திங்கள், 17 பிப்ரவரி, 2020

பவித்திரம்

71.மீண்டும்  எழுவோம்
நிறைகுளம் இன்று
குறை நிலை எய்தியதே
கடந்தோடும் ஆறோ இன்று
காற்றாக மறைந்ததே
கடலாய் கொதித்தெழுந்தால்
கருமேகம் ஈட்டிடலாம்
கனமலையைக் கண்டிடலாம்
கடும்நிலையைப் போக்கிடலாம்

72.நான் என்செய்கிறேன்
ஏன் நான் பார்க்கிறேன்
ஏதோ நான் கேட்கிறேன்
எதையும் நான் இரசிக்கிறேன்
எங்கும் நான் வசிக்கிறேன்
எல்லாம் தன்னால் உந்தன் முன்னால்
எவையும் இனி உன் பின்னால்
இவை அனைத்தும் உன்னால்
உந்தன் கண்ணால்

                        73.நீ எந்தன் வரமே
தவமின்றிக் கிடைத்த வரமும் நீதான்!
தவமாகக் கிடைத்த வளமும் நீதான்!
தவிப்போடு கிடந்த வாழ்வில்
களிப்போடு காணவந்தாய்
கனத்தோடு கடந்த வழியில்
காற்றாகக் கடந்து சென்றாய்
துடிப்போடு குறுகிய நெஞ்சைத்
துயில்பாட குறையைக் கண்டாய்
துணையாகக் கூடவந்தாய்
இரையாக நானும் வந்தேன்
கரையேற்றி நீயும் வென்றாய்!

74.மகிழ்வோடு வாழ்வோம்
கண்ணுக்குள் தோன்றும் நிலவாய்
கனவினில் விடியும் பொழுதாய்
கவியிலும் அதுவே பொதுவாய்
கதையிலும் கற்பகப் புகழாய்
கடலினும் ஆழம் பெரிதாய்
அலையினும் அறிவில் புதிதாய்
வானின் உயரமும் அரிதாய்
பூமியின் பரப்பும் சிறிதாய்
அவ்வண்ணம் கையில்
இப்பூமிப் பையில்
வாழ்வோ பொய்யில் வசீகர மெய்யில்
உந்தன் செய்யில் எந்தன் சேயில்
தொடர்வோம்
என்றென்றும் மெய்யில் மகிழ்வோம்

75.அப்பன்
அதிகாலையில் அதிபதியாய்
அந்திமாலையில் அவையகளாய்
அன்றிரவின் நிலா அவளாய்
உன்னை மடி சேர்த்திடுவான்
அன்பு மனம் காட்டிடுவான்
அறிவு குணம் சூட்டிடுவான்
அமைதி வனம் ஆக்கிடுவான்
அய்யன் குறள் கூறிடுவான்
அன்னை மடி சார்த்திடுவான்
அழாய் எனச் சொல்லிடுவான் அன்பில்
அன்னையயே தோற்று இடுவான்

76.உலகம் உனதே
உண்மை சொல்லடா உன்முகம் எதுவென
உன்னைச் சொல்லடா என்முகம் புதிதென
உயர்வைக் கேளடா உச்சி எதுவென
உயிரே கேளடா உனதே பெரிதென
ஊரைப் பாரடா உறவுகள் எதுவென
உன்னைப் பாரடா உலகமே உனதென

77.என்னுடையான்
காந்தம் போன்ற கண்ணுடையான்
கட்டியணைக்கும் கரமுடையான்
காத்தல் என்னும் திறமுடையான்
காதல் கொள்ளும் மனமுடையான்
காலம் முழுதும் களைப்படையான்.

