வியாழன், 11 பிப்ரவரி, 2021

மறுக்கும் கண்கள்

கையில் தேநீர் இல்லை என்றால்
கண்கள் கூட வாசிக்க மறுக்குமாம்
செய்தித்தாளை!!!!
நானும் அப்படிதான் !!!!
நீ இல்லை என்றால் நானும் 
சுவாசிக்க மறுத்து விடுவேன்!!!
ஆனால் ஏனோ‌ தெரியவில்லை ??
நான் சுவாசிப்பதை மறுத்தும்
நீ என்னை நேசிப்பதை வெறுத்து 
வேற்றிடம் சென்றுவிட்டாய்!!!




திங்கள், 8 பிப்ரவரி, 2021

ஓய்வு

ஓய்வும் ஒரு நாள் சலிக்கதான் செய்கிறது !!!!!
ஒரு வேலையும் செய்யாமல் 
உணவு உண்ணும் போது!!

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

குறிக்கோள்

நீ யார் என்று 
பிறருக்கு புரியவைக்க
உன்னிடம் நீயே கேட்டுக்கொள்
உன் குறிக்கோளை!!!
பிறகு உன் உழைப்பால் 
பிறருக்கு உணர்த்திவிடு
குறிக்கோள் அற்ற வாழ்க்கை
குருவி இல்லா கூடு போன்றது என்று!!!

இயற்கை

எது இயற்கை??
தாவரமும் தானியமுமா??
அல்ல நம்மை சுற்றி இருக்கும் 
அனைத்தும் இயற்கையே !!
ஆனால் செயற்கையை விதைத்து
இயற்கையை அழித்து வருகிறோம்!!

ஞாயிறு, 12 ஜூலை, 2020

உணர்வுகள்

யாது என்று அறியாமல்
இவர் என்று புரியாமல்
இதுவே இல்லை அதுவே
என்ற குழப்பம் இல்லாமல்
தன்னையே அறியாமல்
வருவது தான் உணர்வுகளோ??
என்ற கேள்வி அனைவருக்கும்
இருந்து கொண்டு தான் இருக்கிறது.
என்ன செய்வது!
மனிதனாக பிறந்தால் 
உணர்வு ஒன்று இருக்க தானே செய்யும் என்ற உணர்வுடன் 
இவ்வரிகளை சமர்ப்பிக்கிறேன்