புதன், 10 பிப்ரவரி, 2016

வணிக கண்காட்சி 2016


பெரியார் பல்கலைக் கழக வணிகப் படிப்பு புலம் (10.02.2016) இன்று ’வணிக கண்காட்சி 2016’ நிகழ்வினை பெரியார் பல்கலைக் கழக கலை அரங்கில் நடத்தினர்.இக்கண்காட்சியில் 100 க்கும்அதிகமாக பல்வேறு  துறைகள் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. 



மேலும்  அந்த கண்காட்சியில் ஒரு புலத்தைக் கண்டு வியந்துப் போனேன், அதாதவது  ஒரு பையன் ஏழை விவசாயி போன்ற உடையில் ஒரு மண்வெட்டியை தோளில் சுமந்து அந்த விவசாயிக்கு நேர்ந்த  துன்பத்தை அழகாக காட்சிப்படுத்தினார்.விவசாய நிலம், தொழில் நுட்பமாக மாறியதால் விவசாயி அடையும் துயரம் அருமையான காட்சிப்படுத்தினார்.



 காப்பீடுக் குறித்து,தூண்டும் விதத்தில் புத்தங்களையும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.விண்வெளியிக்கு சென்றால் எப்படி இருக்கும் அதாவது கோள்களைக் குறித்தும் ஒரு புலம் இருந்தது.வியாபார நுணுக்கத்தோடும் இக்கண்காட்சி அமைந்தது.



வாகனப்புகையால்  காற்று மாசடையாமல் எவ்வாறு தடுப்பதுக் குறித்தும் ஒரு புலம் அமைக்கப்பட்டது.



தமிழால் சொல்ல முடியும் எண்களின் பெயர்..!!



