13.01.15 அன்று கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கோலப்போட்டி, பண்பாட்டு அணிவகுப்பு, நெருப்பின்றி சமைத்தல், இசைமேடை, பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பொங்கல் வைத்து தமிழர் பண்பாட்டை நினைவுகொள்வதாக இவ்விழா அமைந்தது.
வியாழன், 14 ஜனவரி, 2016
ஞாயிறு, 10 ஜனவரி, 2016
ஷேக்ஸ்பியருக்கு பிறகு யார்?
ஆங்கிலத்தில் பல எழுத்தாளர்கள் எனினும் சிலர் மட்டுமே எவருடனும் ஒப்பிட முடியாதவகையில் தம்
படைப்புகளை தந்துள்ளனர். இந்த வகையில் ஆங்கில இலக்கியத்தை பற்றி சிந்திக்கும்போது நம்
நினைவுக்கு வரும் முதல் எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். தம் கதாப்பாதிரங்களாலும்,ஒரு சாதரண செய்தியை
விவரித்துக்கூறுவதிலும்,இந்த உலகம் முழுவதிலும் பெருமளவில் புகழ் பெற்றார். இந்த வகையில்
எல்லா இலக்கிய கூறுகளையும் பின்பற்றி, அரிய பல கருத்துக்களை இவ்வுலகிற்கு தந்தவர்
ஷேக்ஸ்பியரின் நன்பர் பென்ஜான்சன். 16ஆம் நூற்றாண்டில் இரண்டாம் முக்கியத்துவம்
வாய்ந்தவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்திலும் எல்லா இலக்கண, இலக்கிய முறைகளையும்
பின்பற்றி தம் அடையாளத்தை பதித்தவர். இவர் 1573இல் வெச்ட்மினிச்டெர் என்ற இடத்தில்
பிறந்தார். லார்டு அமிரல் தியேட்டா் கம்பெனியின் உறுப்பினராவார். நாடக எழுத்தாளர்,
நடிகர், போர் வீரர், என பல துறைகளில் தடம் பதித்தவர். நகைச்சுவை,சோகம்,காதல்
கதைகள் எழுதுவதில் வல்லவர். எலிசபெத் காலத்தை பற்றிய இவரது படைப்பு மிக குறைவுதான்.
எனினும் அக்காலத்தில்இவர் வெளியிட்ட நூல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.
இவர் இவர் இறந்த பிறகு இவர் கல்லறையில் ``ஓ அரிய பென்ஜான்சன்’’என்று
எழுதப்பட்டிருந்தது. நகைச்சுவை என்ற படைப்புக்கு இவர் தான் இலக்கணம் வகுத்தார்.
எங்கே செல்கிறது பாரதம்..??
இந்தியா ஓர் அறிமுகம்..!!!
நமது நாகரீகம் சிந்து சமவெளியில் ஆரம்பம் பெற்று இன்று வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றும் அவர்களின் நாகரீகத்தை பின்தொடர்கின்றோம்.அன்று நம்மிடம் இருந்த இயற்கை வளத்தைக் கண்டும், வியாபாரம் செய்ய வந்தவர்கள் தான் போச்சுகீசியர்கள்.பிறகு தான் பிரிட்டிஷ் ஆட்சி நமது நாட்டை அடிமைப்படுத்தியது..கிழக்கிந்தியக் கம்பெனி கி.பி.1600-ல் இந்தியாவிற்குள் நுழைந்து நமது வளங்களுக்கு நாமே அவர்களிடம் கட்டினோம் வரி.அதற்கு பதிலடி கொடுத்தார் நமது கட்டபொம்மன் ..அண்ணல் காந்தி,நேரு,திலகர்.வ.உ.சி,குமரன்,காமராசன் மற்றும் பலர் நம்மை ஒருங்கிணைத்து சுதந்திர போராட்டத்திற்காக கூக்குரல் எழுப்பினார்கள்.அதன் விளைவு ஆகஸ்ட் திங்கள் 15-ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலக் கொடி இறக்கப்பட்டு இந்தியக் கொடி ஏற்றி எப்படியோ அடைந்து விட்டோம் சுதந்திரம்.
எங்கே நமது ஒருமைபாடு..!!
அன்று நமது பாரத மக்கள் ஒற்றுமை உணர்வோடு இருந்தனர் என்று நமது பாடப்புத்தகங்களில் படித்திருப்போம்.அது உண்மை தான்.அன்றைய காலக்கட்டதில் குமரி முதல் இமயம் வரை தமிழ் மொழி மட்டுமே பேசப்பட்டது உண்மை.ஆனால் இன்று நமது நாட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மொத்தம் 22.ஏன் இந்த மொழி பிரிவினை ..?? அதற்கு நாம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருக்கலாம்.அது மட்டுமா இல்லை ஜாதி, மதம் மற்றும் மொழி போன்ற ஏரளமான பிரிவுகள்..இன்றைய தினத்தில் நமக்காக உயிர் துறந்தவர்கள் இருந்தால் அவர்களின் எண்ணம் இதற்கா சுதந்திரம் பெற்றுத் தந்தோம் என்று வருந்துவர்.இன்று எங்கே ஒருமைபாடு..??
எங்கே விவசாயம்..!!
வானம் பார்த்து விவசாயம் செய்த புண்ணிய பூமி ஆனால் இன்று மானம் மற்றும் பணத்தைப் பார்த்து செய்கின்றோம் விவசாயம்..ஒவ்வொரு விவசாயிகளும் நமக்கு கடவுளாக இருந்த அன்னமிட்ட கைகள்..இன்று கைதிகள் அவர்கள் ஆசை என்னும் பிடியில்.ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு திடமாக இருந்தோம் இன்று பீட்சா,பர்க்கர்,நூடுல்ஸ் என்ற ஆங்கில உணவைச் சாப்பிட்டு வருக்கின்றோம்..நாளைய சமுதாயத்திற்கு கொடுக்கப்போவது உணவா..??மரணமா..??