78.தவிப்பு
நீ சொல்ல நினைக்கிறாய்
நான் கேட்க இருக்கிறேன்
நீ சொல்ல மறுக்கிறாய்
நான் கேளாது தவிக்கிறேன்

79.உன்னுடன் கடக்கிறேன்
ஒரு நிமிடம் நான் உன் அணைப்பில் இருக்கையில்
பல ஜென்மம் கடக்கிறேன்
ஒரு நொடி நான் உன்னை விட்டுப் பிரியினும்
பல தலைமுறை இழக்கிறேன்
நீ உடன் இருந்தால் உறக்கமில்லை
உன் நினைவுகளுக்கோ இரக்கமில்லை
என்னைச் சிதைப்பதற்கு
இனி எல்லையில்லை - நாம்
நம் காதலை விளைப்பதற்கு

80.உன்னுடன் நானிருப்பேன்
உன்னுடன் வாழும்வரை உனக்கு உறவாக
வாழ்ந்தபின் உனது நினைவாக
நீ வளரும்வரை துணையாக
வளர்ந்து பின் தூணாக நானிருப்பேன்

81.இதயம் கொடுத்து
கலையான காதல் இருந்தால்
களையாத காதல் இருந்தால் - என்றும்
நிலையாக நீயும் இருந்தால் - உன்
நினைவோடு நான் உரைந்து கிடந்தால்
கடல் நீரில் மட்டும் அல்ல
கண்ணீரிலும் மீன் பிடிக்கலாம்
இதயம் கொடுத்து

பவித்திரம்

65.தமிழ் மீது பற்று
பிறக்கையிலே நான் பிடிகொண்டேன்
தாய் தழுவையிலே நான் விழிகொண்டேன்
தங்கை அழைக்கையிலே நான் செவிகொண்டேன்
தாமரை மலரையிலே நான் மதிகண்டேன்
தமிழே உன்னைப் படிக்கையிலே
உன் மீது நான் பதிகொண்டேன்

66.உன்னருகே நானிருந்தால்
சற்றுநேரம் உற்றுநோக்கி
உன்னருகே நானிருந்தால்
மற்றொரு உறவில்லை உலகினிலே
காற்றோடு கடலினிலே கலந்திடவே
காணவந்தேன் காதலனே!!!
சாரல் ஒன்றும் வீழவில்லை
சாகும் வரை வினையில்லை
காதல் ஒன்றும் கனவில்லை
காலையினில் கலைந்திடவே
காலம்வரை காத்திருப்பேன்
காணும்வரை கரையிருப்பேன்
காணவருவாயா காதலனே!!!

67.அழகு
நல்ல வனங்களே நாட்டிற்கு அழகு
நல்ல வண்ணங்களே ஆடைக்கு அழகு
நல்ல குணங்களே நண்பனுக்கு அழகு
என்றும் அழகாய் வாழப்பழகு

68.நினைவுகள்
நான் உன்னை நினைக்கும் ஒவ்வொரு  நொடியிலும்
உன்னுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
என் நினைவுகளுக்கோ என்றுமில்லை ஒரு எல்லை
உன் நினைவுகளோ மனமெங்கும் கொள்ளை
என் மனமோ மாறாத  ஒன்று
நமக்கு மணமாகாதா என்று
ஏங்கிய பொழுதுகளும் உண்டு
எண்ணிய  என் இமைகளோ  சோர்ந்த்து
அப்பொழுதும் உன் நினைவுகள் தானே
என்னுள்ளே ஊர்ந்தது

69.அவன்
புன்கவி வண்மம் பெற்றவன்- என்
தந்தை எண்ணம் கொண்டவன்- என்
தாயின் நன்மனம் கற்றவன்- அவன்யார்?

70.பெண்ணின் வாசலிலே
நான் பிறக்கையிலே
தாயின் தொப்புள்கொடி அறுக்கப்பட்டது
தாய்ப்பால் தடுக்கப்பட்டது
நான் நடக்கையிலே
தொட்டில்கொடி அறுக்கப்பட்டது
படுக்கையாலே பிடிக்கப்பட்டது
என் பருவத்திலோ
உறவுக்கொடி அறுக்கப்பட்டது
ஊரோரால் மறுக்கப்பட்டது
உன் பிரிவினால் இன்று
என் தாலிக்கொடி அறுக்கப்பட்டது
எனக்கோ வாழ்க்கையே
வெறுத்துவிட்டது