==தமிழில் கீழ்வாய் எண்கள்==



* 15/16 = 0.9375 = முக்காலே மூன்று வீசம்

* 3/4 = 0.75 = முக்கால்

* 1/2 = 0.5 = அரை

* 1/4 = 0.25 = கால்

* 1/5 = 0.2 = நால்மா/நான்மா

* 3/16 = 0.1875 = மூன்று வீசம்

* 3/20 = 0.15 = மூன்றுமா

* 1/8 = 0.125 = அரைக்கால்

* 1/10 = 0.1 = இருமா

* 1/16 = 0.0625 = வீசம்

* 1/20 = 0.05 = மா

* 3/64 = 0.046875 = முக்கால் வீசம்

* 3/80 = 0.0375 = முக்காணி

* 1/32 = 0.03125 = அரை வீசம்

* 1/40 = 0.025 = அரை மா

* 1/64 = 0.015625 = கால் வீசம்

* 1/80 = 0.0125 = காணி

* 3/320 = 0.009375 = அரைக்காணி முந்திரி

* 1/160 = 0.00625 = அரைக் காணி

* 1/320 = 0.003125 = முந்திரி

* 3/1280 = 0.00234375 = கீழ் முக்கால்

* 1/640 = 0.0015625 = கீழ் அரை

* 1/1280 = 0.00078125 = கீழ்க் கால்

* 1/1600 = 0.000625 = கீழ் நால்மா

* 3/5020 = 0.000597609 = கீழ் மூன்று வீசம்

* 1/2560 =0.000390625 = கீழ் அரைக்கால்

* 1/3200 = 0.0003125 = கீழ் இருமா

* 1/5120 = 0.000195312= கீழ் மாகாணி

* 1/6400 = 0.00015625 = கீழ் மா

* 3/25600 = 0.000117187 = கீழ் முக்காணி

* 1/12800 = 0.000078125 = கீழ் அரைமா

* 1/25600 = 0.000039062 = கீழ்க்காணி

* 1/51200 = 0.000019531 = கீழ் அரைக்காணி

* 1/102400 = 0.000009765 = கீழ் முந்திரி}

*1/2,150,400= இம்மி

*1/23,654,400= மும்மி

*1/165,580,800= அணு

*1/1,490,227,200= குணம்

*1/7,451,136,000= பந்தம்

*1/44,706,816,000= பாகம்

*1/312,947,712,000= விந்தம்

*1/5,320,111,104,000= நாகவிந்தம்

*1/74,481,555,456,000= சிந்தை

*1/1,489,631,109,120,000= கதிர்முனை

*1/59,585,244,364,800,000= குரல்வளைப்பிடி

*1/3,575,114,661,888,000,000= வெள்ளம்

*1/357,511,466,188,800,000,000= நுண்மணி

*1/2,323,824,530,227,200,000,000= தேர்த்துகள்

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

சங்கு கல் மண்டபங்கள்


            சங்கு கல் மண்டபங்கள்
முன்னுரை

இன்றைக்கு செயற்கைக்கோள்கள் இருக்கின்றன. ரமணன் இருக்கின்றனர் மழையைப் பற்றி சொல்ல. அன்றைக்கு இரண்டுமே இல்லை. மழையையும், வறட்சியையும், கணிக்க முடிந்த மனிதனால் ஆற்றில் மளமளவென்று உயரும் வெள்ளத்தை கணிக்க முடியவில்லை. ஒரு வெள்ளம் பல உயிர்களை காவு வாங்கிவிடும். ஒவ்வொரு வெள்ளத்திலும் சொந்த பந்தங்களை இழந்த நம் முன்னோர்கள் உயிரிழப்பை தடுக்க ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார்கள். அதுதான் சங்கு கல்மண்டபம்’ .        
கல் மண்டபத்தின் அமைப்பு
தலைமை கிராமத்தின் அருகில் ஆற்றின் மையத்தில் இந்த கல்மண்டபத்தை அமைத்திருப்பார்கள். இந்த மண்டபம் மூன்று பக்கமும் திறந்த அமைப்புடன் இருக்கும். ஆற்றின் நீர் வரும் பகுதியில் மட்டும் கல் சுவர் வெளிப்பகுதியில் உச்சியில் ஒரு பிரம்மாண்டமான சங்கு பதித்திருப்பார்கள். இது ஆற்றங்கரை உயரத்துக்கு இணையாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த சங்கு மட்டத்திற்கு நீர் உயர்ந்துவிட்டால் அடுத்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்துவிடும்.
அருமையான தொழில்நுட்பம்

 இதில்தான் ஒரு அருமையான தொழில்நுட்பத்தை வைத்திருக்கிறார்கள். வழக்கமான நீர் மட்டத்தைவிட ஆற்றின் நீர் மட்டம் உயருகிறது என்றால் இந்த சங்கு ஒலிக்கத் துவங்கும். நதி நீரின் வேகமும் உயரமும் கூடும்போது அது ஒருவிதமான காற்றழுத்தத்தை ஏற்படுத்தும். அந்த காற்றழுத்தம் கூடக்கூட சங்கின் ஒலியும் கூடிக்கொண்டே வரும்.  இதுதான் வெள்ளம் வரப்போகிறது என்பதற்கான அபாய அறிவிப்பு. உடனே தாய்க் கிராமம் சுறுசுறுப்பு அடையும். தனது கட்டுப்பாட்டில் வெள்ளம் வரக்கூடிய அபாயம் உள்ள ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு தண்டோரா மூலம் வெள்ளம் வருகிறது என்ற செய்தியை அறிவிக்கும். நீரின் வேகத்தை வைத்து எத்தனை மணி நேரத்தில் ஆற்று வெள்ளம் கரையைக் கடந்து ஊருக்குள் புகும் என்பதை சங்கு ஒலிக்கத் தொடங்கியதுமே கணித்துவிடுவார்கள்.
பாதுகாக்கப்படும் மக்கள்

இப்படி எதிர்பாராத வெள்ளம் வந்துவிட்டால் தங்குவதற்கென்ற உயரமான பகுதியில் ஒரு கோவில் மண்டபத்தில் ஊர்மக்கள் அனைவரும் தங்கிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக கட்டியிருப்பார்கள். வெள்ளம் வடியும் வரை கிராமத்தின் சார்பாக அனைவரும் கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள். சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயர  உயர சங்கின் சத்தமும் அதிகமாகிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு மட்டத்திற்கு நீர்மட்டம் வந்துவிட்டது என்று அர்த்தம். ஆற்றங்கரையைக் கடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்துவிட்டது என்று பொருள். பாதுக்காப்பான மண்டபத்தில் தங்கியிருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்வார்கள். நீர்மட்டம் குறையும்போது மீண்டும் சங்கு ஒலிக்கத்துவங்கும். அப்போது மக்கள் அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டு விட்டோம். வெள்ளம் வடியத் தொடங்குகிறது என்று தெரிந்து கொள்வார்கள். நீர் வடியும் போது உக்கிரமாக ஒலிக்கும் சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக  குறைந்து  அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி.
இல்லாமல் போன சங்கு கல்மண்டபம்



 மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள். பல கிராமங்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. தாமிரபரணி போன்ற ஒருசில நதிகளில் வெகு அபூரவமாக சங்கு கல்மண்டபங்கள் இன்றும் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை.

