செவ்வாய், 11 செப்டம்பர், 2018

எதுவும் நன்மையே

வாழ்க்கையில் தள்ளிவிட்டவர்களை என்றும் மறக்காதிர்கள்
ஏன் என்றால் வாழ்க்கை கூட ஒரு ஊஞ்சல் போல்தான்
பின் இருந்து ஒருவர் தள்ளிவிட்டால் தான்
நாம் முன் உயர்ந்து வானில் பறக்கமுடியும்

திங்கள், 10 செப்டம்பர், 2018

கிராமம் அது சொர்க்கம்



எங்களின் கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகானது...

சேவல் கூவும் சத்தத்தில் தான் அந்த நாளின் யுத்தம் தொடங்கும்...

எட்டாத வேப்ப மரத்தை எட்டிப் பிடித்து.. வேப்பங்குச்சி ஒடித்து பல் விலக்கும் காட்சி...


காலையிலே அப்பாவுக்காய் அம்மா ஆசையோடு போடும் நாட்டுச் சக்கரை டீ..


மாட்டுச் சாணம் அள்ளுவதில் இருக்கும் மனமகிழ்வு...

தண்ணீர் கலக்காத சத்தான பாலை மக்களுக்கு தரும் மாண்பு...

லாபமென்றாலும் செயற்கை உரமெனும் விஷத்தை தாயின் மடியிலே தெளிக்க மாட்டேன் எனும் விவசாயி.‌.

சந்தைக்கு போகும் அவசியமில்லை..
காய்கறிகளெல்லாம் எங்கள் தோட்டத்தில் விளைவதனால்...

மருத்துவர் தேவையில்லை ஏனென்றால் பாட்டிகள் எங்களுடன் இருக்கிறார்கள்...

சத்து மாத்திரைகள் தேவையில்லை.
அதைவிட சத்தான கீரைகள் எங்கள் மண்ணிலே விளைகின்றன...

ஆரோ தண்ணீரை விட ஆரோக்கியமான தண்ணி எங்கள் ஆற்றுத் தண்ணீர்...


 அனைத்து உணவும் பிறருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதால் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு வேலை இல்லை...

வீட்டைச் சுற்றியும் மரங்கள் இருப்பதால் நாங்கள் மறந்து கூட ஏசியை ஓசியில் தந்தாலும் வாங்குவதில்லை..‌.

 அண்டை வீட்டாரிடமும் அயல் வீட்டாரிடமும் முகம் கொடுத்து பேசுவதனால் அதிக நேரம் முகநூலில் முகம் பதித்து கிடையாது...

தெருவுக்கு நான்கைந்து பாட்டிகள் இருப்பதால் எங்கள் கிராமங்களில் சிசிடிவி க்கும் வேலையில்லாமல் போனது...

உண்மையிலே கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகானது..

பணம் காசு சொத்து சுகம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்..

முடிந்த வரை கிராமத்து வாழ்க்கையை வாய்ப்பிருக்கும் போதே அணுபவித்துக் கொள்ளுங்கள்.

கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பு...
முறித்து விடாதீர்கள்....

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

நாம் ஒரு செயலிலோ அல்லது போட்டியிலோ வெற்றி பெற்று விட்டோம் என்றால் அந்த வெற்றிக்கு நான் இப்படி பன்னேன் அதனால் ஜெயிச்சுட்டேன்.
நான் அப்படி பன்னேன் அதனால் ஜெயிச்சுட்டேன் என்று அந்த வெற்றிக்கு நாம் தான் காரணம் என மார்தட்டி பெருமைப் படுகிறோம்...

இதுவே தோல்வியைத் தழுவி விட்டோம் என்றால் அதனால் தான் நான் ஜெயிக்கல இதனால் தான் நான் ஜெயிக்கல அவுங்க இப்படி பன்னிட்டாங்க இவுங்க இப்படி பன்னிட்டாங்க என அந்த தோல்விக்கு காரணமாய் பிறரைக் காட்டுகிறோம்...


அது எப்படி நம் வெற்றிக்கு நாம் காரணமாய் இருக்கும் போது நம்முடைய தோல்விக்கு மட்டும் பிறர் காரணமாய் இருப்பார்கள்.....

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

நா காக்க



சில நேரங்களில் நாம் நம்மை அறியாமல் செய்த சின்னஞ்சிறு செயல்கள் கூட பிறரை மிகவும் காயப் படுத்தும்...

விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளுக்கு இடையில் சண்டை வந்துவிட்டது...
அந்த சண்டையின் உச்சகட்டமாக ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடம்.. நான் தான் நம்ம அம்மா அப்பா பெற்ற பிள்ளை நீ தத்துப் பிள்ளை என்கிறது...

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த குழந்தை வேதனைப் படவும் இல்லை..
வருத்தப்படவும் இல்லை...

பெருமிதத்தோடு சொல்கிறது..

பெத்த பிள்ளைக்கும் தத்துப் பிள்ளைக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா....

பெற்ற பிள்ளை என்றால் கருப்பையில் வளர்ந்தவர்கள்..

தத்துப் பிள்ளை என்றால் இதயத்தில் வளர்ந்தவர்கள்..

என்று கூறியது...

அந்த குழந்தை இந்த வார்த்தைகளை மனதார சொல்லியிருந்தாலும் கூட அந்த மழலையின் அடிமனதில் அது கடினத் தன்மையையும் ஏக்கத்தையும் அல்லவா ஏற்படுத்தியிருக்கும்...

பிறர் மனதை காயப்படுத்தாமல் பேசுபவர் யாரோ அவரே பிறரால் மதிக்கப் படுவார்கள்.
நேசிக்கப் படுவார்கள்...

நா காக்க...

போராடி வெற்றிநடை போடு

வாணம் தொடலாம் வா நண்பா
வின்விலி செல்லலாம் வா நண்பா
நம்மால் முடியாதது என்ன இருக்கு
என்றும் எதிலும் வெற்றி நமக்கு
உச்சம் தொடும் வரை உறுதியோடு  போராடுவோம்
வா நண்பா உடைந்தாலும் இறுதிவரை போராடுவோம்
தோல்வவியோடு கைகோற்றுகொள்வோம்
அவமானங்களோடு உரையாடிக் கொள்வோம்
அச்சத்தை அப்படியே விட்டுச் செல்வோம்
வெற்றியை நோக்கி ஓடுவோம்
தோற்றாலும் புண்ணகித்தே தோற்றுவிடுவோம்
இறுதியில் திரும்பி பார்ப்போம்
நாம் போராடி வெற்றிநடை போட்டு வந்த பாதையை