செவ்வாய், 21 ஜனவரி, 2020

சாலை

நாட்டில் என்ன மாறியது?
நாட்கள் மட்டும் ஓடியது
நாம் நடப்பதற்குச் சாலையா?
நம்மை அழிப்பதற்குச் சாலையா?

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

கதிர் அறுப்போம்

காத்திருந்து நாத்து நட்டு
ஏர்பிடித்து காட்டில் களையெடுத்து
நீர் பாய்ச்சி உரம் போட்டு
கண்ணைப்போல் நெல்மணியைப் பார்த்து
மூன்று திங்கள் காத்திருந்து
முதல்நாள் அன்று கதிர் அறுத்து
உயிரைப்போலப் பயிரைக் காத்து
ஊரோடு சேர்ந்து உண்ணலாம்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

மழலைச் செல்வம்

தாயின் கருவறையில் உருவாகி
தங்கத் தாமரைபோல் முகம்மலர்ந்து
முத்துப் பற்களில் சிரித்து
முல்லை வண்ண வடிவம் கோர்த்து
கடல் அலையாக தவழ்ந்து
கொடியினைப் போலக் கைகளை நீட்டி
தேனில் நனைந்த பழத்தையும்
நிலவைப் பிழிந்துவைத்த பாலையும்
மேலே கிண்ணத்திலே உண்ண வா
என் அன்பு மழலைச் செல்வமே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

திங்கள், 20 ஜனவரி, 2020

தமிழ் மீது பற்று

பிறக்கையிலே நான் பிடி கொண்டேன்
தாய் தழுவையிலே நான் விழி கொண்டேன்
தந்தை அழைக்கையிலே நான் செவி கொண்டேன்
தாமரை மலர்கையிலே நான் மதி கண்டேன்
தமிழே உன்னைப் படிக்கையிலே
உன் மீது நான் பதி கொண்டேன் 

திங்கள், 13 ஜனவரி, 2020

இறப்பில் தான் பிறப்பு

இன்பமான வீட்டில்,
         இனிக்கும் சொந்தங்கள்,
இனிமையான நாட்டில்,
         இருக்கும் பந்தங்கள்,
இறப்பின் முடிவு,
         இனியொரு பிறவியின் தொடக்கம்,
இருளின் தேடல்தான்
           வெளிச்சம் என்ற வெற்றி !
இவ்வையம்  மூழ்கட்டும்,
            மகிழ்ச்சியில் நிறையட்டும்,
நெகிழிச்சியினம் தொடரட்டும் .........