முடிவுரை
சிறுவயதில் ஆற்றுக்கு நடுவே மண்டபங்களை பார்க்கும்போது தேவையில்லாமல் எதற்கு ஆற்றுக்கு நடுவே மண்டபத்தை கட்டிவைத்திருக்கிறார்கள் என்று நினைப்பதுண்டு. இப்போது தான் தெரிகிறது அவை ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய உன்னதங்கள் என்று. நம் முன்னோர்கள் எதையும் தேவையில்லாமல் ஏற்படுத்தவில்லை. நாம்தான் அவற்றை தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டோம்.  

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

மூலதனம் என்றால் என்ன..?


மூலதனம்;

ஐம்பது ரூபாயில் 30 ரூபாயை எடுத்துக் கொண்ட முதலாளி அதில் 20 ரூபாயை தன்னுடைய செலவுக்கு எடுத்துக் கொண்டு மீதி 10 ரூபாயை தொழில் விருத்திக்காக பயன்படுத்துகிறார் என்றால் அந்த 10 ரூபாய் தான் மூலதனம்.உபரிமதிப்பின் எந்த பகுதி மீண்டும் உபரி மதிப்பைத் தோற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகிறதோ அந்த பகுதியே மூலதனம்.

மூலதனம் மற்றும் உபரிமதிப்பு;

மூலதனம் உபரிமதிப்பைத் தோற்றுவிக்கும்.உபரிமதிப்பு மூலதனத்தை பெருக்கும்.மூலதனமும் உபரிமதிப்பும் இரண்டும் எதிர் எதிர் கூறுகள்(இயங்கியலின் முதல் விதியான எதிர் கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்).



கூலியும் உபரிமதிப்பும்;

கூலியையும் உபரிமதிப்பையும் முறையே தொழிலாளியும் முதலாளிலும் எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்ள  வேண்டும் என்பதைத் தான் முதலாளித்துவ அறிஞர்கள் கணக்கிட்டனர்கள்.பிரச்சனையின் தீர்வாக இருவரும் அதை (கூலியையும் உபரிமதிப்பையும்)நியாமான முறையில் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தான் அவர்கள் கூறினார்கள்.
முதலாளித்துவ அறிஞர்கள் பிரச்சனையின் முடிவை எந்த இடத்தில்  கண்டார்களோ,அதே இடத்தில் தான் சிக்கலின் ஆணிவேர் இருக்கிறது என்று மார்க்ஸ் நிருபித்தார்.மூலதனத்துக்கும் உபரிமதிப்புக்கும் இடையே உள்ள முரண்பாட்டால் முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும்  அளவு மாற்றம் எப்படி இருக்கும் ..??




உபரிமதிப்பை எப்படி அதிகரிக்கலாம் என்று தான் தினமும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.அவருக்கு இரண்டு வழிகள் உள்ளன.
1.கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு  நேரத்தை அதிகப்படுத்துவது.
2.அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது.

அதென்ன கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது..??


முதலாளித்துவத்தின் ஆரம்பத்தில் ஒரு நாளில் வேலை நேரம் என்பது 16 மணி என்று கூட இருந்தது.தொழிலாளிகளின் இடைவிடாத போராட்டத்தால் அது 8 மணிநேரமாக குறைக்கப்பட்டது.உபரி உழைப்பின் நேரத்தை அதிகப்படுத்துவதில் ஒரு எல்லை உண்டு.அதாவது தொழிலாளிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.இல்லையென்றால் அவரால் தொடர்ந்து வேலைக்கு வர முடியாமல் போய்விடும்.எனவே முதலாளிகள் இரண்டாவது  வழியே பின்பற்ற ஆரம்பித்தார்கள்.அதாவது அவசியமான வேலை நேரத்தை குறைப்பது.கடந்த அத்தியாத்தில் சொல்லப்பட்ட உதாரணத்தில் அவசியமான உழைப்பு நேரம் 8 மணி நேரம் பார்த்தோம்.அதாவது ரூ.230 மதிப்பிலான ஒரு பொருள் 8 மணி நேரத்தில் தயாரிக்கப்படுகிறது.புதிய தொழில்நுட்பத்தின் காரணமாக  அதே ரூ.230 மதிப்பிலான பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்,என்ன ஆகும்..??இன்னொரு 4 மணி நேர உழைப்பு உபரி உழைப்பு என்றாகிறது.

