சனி, 5 ஜனவரி, 2019
வெள்ளி, 4 ஜனவரி, 2019
ஒருமுறை காட்சிக்கு வா
இத்தனை நாள் நீ என் விழியில்
தோன்றினாய் சிறு பெண்ணாக,
இன்று ஏனோ மின்னுகின்றாய்
ஐம்பொன்னாக,
கரு விழிகள் உறைந்தது,
பிற சிந்தனை யாவும் மறைந்தது,
உன் செவியில் சிறு கம்மலாக
அசைந்தாடுதடி என் மனதும்,
உன் மணிக் கூந்தலில்
இடம் பெற துடிக்கிறது என் உயிரும்,
பல நாட்கள் உன்னோடு இருந்தும்
உணரவில்லை இந்த மாற்றத்தை ....
இன்று பத்து நிமிடம் பார்த்ததில்
மறந்துவிட்டேன் என் தோற்றத்தை...
உன் நினைவில்
உறையும் பனியானேன், ,,
உருகும் மெழுகானேன்,,,,, இருப்பினும்
கேட்கின்றேன் பெண்ணே !!!!!!!
ஒருமுறை காட்சிக்கு வா.....
தன்னம்பிக்கை💪💪💪
இன்று கோவிலுக்குள் நுழையும் போது முதலில் பார்ப்பது பிச்சை காரர்கள் தான். சில குழந்தைகள் பெற்றோர் கைவிட்டதால் , சில பிள்ளைகள் பெற்றோரை கைவிட்டதால் இந்த முடிவுக்கு வருகின்றனர். ஆனால் இதில் மன்னிக்க முடியாத ஒரு வர்க்கம் இருக்கிறது. கால் கை நன்றாக இருந்தும் அதை பயன்படுத்தாமல் சோம்பேரி தனமாக தன் வாழ்க்கையை பிச்சை எடுத்து களிக்கின்றனர். இப்படி இருக்கையில் சில மாற்றுத்திறனாளிகள் உழைத்து உண்கின்றனர் .அப்படி பட்ட ஒரு மனிதனை தான் நான் தினமும் காலையில் பார்கிறேன். ஒரு மரத்தடியில் ஒரு பலகையின் மீது தன்னால் முடிந்த அளவு காய்கறிகளை வாங்கி விற்பனை செய்கிறார். நமக்கு எளிதாக ஒரு பொருள் கிடைத்தால் அதன் அருமை தெரியாது. அது போல தான் இந்த உலகத்தில் பலர் அனைத்து உறுப்புகள் உள்ள நிலையிலும் யாருக்கும் உதவாமல், சுயநலமாக வாழ்கின்றனர். நாம் எத்தனையோ பொருள்களை சூப்பர் மார்க்கெட்டில் வாங்குகிறோம் , ஆனால் இது போல் உள்ளவர்களுக்கு உதவ விரும்பினால் அவர்களிடம் ஒரு பொருளாவது வாங்கி உதவி புரிவோம். அவர்கள் தன்னம்பிக்கையை வளர்ப்போம்.
செவ்வாய், 1 ஜனவரி, 2019
2018- கல்லூரிப் பயணம்
எவருடைய அறிமுகமும் இல்லாமல், கல்லூரியில் சேர்ந்து முதல் பருவம் முடிந்து , இரண்டாம் பருவம் தொடங்கும் ஆண்டு 2018 .
