வியாழன், 3 அக்டோபர், 2019

எவன்

ஆளக் கற்றவன் மன்னன்

அடக்கக் கற்றவன் தலைவன்

ஆளாக்கியவன் தகப்பன்

அடைகாத்தவன் தோழன்

அருளியவன் சிவன்

இறுதியில் நம்மை அழைப்பவன் எமன் 

செவ்வாய், 1 அக்டோபர், 2019

பூ மகளே

பூமியின் வெப்பத்தினால்
பனிமலை உருகவில்லை ஏனோ

பூமகளின் வெட்கத்தினால்
படைத் தலைவனும் மிரளுகிறான்

உணர்வுகள் உள்ளத்தைத்
தெளிவடையச் செய்கின்றன

உன் கண்களோ
வீரத்தை உதிரியாய்ச் சரிக்கின்றன  

சங்க இலக்கியங்களில்அரிசிக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா?

அடிசில்
அமலை
அமிந்து
அயினி
அவி
அடுப்பு
உண்ணா
உண்
கூழ்
சதி
சாதம்
சொண்றி
சோ
துப்பு
தோரி
பருக்கை
பாத்து
புகர்வு
புழுங்கல்
புன்னகை
பொம்மல்
மடை
மிதவை
முரல்
வல்சி

திங்கள், 30 செப்டம்பர், 2019

பணிவு

எங்கு சென்றாலும் பணிவோடு நடக்கக் கற்றுக்கொள் 
ஏனெனில் பணிவே பல இடங்களில் பாராட்டைத் தேடித்தரும்....

மறைந்தாயோ ராணுவ வீரனே

தாயை அழுகையில் சுட்டு
தந்தையின் ஆறுதலை ஏற்று
அண்ணனிடம் தோள்களில் தட்டு
தங்கையிடம் இடத்தினை விட்டு
என் தாய் என் வீடு என் திசை
என்பவற்றை மறந்து
எண்திசைகளும் என் தாய் நாடே
என்பதனை உணர்ந்து
எத்திசைக்குச் செல்கிறேன் என்ற
தெளிவினை இழந்து
ஆசைகள் அனைத்தையும் அடக்கி
ஐம்புலன்களை ஆளுமைப்படுத்தி
அன்றாடம் உன்னை நீயே வருத்தி
உன் மனதை நேர் வழிப்படுத்தி
அறிவினைத் திருத்தி அன்று நீ சென்றாய்
இராணுவ வீரனாய் எமக்காகக்
காட்டில் பதுங்கி,கடலினில் மூழ்கி
மலையினில் ஒதுங்கி வெயிலினில் வருந்தி
பாலை வானத்திலும் பாடு பட்டாய்
நாட்டிற்காக நீ உன் உயிரையே விட்டாய்
நீர் எம்முறவாக இருந்திருந்தால் கூட மறந்திருப்போம்
ஆனால் இன்று எங்களுள் உணர்வென ஆகிவிட்டீர்கள்
உங்கள் ஆத்மா இன்று எங்கள் மனதில்
மகாத்மாவாக மாறிவிட்டது
எங்கள் அஞ்சலியை அன்பு
வேண்டுகோளாக விடுகிறோம்
நீர் அதனை ஏற்க வேண்டி நாங்கள்
இங்கு அமைதி காக்கிறோம்