ஒரு நாள் வேலை;

ஒரு நாளின் 12 மணி நேர வேலை நாளில் முதலில் அவசியமான உழைப்பு நேரம் 8 மணி நேரம் என்றும் 4 மணி நேரம் என்றும் இருந்தது.இப்போது அவசியமான உழைப்பு நேரம் 4  என்றும் உபரி உழைப்பின் நேரம் 4 மணி நேரம் என்றும் ஆகிறது.ஒரு பொருளின் மதிப்பு என்பது உழைப்பின் கால அளவைப் பொருத்தது என்று முன்பே பார்த்திருந்தோம்.8 மணி நேரத்தில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்பட்டால் அதன் மதிப்பு பாதியாக குறையும்.எனவே எந்த ஒரு முதலாளியும் தங்களின் தொழில் நுட்பத்தை வெளியிடமாட்டார்கள்.தாங்கள் மட்டுமே அதை பயன்படுத்தி லாபம் பார்ப்பார்கள்.



தொழில்நுட்பம் வளர உபரி மதிப்பு அதிகம்;

எல்லா முதலாளிகளும் அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தால் அந்த பொருளின் மதிப்பும் குறைந்துவிடும்.பிறகு மீண்டும் வேறொரு தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு முதலாளிகள் தள்ளப்படுவார்கள்.எனவே முதலாளித்துவம் சுய லாபத்துக்காக தொழில் நுட்ப வளர்ச்சியை துரிதப்படுத்தியே தீரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறது.எந்த சமூக அமைப்பின் காலக்கட்டத்திலும் இல்லாத தொழில் நுட்ப வளர்ச்சி முதலாளித்துவ சமூகத்தில் நடைப்பெறுவதற்கு காரணம் இதுதான்.தொழில்நுட்பம் வளர வளர உபரி மதிப்பும் அதிகமாகிறது.மூலதனமும் அதிகரிக்கிறது.

முடிவுரை;

முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை என்பது வரைமுறையற்ற உற்பத்தியைக் கொண்டுள்ளது.எனவே ஒரே பண்டத்தை உற்பத்தி செய்யும் முதலாளிகள் தங்களுக்குள் போட்டியிடுகின்றனர்.தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒரு சில முதலாளிகள் மற்ற முதலாளிகளை வீழ்த்தி பெருகப் பெருக  அவர்கள் அமைப்பு  ரீதியில்  அணிதிரண்டு புரட்சி செய்யும் போது சமூக மாற்றம் ஏற்படும் அது ஒரு சோஷியலிச அரசாக இருக்கும்.   





பசித்திருக்கும் வயிறுகள்; பாழாகும் தானியங்கள்;



உணவு தானியச் சேமிப்புக் கிடங்குகள்;

நமது நாட்டில் போதிய தரமான உணவு தானியச் சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் ஆண்டிற்கு  58,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் வீணாகிப் பாழாகின்றன.இந்த விவரம் இப்போது கூறப்பட்டதல்ல,இரண்டரை ஆண்டுகளுக்க முன்பே நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் அளித்த பதில்தான் இது.அதில் நாடெங்கிலும் கிடங்குகளில் பாழாகிக் கொண்டிருக்கும் 10 லட்சம் டன் உணவு தானியங்களை ஏழை எளியோருக்கு  இலவசமாக வழங்க உத்திரவிட்டதுடன், இது அமைச்சகத்துக்கு ஆலோசனை அல்ல,ஆணை என்று கூறி எச்சரித்தது.இதனைத் தொடர்ந்து நம் நாட்டில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் 8 கோடி குடும்பங்களில் 1.5 கோடி குடும்பங்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் விநியோகிக்க அரசு ஆவன செய்து வருவதாகக் கூறப்படுகிறது.


