செவ்வாய், 5 ஜனவரி, 2016

பன்னாட்டு தமிழ் மரபுக் கருத்தரங்கம்



தமிழர் தம் தெய்வ வழிபாடுகளும் குறியீடுகளும்;


தமிழர்களாகிய நாம் பின்பற்றும் வழிபாடுகளும் குறியீடுகளும் குறித்து 05.01.2016 இன்று எஸ்.எஸ்.எம் கல்லூரியில்  தமிழ் மரபு அறக்கட்டளை(உலகளாவிய அமைப்பு) நடத்தியக் கருத்தரங்கில் கணித்தமிழ்ப் பேரவையில் உள்ள 25 மாணவிகள் கலந்துக் கொண்டோம்.


நிகழ்ச்சியின் முக்கியத்துவம்;




தமிழர்களாகிய நாம் இன்று வாழும் நகரத்து வாழ்வில் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறோம், மேலும் தமிழ் மரபுக்களைப் பின் தொடர்க்கிறோம் என்ற பெயரில் அவற்றை எப்படி வீணாக்குக்கின்றோம் என்பது பற்றியும் இவற்றில் இருந்து எப்படி நமது தமிழர் மரபைக் காப்பாற்றுவது குறித்து அமைந்தது..மேலும் இன்றைய நகரத்து வாழ்க்கையில் கணினியின் முக்கியத்துவம் மற்றும் தமிழ் மொழியை மின்னாக்குவதுக் குறித்தும் பயிற்சிப் பட்டறை அமைந்தது.

தமிழர் பண்பாட்டு வரலாற்றுச் சான்றுகள் பாதுகாப்பு;







1.கல்வெட்டு
2.ஓலைச்சுவடிகள்
3.ஆவணங்கள்
4.பழம் நூல்கள்
5.சுவர் சித்திரங்கள்
6.பாறை ஓவியங்கள்
7.பாறை குறியீடுகள்
8.ஈமக்கிரியச் சின்னம்
9.நடுகல்

ஆகியவை தமிழரின் அடையாளமாகத் திகழ்பவை.மேலும் இவை வரலாற்றுச் சின்னமாகும் ஆனால் நம் அருமை மக்கள் தெய்வ வழிபாடு என்ற பெயரிலும் கோவில் மறுசீரமைப்புப் பணி என்ற பெயரிலும் இவற்றை அழிக்கின்றன.நாளைய சமுதாயமாகியத் தமிழர் மட்டும் அல்ல யாருக்குமே தமிழன் இருந்தான் வாழ்ந்தான் என்பதற்கான அடையாலமே இல்லாமல் செய்வதும் காப்பதும் நமது கையில் தான் என்பது எனது கருத்து.


யாதும் ஊரே;யாவரும் கேளீர்:


ஞாயிறு, 3 ஜனவரி, 2016

தமிழ்த்துறையில் அசத்திய சிலர்..!!






1.தமிழ் மூதாட்டி ஔவையார்.

2.மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்.

3.தமிழ் மாணவர் வீரமாமுனிவர்.



4.தமிழ்த் தென்றல் திரு.வி.க.

5.தமிழ் வால்டர் ஸ்காட் கல்கி.

6.தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்.

7.தென்னாட்டு பெர்னாட்சா அறிஞர் அண்ணா.

8.தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார்.

9.முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.

10.தமிழறிஞர் கி.வ.ஜகநாதன்.

11.தமிழண்ணல் இராம பெரியகருப்பன்.

12.தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐய்யர்.

13.பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியார்.



14.உரைநடையின் தந்தை இராபர்ட் டி நொபிலி.

15.சிறுகதை உலகின் தந்தை செகாவிவ்.

16.தமிழ் சிறுகதை தந்தை வ.வே.சு.ஐயர்.

17.சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்.



18.தமிழ் நாட்டின் மாப்பசான் புதுமைப்பித்தன்.

19.சிறுகதை உலகின் திருமூலர்  மணி (மௌனி).

20.புதினத்தின் தந்தை கல்கி.

21.தமிழ் நாடகத்தின் தந்தை பம்மல் சம்பந்தம்.

