆண்டு). டிப்ளமோ மற்றும் பணி சார்ந்த அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 01.01.2016 தேதியின்படி ஓட்டுநர் பணிக்கு 21 - 27க்குள்ளும், இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 - 23க்குள் இருக்க வேண்டும்.

உடற்தகுதி: உயரம்: ஆண்கள், குறைந்தபட்சம் 170 செ.மீட்டரும், பெண்கள் 157 செ.மீட்டரும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு: ஆண்கள் சாதாரண நிலையில் 80 செ.மீட்டர் விரியும் திறன் கொண்டிருக்க வேண்டும். உயரம், வயதிற்கேற்ற எடையும், குறிப்பிட்டப்பட்டுள்ள அளவு பார்வைத்திறனும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.crpfindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.50.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.crpfindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கிழக்கு மத்திய ரயில்வேயில் 246 பணி.!!

கிழக்கு மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 246 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image result for east central railway hajipur


மொத்த காலியிடங்கள்: 246

பணி: கான்ஸ்டபிள்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை இந்திய அஞ்சல் வில்லையாக அல்லது வங்கி வரைவோலையாக Financial Advisor & Chief Accounts Officer, East Central Railway, Hajipur என்ற பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, உடல் அளவீட்டு தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

விண்ணப்பிக்கும் முறை: www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

IG-Chief Security Commissioner,

East Central Railway, Hajipur,

Pin Code- 844 101, Bihar

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.