" உன் நண்பன் யாரென்று சொல்! நீ யாரென்று சொல்கிறேன் " என்பார்கள் . அதுபோல, வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர்கள் , சாதித்தவர்கள் என அனைவருக்கும் தன்னைவிட சற்று வயதில் மூத்தவரின் நட்பு அவர்களுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.அதைப்போல, எனது கல்லூரியில் நான் முதலாமாண்டு படிக்கும்போது மூன்றாம் ஆண்டு படித்து வந்த வைசாலி செல்வம் அவர்கள்.எங்கள் துறை மாணவிகள் மட்டுமல்லாமல் , அனைத்துத்துறை மாணவிகளுக்கும் மதிய இடைவேளையில் என அனைத்து தருணங்களிலும் அக்காவைச்சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். அவர் அனைவரிடத்திலும் நடந்துகொள்ளும் விதம், அனைவரையும் சமம் என பார்க்கும் குணம் , அடுத்தவரிடத்திலே உள்ள திறமையை வெளிக்காட்ட அவர்காட்டும் உத்வேகம் என அனைத்தையுமே தூரமாக நின்று ரசித்திருக்கிறேன். அந்த மாதிரியான சமயங்களில் தான் எனது கல்லூரியில் வேந்தர் தொலைக்காட்சியில் நடைபெறும் முனைவர். ஜெயந்தாஸ்ரீ பாலகிருஷ்ணன் தொகுப்பாளராக நடத்தும்" அறம் செய்வோம் " என்ற நிகழ்ச்சிக்காக நேர்காணல் நடைபெற்றது . அதில் நான் தயங்கி தயங்கி பேசிய இரண்டு வார்த்தைகளுக்கு அரங்கமே அமைதியாக இருந்தது.. ஆனால் , அக்காவின் கைத்தட்டல் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.. அதிலிருந்து தான் அக்காவிற்கும் எனக்குமான நட்பு வேரூன்ற ஆரம்பித்தது.
அக்காவின் ஆருயிர் தோழிகளாகிய சரண்யா அக்கா , சுஹாசினி அக்கா இருவரும் எனக்கும் மிக நெருக்கமானவர்கள் ஆனார்கள்..நான் வைசாலி அக்காவிடம் நெருங்கியதற்கான காரணம் என்னுடைய துறை மாணவி ஆனால், சரண்யா அக்கா ஆடை வடிவமைப்புத்துறையை சேர்ந்தவர், சுஹாசினி அக்கா கணித பிரிவைச் சேர்ந்தவர். இவர்களுடைய பாடங்கள், ஆசிரியர்கள் , துறைகள் என அனைத்திலும் வேறுபாடு இருந்தாலும் அன்பால் , நட்பால் இணைந்தார்கள்... நானும் அந்த அழகிய நந்தவனத்தில் இணைந்தேன். அக்காவிற்கும், எனக்கும் அதிக நேரம் கழிந்தது என் கல்லூரியின் " செமினார் ஹாலில்" தான். அங்கு தான் சாப்பிடுவோம் ...எவருக்காவது உணவில்லை எனில் , உடனே அக்கா தனது பேக்கில் பணம் எடுத்து சாப்பாடு வாங்கிக்கொடுப்பார்..தனக்கு எவ்வளவு பசி இருப்பினும் அடுத்தவருக்கு ஊட்டி விடுவதிலேயே தன் பசியை ஆற்றிக்கொள்வார்.. அறம் செய்வோம் நிகழ்ச்சிக்கான போட்டிகளும் கடுமையாகின..300 மேற்பட்ட மாணவிகளில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.. அதில், நானும் அக்காவும் தேர்வானோம் ... இதற்கு மிக உறுதுணையாக இருந்தவர் தமிழ்த்துறை தலைவர். முனைவர். இரா . குணசீலன் அய்யா அவர்கள்...எங்கள் முகத்தை நாங்களே தொலைக்காட்சியில் காணும் போது அளவுகடந்த பேரானந்தம்... நம் கல்லூரியின் அத்தனை படிக்கட்டுகளில் அக்கா கைப்பிடித்து நடந்ந அனுபவம் உண்டு..நாங்கள் நாலு பேரும் மாலை 4 மணிக்குமேல் துள்ளித்திரிந்த அனுபவம் உண்டு..ஒன்றாக அமர்ந்து உணவருந்தியது உண்டு..