யாக்கையின்றி
நான் இல்லை !!!
இன்று
புறத்தே அலைகிறேன்
அகம் ஒன்றை
தொலைத்துவிட்டு!!!
தமிழா் வளா்த்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னிலையில் நிற்கிறது. ஆயக்கலை அறுபத்து நான்கில் ஓவியக்கலை சிறப்பிடம் பெறுகிறது. பழங்கால மக்கள் தம் உள்ளக் கருத்துக்களைப் புலப்படுத்த பாறைகளிலும் குகைகளிலும் கீறி எழுதினா். எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம். தமிழ் நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன. தாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணேழுத்து என்றே வழங்கியுள்ளன. வண்ணம் கலக்காமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதைப் புனையா ஓவியம் என்பா். இன்று மென் கோட்டு ஓவியமாக உள்ளது.
சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் காணப்படும் ஓவியங்களில் ஒன்று புனையா ஓவியம் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடையில் தலைவன் வினையின் காரணமாக தலைவியை விட்டு பிரிந்து கார் காலம் வருவதாக கூறிச் செல்கிறான் கூறிச்சென்ற பருவம் வந்தும் தலைவன் வாராமையினால் தலைவி தன்னை அழகு படுத்தி கொள்ளாமல் புனையா ஓவியம் போல பொலிவிழந்து காணப்படுகிறாள் இதனை
“புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல்
தளர் ஏா் மேனித் தாய கணங்கின்”
என்ற வரிகளின் மூலம் காண்கிறேம். மேலும் மணிமேகலையில் இரு இடங்களில் இப்பெயா் இடம்பெற்றுள்ளன. ஆதிரை பிச்சையிட்ட காதையில் மணிமேகலை முதன்முதலில் அமுதசுரபி என்னும் பாத்திரத்தில் ஆதிரையிடம் பிச்சை பெரும் பொழுது
“மனையகம் புகுந்த மணிமேகரை தான்
புனையா ஓவியம் போல நிற்றலும்”
புனையா ஓவியம் போல் நிற்கிறாள்.மேலும் சிறை செய் காதையில் விசாகை என்னும் வணிக பெண் ஊா் மக்கள் கூறும்பழி சொல்லிலிருந்து தன்னை காத்துக் கொள்ள கன்னி மாடத்தில் நுழைகிறாள் அவ்வாறு நுழையும் பொழுது தன்னை அழகு படுத்திக் கொள்ளாமல் புனையா ஓவியம் போல் இருப்பதை
“புனையா வோவியம் புறம்போந் தென்ன
மனையகம் நீக்கி வாணுதல் விசாகை”
என்ற வரி நமக்கு உணா்த்துகின்றது. இலக்கியங்களில் புனையா ஓவியம் என் சொல் இது போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளன.
திருமதி . ப. நா்மதா
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா்உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தைப் பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து...
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை!!!!
Shastika.s II BCOM FMA