செவ்வாய், 21 ஜனவரி, 2020

ஏறு தழுவல்

முரட்டுத் தோள்கள் கருப்பு நிறத்திலே
மலைபோல் திமில் ஏற்றிச்
சிங்கம்போல் பாய்ந்து வரும்
உன்னோடு வாடி வாசலில் நின்று
ஏறுதழுவி விளையாடி
இரும்புக்கரம் கொண்டு அடக்கி
உன்னை வீழ்த்தியதால்
நான் வீரன் ஆகவில்லை காளையே
உன்னைத் தோற்க வைத்தாலும்
வெற்றிபெறச் செய்தாலும்
இந்நாட்டில் சிறந்த வீரன் நீயே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

அன்பைப் பெற்றேன்

தாயின் உருவத்தைப் பெற்றேன்
தந்தையின் குணத்தைப் பெற்றேன்
தம்பியின் ஆற்றல் பெற்றேன்
ஆசிரியரிடம் அறிவைப் பெற்றேன்
தோழிகளிடம் நட்பைப் பெற்றேன்
இறைவனிடம் அருளைப் பெற்றேன்
இவர்கள் அனைவரிடத்திலும்
தூய அன்பைப் பெற்றேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

நிழல் ஒளிர்ந்தது

வார்த்தை இன்றிப் பாடிய குயில்
வாடை இன்றிப் பூத்த மலர்
ஓடை இன்றிப் பாய்ந்த நீர்
உருவம் இன்றிப் பார்த்த நிழல்
உன் முகமாய் ஒளிர்ந்தது

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

காட்டில் திருவிழா

மயில் தோகைவிரித்து நடனம் ஆடியது
மான் காடெங்கும் துள்ளி விளையாடியது
கரடி தேனைச் சேகரித்து வைத்தது
குதிரை அணியாக வலம் வந்தது
குரங்கு தோரணம் கட்டி வைத்தது
முயல் மலர்களைப் பறித்து வந்தது
யானை தண்ணீர் கொண்டு வந்தது
அணில் பழங்கள் சேமித்து வைத்தது
குருவிகள் இனிய குரலில் கச்சேரி செய்தன
பறவைகள் அழைப்பிதழ்களை அனைவருக்கும் கொடுத்தன
இவர்கள் எல்லோரும் இணைந்து
காட்டு ராஜா சிங்கத்தின் பிறந்தநாளைக் கொண்டாடினர்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

என் அன்பு உள்ளமே

கவிதை பாடும் மேகம் காணுவோம்
வானிலே நாம் இங்கே
கண்கள் ஓரம் ஏன் இந்தக் கண்ணீர்
உன்னிலே என்னைக் கண்டும் ஏன் ஏக்கம் உன்னிலே
உன்னை அடைந்தேன் என்னை இழந்தேன்
மீண்டும் பிறந்தேன் உயிரே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்