திங்கள், 11 ஏப்ரல், 2016

இனியவை நாற்பது

              

  1. Image result for இனியவை நாற்பது
முன்னுரை:
 பதிணெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களை கொண்டது. ஒவ்வொரு வெண்பாவிலும் 3 முதல் 4 கருத்துகள் இடம் பெறுகின்றன. மக்கள் தங்கள் வாழ்வில் பின் பற்ற வேண்டிய இனிய செயல்கள் இந்நூலில் திரட்டித் தரப்பட்டுள்ளன.மேலும் சங்க காலத்தில் நடைமுறையில் இல்லாத பழக்கங்கள் பற்றி இந்நூலில் கூறுகிறது.
நட்பு கொள்ளுதல்:
 குற்றங்களை செய்யாமல் தீய வழியை பின் பற்றாமல் நாடோறும் சென்று கற்றல் மிக இனியவை, பிறரிடம் கடன் வாங்காமல் தன் மாட்டை கொண்டு உழுவுதல் மிக இனியவை. அது போல் ஒருவரிடம் நட்பு கொள்ளும் போது அவரது குணத்தையும் பழக்கங்களையும் நன்கு அறிந்து நட்பு கொள்ளுதல் வேண்டும்.
தரும செயல்கள்:
நம்மால் முடிந்தவரை தரும செயல்களை செய்தல் மிக இனியவை, நன்னெறிப்பட்டார் சொல்லும் பயனுடைய சொல்லைக் கேட்டு அதன் வழி பின்பற்றுதல் இனியவை.
மாட்சிமையுடைவரின் செல்வம்:
குழந்தைகள் மிக ஆரோக்கியத்துடன் எந்த நோய் நொடியும் இல்லாமல்  வாழ்வது இனியவை. சபையில் அஞ்சாதவனாய் சபைகேற்ற கருத்துகளை சொல்பவனின் கல்வி இனியவை. எந்த பொருளின் மீதும் மயக்கம் இல்லாதவராய் உள்ளத்தில் மாட்சிமை உடையவரை அடையும் செல்வம் நீங்காமல் இருப்பது இனியவை.
குற்றம் இல்லாமல் வாழ்தல்:
சமூகத்தில் தனது மானம் இழந்த பின் உயிர்வாழாமல் இருப்பது இனியவை. தான் பெரியன் என்று கூறிக்கொண்டு வாழாமல் பிறரிடத்தில் அடங்கி வாழ்வது இனியவை.அது போல் குற்றம் ஒன்றும் செய்யாமல் நல்ல வழியில் பொருள் ஈட்டியதும் பொருளுடைமையும் எல்லா மக்களுக்கும் இனியவை.
பிறக்கு கொடுத்தல் இனியவை:
நன்கு கற்றவர் முன் தன் கல்வியை சொல்லி பெருமையடைவது இனியவை. எள்ளவும் பிறரிடம் இரவாமல் தன்னிடம் இருப்பதை பிறக்கு கொடுத்து வாழ்வது இனியவை.
ஆராய்ந்து வாழ்தல்:
பிறர் பொருளை அபகரிக்காமல் தன் பொருளைக் கொண்டு வாழ்வது இனியவை. பாவங்களை செய்து சேர்க்காமல் அறம் செய்து வாழ்வது இனியவை. மறந்தும் கூட நல்ல குணங்கள் இல்லாதவரிடம் சேராமல் நல்ல வழியை ஆராய்ந்து அறிந்து வாழ்தல் இனியவை.
வேறுபடாமல் வாழ்தல்:
தனக்கு பொருள் வருகின்ற நெறியினை அறிந்து பிறக்கு கொடுத்தல் இனியவை. பெரிய பயனையுடைதாம் விரும்பியவற்றை ஆராய்ந்து செய்யாதவராய் தாயினும் தம்மியல்பின் வேறுபடாமல் வாழ்வது இனியவை.
பொருளை அபகரிக்காமல் வாழ்தல்:
ஒருவன் செய்த நன்றியின் பயனைக் கருதி வாழ்வது இனியவை, சபையில் ஒரு சார்பாக மாட்சிமையோடும் வாழ்தல் இனியவை. அறிவில்லாதவரிடம் இருக்கும் பொருளை அபகரிக்காமல் வாழ்வது மிகவும் இனியவை.
முடிவுரை:

அவ்வாறு கூறப்படும் கருத்துகளை, நல்ல செயல்களை பின் பற்றி வாழ வேண்டும் என்று பூதஞ் சேந்தனார் கூறுகிறார்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

பழங்களின் பெயர்

       
Image result for ஹிந்தி மற்றும் தமிழ்

ஹந்தி -ப்பல்                                தமிழ் - பழம்

1.ஆம்                                         மாம்பழம்
2.அங்கூர்                                      திராட்சை
3.கேலா                                       வாழைப்பழம்
4.அனார்                                       மாதுளம்பழம்

5.அம்ருத்                                      கொய்யாப்பழம்

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

பங்குச் சந்தைக்கு நேரமாச்சு.. (தொடர்ச்சி)

அன்புடையீருக்கு வணக்கம்,

பங்கு வர்த்தகம் என்றால் என்ன என்பது தெரியாமலும் தெரிந்தும் அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது அதில் இலாபம் அதிக அளவில் கிடைக்குமா..???அல்லது நஷ்டம் தான் அதிகளவில் கிடைக்குமா..???இல்லை அதில் முதலீடு செய்வது எந்த அளவிற்கு பயனை நம்மால் அடைய முடியுமா என்ற எண்ணத்தோடு குழம்பி தவிப்போருக்கான ஒரு சிறிய தெளிவை  ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகளை மட்டும் பார்த்து வருகிறோம்.இந்த வாரம் பங்குச் சந்தையில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு வகைக்களாக பிரிக்கலாம் என்பதை பற்றி  காணலாம்.

புதன், 30 மார்ச், 2016

யான் வாசித்து வரும் வலைப்பக்கங்கள்..!!


Image result for blogger symbol of b

வலைப்பதிவர் நா.முத்து நிலவன் ஐயா,தனது வலைப்பக்கத்தில் தொடரும் தொடர் வலைப்பதிவர் என்று ஒரு பதிவை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்தார்.

திங்கள், 28 மார்ச், 2016

இலவசமாகப் புத்தகங்களை தரவிறக்கலாம்..!!

கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகங்களையும் ஆன்லைன் மூலம் எப்படி இலவசமாக தரவிலரக்கலாம் என்பது பற்றிய பதிவு தான்.