உலகில் பசியால் வாடும் 100 கோடி மக்களில் மூன்றில் ஒருவர் அதாவது 33 கோடிப் பேர் இந்தியர்கள் என்பதும் ஒவ்வொரு இரவும் நான்கில் ஓர் இந்தியன் பட்டினியாகப் படுக்கைக்குச் செல்கிறான் என்பதும் இந்தியக் குழந்தைகளில் ஏறக்குறைய பாதிக்குமேல் சத்தான உணவின்றி எடை குறைவாக உள்ளனர் என்பதும் நம் இந்திய அரசுக்குத் தெரிந்திருந்தும் இந்த மெத்தனப் போக்கு ஏன்..??




சீனா மற்றும் அமெரிக்காவின் வருவாய்;

சீனாவிலும்  அமெரிக்காவிலும் மக்கள் தங்கள் வருவாயில் ஆறில் ஒரு பங்கை மட்டுமே உணவுப் பொருட்களை வாங்கச் செலவிடும் நிலையில் அதற்கு இரண்டு மடங்கு அதிகமாக இந்தியாவில் நாம் நம் வருவாயில் மூன்றில் ஒரு பங்கைச் செலவழிக்கிறோம்.காரணம் விலைவாசி என்று கூறுவர்.

உழவனின் நிலை;

சரி,உற்பத்தி செய்யும் உழவனுக்குத் தான் இதன் பலன் செல்கிறது என்று எண்ணினால் நாம்தான் ஏமாறுவோம்.உண்மையில் டன் டன்னாக உணவை நாட்டு மக்களுக்காக உற்பத்திசெய்து தரும் நம் உழவன் தன் குடுபத்தினருக்கு உணவளித்துப் பாதுகாக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்கின்றான்.அதனால்தான் நம்நாட்டில்   1991 முதல் 2001 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 80 லட்சம் விவசாயிகள் தங்களுக்கு தெரிந்த ஒரே தொழிலான விவசாயத்தை விட்டு நகர்ப்புறத்துக்குக் கையேந்தும் கூலியாகச் சென்றுவிட்டனர்.அதினும் கொடுமை 1997 முதல் 2007 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார்  இரண்டு லட்சம் விவசாயிகள் வறுமை பொறுக்க முடியாமல் குடும்பம் குடும்பமாகத் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்பது.இவ்வாறு உற்பத்தி செய்யும் உழவனும் உயிர்விட ஏழை மக்கள் பசித்த வயிறுடன் வாழ பொதுமக்கள் விலைவாசி ஏற்றத்தால் வதைபட அரசு சரியான தீர்வைக்காண முனைந்து செயல்படாதது வேதனையை அளிக்கிறது.உலகின் மிகப்பெரிய இரயில் போக்குவரத்துக் கொண்ட நம் நாட்டில் தனியாக தொடர்வண்டித் துறைக்கென்று நிதிநிலை அறிக்கை மற்றும் தொடர் கண்காணிப்பு இருக்கும்பொழுது  சீனாவை அடுத்து உலகில் அதிக உணவு உற்பத்தி செய்யும் நம் நாட்டில் ஏன் தனி ஒரு வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரித்து தீவிரக் கண்காணிப்போடு செயல்படுத்தக் கூடாது..??

முடிவுரை;

வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் 41 கோடிமக்களைக் கொண்ட நம் நாடு உயரவேண்டுமெனில் அவர்களையும் நாட்டுக்கு முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளையும் சேர்த்துதான் வளரமுடியும்.அவர்களை நாட்டின் பாரம் அல்ல.அவர்கள் தான் நாட்டின் பலம் அஸ்திவாரம்.இவர்களையும் சேர்த்து வளர்ந்தால் மட்டுமே  அது வளர்ச்சி.இவர்களை சேர்த்து இல்லாத வளர்ச்சி அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போல பொடிப்  பொடியாகிவிடும்.இதனை உணர்ந்து அடிப்படையை அறுத்துக் கொண்டு வளர முயலாமல் சேர்த்துக் கொண்டு வளர முயலாமல் சேர்த்துக் கொண்டு சீர்பட வாழ்வோம் நேர்பட உயர்வோம்.



வயிறுகள் வாடாது தானியங்களைக் காத்திடுவோம்..!!

பயிர்கள் விளைத்திடும் உழவர்களை உயர்த்திடுவோம்..!!