22.தமிழ் நாடகத்தின் தாத்தா நவாப் கோவிந்தசாமி ராவ்.

23.தமிழ் நாடக மூவர் பம்மல் சம்பந்தம்,சங்கரதாசு சுவாமி,பரிதிமாற் கலைஞர்.

24.உவமை கவிஞர் சுரதா.

25.பரமார்த்த குருவின் கதையாசிரியர் வீரமாமுனிவர்.

சனி, 2 ஜனவரி, 2016

ஒன்று முதல் பத்து வரை..!!




ஐந்து ஐந்து..!!


1. பஞ்சவர்ணம் என்பது கருப்பு,சிவப்பு,பச்சை,மஞ்சள் மற்றும் வெள்ளை.

2.பஞ்சலோகம் என்பது பொன்,வெள்ளி,செம்பு,ஈயம் மற்றும் இரும்பு.


3.பஞ்ச வாசம் என்பது ஏலம்,லவங்கம்,கற்பூரம்,திப்பிலி மற்றும் ஜாதிக்காய்.

4.பஞ்ச ரத்தினம் என்பது பொன்,சுகந்தி,மரகதம்,மாணிக்கம் மற்றும் முத்து.

5.பஞ்ச பூதம் என்பது ஆகாயம்,நீர்,காற்று,நெருப்பு மற்றும் நிலம்.

6.பஞ்ச பாண்டவர்கள் என்பவர்கள் அர்ஜீனன்,பீமன்,நகுலன்,தர்மன் மற்றும் சகாதேவன்.


ஒன்பது ஒன்பது..!!

1.பைசா கோபுரம் ஒன்பது மாடிகள் கொண்டது.

2.ஆஸ்கார் சிலை ஒன்பது பவுண்டு (4 கிலோ) எடை கொண்டது.

3.ஆக்யஸ் எனும் தேளுக்கு ஒன்பது கொடுக்குகள் உள்ளன.

4.செவ்வாய் கிரகத்தில் ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் பகலாக இருக்கும்.

5.சூரிய ஒளி பூமியை வந்தடைய ஒன்பது நிமிடங்கள் ஆகும்.

6.ஈரான்-ஈராக் போர் ஒன்பது ஆண்டுகள் நடைப்பெற்றன.


ஒன்று முதல் பத்து வரை..!!

1.ஒரு செல் உயிரினம் அமீபா.

2.இரண்டு தலைநகர் கொண்டது ஜம்மு-காஷ்மீர்.

3.மூன்று வயிறுள்ள விலங்கு ஒட்டகம்.

4.நான்கு வேதங்கள் ரிக்,யசுர்,சாமம் மற்றும் அதர்வணம்.

5.ஐந்து வைட்டமின் அடங்கிய பழம் வாழைப்பழம்.

6.ஆறு கால்கள் கொண்டவை பூச்சியினம்.

7.ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது ரோம்.

8.எட்டு நூல்களின் தொகுப்பு எட்டுத் தொகை.

9.ஒன்பது கோள்களை உடையது சூரிய குடும்பம்.

10.பத்து கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது பைபிள்.


வெள்ளி, 1 ஜனவரி, 2016

செம்மொழித் தமிழ்..!!

         

தமிழ் மொழியின் தோற்றம் ஏறத்தாழ கி.மு.50,000 என்பது தேவநேயபாவணரின் கருத்து.இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் இருந்தது.இயேசுவிற்கு 500 ஆண்டுகளுக்கு பிறகே ஆங்கிலம் தோன்றியது..

உலகின் வாழும் எழுநூறு கோடி மக்கள் பேசும் சுமார் ஏழாயிரத்து முன்னூற்று முப்பது மொழிகளில் முதன்மையாக வரலாறு படைக்கின்ற மொழி தமிழ்மொழி..


செம்மொழிக்கான 11 தகுதி கோட்பாடுகள்..!!

1.தொன்மை
2.தனித்தன்மை
3.பொதுப்பண்பு
4.நடுநிலைமை
5.தாய்த்தன்மை
6.பண்பாடு
7.கலைப்பட்டறிவு
8.பிறமொழித் தாக்கமில்லாத்  தனித்தன்மை
9.இலக்கிய வளம்
10.உயர் சிந்தனை
11.இலக்கண மொழிக் கோட்பாடு.