பணமா..??பிணமா..??
யார் புதைத்தது பணம் என்ற பிணைத்தை நம்முள்.ஒருக்கட்டத்தில் பணம் தேவைப்பட்டது உயிர் வாழ இன்று வாழ்வதே படணத்திற்காக தான்.பணத்தை உருவாக்கியதே மனிதன் தான் ஆனால் இன்று பணம் தான் மனிதனை உருவாக்குகிறது.என்ன கொடுமை..??
அரசா..??தனியாரா..??
நம் எல்லாருக்கும் தெரிந்த உண்மை.ஆனால் எதுவும் செய்ய இயலவில்லை நம்மால்.!!
அரசு நடத்த வேண்டிய கல்வி இன்று தனியார் நடத்துகிறது.தனியார் நடத்த வேண்டிய டாஸ்மார்க் அரசு நடத்துகிறது.நமது அரசாங்கத்துக்கு டாஸ்மார்க்கில் இருந்து தான் அதிக வருமானம் கிடைக்கிறது என்பது உண்மை.
கல்வி வியாபாரமா..??சேவையா..??
கல்வி என்பது சேவையாக இருந்தது..இன்று அதே கல்வி வியாபாரம் ஆனது ..படிக்க ஆர்வமுள்ள குழந்தைகளாக படிக்க இயலவில்லை காரணம் கட்டாயக் கல்வி கட்டணம் கல்வியாக மாறியது தான் ..கல்வி முறை என்பது நாளைய சமுதாயத்தை உருவாக்குவது .ஆனால் இந்த வியாபாரம் நம்மை பகைவன் ஆக்குகிறது.அரசு பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை வேண்டாமா ஆனால் அரசு வேலை மட்டும் வேண்டுமா நம் மக்களுக்கு..
முடிவு..!!
எனது பார்வையில் நான் காணும் பாரதம்.இனம்,மொழி,மதம்,ஊழல் மற்றும் லஞ்சம் நிறைந்தது தான் இந்தியா..இதை யாராலும் மறுக்க இயலாது..எனது கவலைகள் அனைத்தும் நமது இந்தியா எப்போது வல்லரசு அடையும் ..முடியும் இன்றைய தலைமுறைக்கு வழிவிடுங்கள் ..இன்றைய தலைமுறை நாளைய சமுதாயம் என்பது வார்த்தையால் மட்டுமில்லாமல் செயலிலும் வேண்டும்..சிந்தியுங்கள் இது நமது பாரதம்.எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயா அடிக்கடி என்னிடம் கூறுவது எதையும் நம்மால் மாற்ற இயலாது நம்மை நம்மளே மாற்றினால் தான் உண்டு என்று இது என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது..ஒவ்வொருவரும் தன்னை தானே மாற்றினால் கட்டாயம் மாறும் நம் பாரதம்..
முடியாது என்பது முடியாது..!!
யாராலும்
கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியாது..!!
பன்றிகள்
வானத்தை அண்ணாந்து பார்க்க முடியாது..!!
பூனையால்
இனிப்புச் சுவையை உணர முடியாது..!!
முதலைக்களுக்கு
நாக்கை வெளியே நீட்ட முடியாது..!!
பறந்தாலும்,
நின்றாலும்,அமர்ந்தாலும் தட்டான் பூச்சிகளால் இறக்கையை மடக்க முடியாது..!!
முதலை.திமிங்கலம்
போன்றவற்றுக்கு மீன்களைப் போல நீருக்குள் மூச்சுவிட முடியாது..!!
கிவி
பறவையால் 2 அடி கூட பறக்க முடியாது..!!
பெயர் வந்தது எப்படி..??
எட்வர்டு எலியட்ஸ் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியின் போது சென்னையில் நீதிபதியாக இருந்தவர்,அவருடைய பெயர்
தான் எலியட்ஸ் சாலைக்கு சூட்டப்பட்டது..
உஸ்மான் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியில் கவர்னரின் ஆலோசகராக இருந்தவர்.அவர்
இருந்த தெருவின் பெயர் தான் உஸ்மான் சாலை..
ஹென்றி சேமியர்ஸ் என்பவர் மெட்ராஸ் கிளப்பை நிறுவினார்.எனவே தான் அடையாற்றின்
கரையில் இருக்கும் இந்தக் கிளப்பை நோக்கிச் செல்லும் சாலைக்கு சேமியர்ஸ் சாலை எனப் பெயர் பெற்றது.
பாந்தியன் என்ற
பெயரில் ஒரு தேவாலயம் எழும்பூரில் உள்ளது.அதனால்
தான் அந்த சாலைக்கு பாந்தியன் சாலை எனப் பெயர் சூட்டப்படது..
இமம் என்ற சொல்லுக்கு பனி என்று பொருள்.இம்மலைகள்
எப்பொழுதும் பனி சூழ்ந்து இருப்பதால் இதனை இமயமலை என்று அழைக்கப்பட்டது.
சர் ஜார்ஜ் எவரெஸ்ட் என்பரின் தலைமையில் இந்திய சர்வே குழு அச்சிகரத்தின்
உயரத்தைக் கணக்கிட்டனர்.எனவே தான் அச்சிகரம் எவரெஸ்ட் என்று அழைக்கப்பட்டது..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)