பதினொரு தகுதிக் கோட்பாடுகளும் பொருந்தும் ஒரே செம்மொழி நம் தமிழ் மொழி மட்டுமே..!!

தமிழின் மீதுக் கொண்ட காதல்..!!

தமிழ் என்றால் முதலில் அனைவருக்கும் நினைவில் வருவது தமிழ் எழுத்தின் முதல் எழுத்தான " " ஆம் நாம் முதலில் பேசும் போது அ என்றே ஆரம்பிப்போம் கவனித்துப் பாருங்கள் ..

ஒரு சின்ன கவிதை ,
    பூக்கள் உதிர்ந்தன மண்ணின் மீதுக்
   கொண்டக் கோபத்தால் அல்ல,
   மண்ணின் மீதுக் கொண்ட காதலால்..!!

   நானும் காதல் கொண்டேன் உன் மீது
   தமிழே உன் மீது தான்..!!

முதலில் நினைவில் வரும்  நூல்கள்;

   1.திருக்குறள்
   2.சிலப்பதிகாரம்
   
   
இன்னும் பல நூல்கள் உள்ளன..ஒவ்வொரு நூலும் நமது வாழ்க்கை முறையினை அடிப்படையாகக் கொண்டது..

சங்கத் தமிழ்;

1.முதல் சங்கம்
2.இடைச் சங்கம்
3.கடைச் சங்கம்
தமிழுக்கு  அமுதென்றுப் பேர்...!!

தமிழை வளர்ப்போம்;தமிழால் உயர்வோம்;தமிழால் இணைவோம்;

வாழ்கத் தமிழ்..!! வளர்கத் தமிழ்..!!





 

புதன், 30 டிசம்பர், 2015

கணிதத் துறைப் பயிலரங்கம்


30.12.15 இன்று காலை பத்து மணிக்கு கணிதத்துறையின் பயிலரங்கம் நடைபெற்றது.  இப்பயிலரங்கில் கே.எஸ்.ஆா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அரிமா டாக்டா் கே.எஸ்.ரங்கசாமி MJFஅவா்கள் தலைமை தாங்கினாா்.

செயலாளா் ஆா் சீனிவாசன் அவா்களும், செயல் இயக்குநா் திருமதி கவிதா சீனிவாசன் அவா்களும் முன்னிலை வகித்தனா்.

கணிதத் துறைத் தலைவா் ஹரிஹரன் அவா்கள் வரவேற்க, பயிலரங்கம் இனிதே தொடங்கியது. கே.எஸ்.ஆா் மகளிா் கல்லூரியின் முதல்வா் முனைவா் மா.கார்த்திகேயன் அவா்களும், கே.எஸ்.ஆா் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் இராதாகிருஷ்ணன் அவா்களும் வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு விருந்தினராக சென்னை வேல்டெக் பல்கலைக்கழத்திலிருந்து வந்திருந்த பேராசிரியா் முனைவா் வி.சுந்தரபாண்டியன் அவா்களும், திருநெல்வேலி மனோன்மணீயம் பல்கலைக்கழகத்தின் கணிதத்துரைப் பேராசிாியர் முனைவா் தமிழ்ச்செல்வன் அவா்களும் பயிலரங்கத்துக்கு வந்திருந்த மாணவா்களுக்கும் பேராசிரியர்களுக்கும் கணிதத்தின் அடிப்படை விதிகளையும், கணிதத்தை எளிமையாக கற்கும், கற்பிக்கும் வழிமுறைகளையும் விளக்கினா். கணிதத்தை தமிழிலே கற்பிக்க வேண்டும் அப்போதுதான் புரிதல் ஏற்படும் என்ற கருத்தையும் உலகநாடுகளின் கல்விமுறையை சான்று காட்டி விளக்கினா்.கணிதத்துறைப் பேராசிரியா் திருஇராமகிருஷ்ணன் அவா்கள் நன்றியுரை கூற பயிலரங்கம் இனிதே நிறைவடைந்தது.