ஆனால், அந்த ஒருநாள், "இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை " என்பதை போல, வைசாலி அக்காவையும், சுஹாசினி அக்காவையும் வழியனுப்பி வைக்கும் தருணம்...ஆமாம் , கல்லூரியின் இறுதி நாள் .. அன்று மேடையில் முதல்வர், அனைத்து துறைத்தலைவர்கள் அமர்ந்திருக்க நன்றியுரை வழங்க சென்ற அக்கா அழுக ஆரம்பித்தவுடன் சுஹாசினி அக்கா சென்று தாங்கிப்பிடித்ததும் , இன்றும் கண்முன் அகலாமல் நிற்கிறது.. அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்த்துளி ததும்பி நின்றது. அக்கா கல்லூரிக்கு மட்டுமே விடைகொடுத்து சென்றார்.. என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டார்... காலங்கள் செல்ல நானும் இரண்டாம் ஆண்டு வந்து விட்டேன்.. இருப்பினும் அக்காவிடம் தினமும் அலைபேசியில் பேசுவது வழக்கமான ஒன்று... முதன்முதலாக அக்கா என்னை கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் முற்போக்கு சங்கம் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார். என் வாழ்க்கையில் முதன்முதலாக நான் ரயில் நிலையத்திற்கு சென்றதும் ரயிலை பயணம் சென்றதும் அப்பொழுது தான்...அந்த பயணம் எனக்கு பல நல்ல எண்ணங்களை கற்றுக்கொடுத்தது... அதன்பிறகு, கல்லூரி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்றால் அக்கா வீட்டிற்குச் செல்வது வழக்கம்.. டிசம்பர் 23 பெரியார் நினைவு நாளில் கூட பெரியார் இல்லத்திற்கு சென்று வந்தோம். இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கூட நாமெல்லாம் பாரதி கண்ட புதுமைப்பெண்கள் இரவு 10 மணிக்குமேல் தனியாக செல்கிறோம் என எப்பொழுதும் என்னை உற்சாகப்படுத்துவார்.. வைசாலி அக்கா தற்பொழுது பெண் தொழில் முனைவோர் ஆவதற்கான பயிற்சி எடுத்து வருகிறார்.. சுஹாசினி அக்கா மாவட்ட ஆட்சித்தலைவர் ஆவதற்கு படித்துக்கொண்டிருக்கிறார்.. சரண்யா அக்கா தற்போது மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்...அவரும் பெரிய ஆடை வடிவமைப்பாளராக வளருவார்.. நானும் என்னுடைய துறையில் டாக்டர் பட்டம் பெற்று என் குடும்பத்தின் வறுமையை ஒழிப்பேன்.. வைரமுத்து தன்னுடைய தோழிமார் கவிதைத்தொகுப்பில் பெண் பிள்ளைகளுடைய நட்பு என்பது 20 வயதுக்கு மேல் முறிந்து விடும்,
ஆடு கனவுகண்டா அருவா அறியாது.. புழுவெல்லா கனவுகண்டா. கொளுவுக்கு புரியாது .. எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்.. இருபது வயசோட இருவேறு திசையானோம்.. தண்ணியில்லா காட்டுக்கு . தாலி கட்டி நீ போக.. வறட்டூரு தாண்டி வாக்கபட்டு நா போக.. ஒம்புள்ள ஒம்புருஷன் ஒம்பொழப்பு உன்னோட .. எம்புள்ள எம்புருஷ எம்பொழப்பு என்னோட . .நாளும் கடந்துடுச்சு நரைகூட விழுந்திருச்சு.. வயத்தில் வளர்ந்த கொடி வயசுக்கு வந்திருச்சு. ஆத்தோரம் பூத்த மரம் ஆனை அடங்கும் புங்க மரம் நேத்து அடிச்ச புயல்காத்தில் சாஞ்சிடுச்சு.. 2018 கல்லூரிப்பயணம்இவ்வாறாக, இந்த கவிதை முடியும் .. எத்தனை தடைகள் வந்தாலும் , அனைத்தையும் , தகர்த்தெடுத்து இன்னும் ஒரு 5 வருடங்களில் மிகப்பெரிய சாதனை படைத்து சாதனைப்பெண்மணிகளாக மீண்டும் ஒருமுறை எங்கள் கல்லூரி என்னும் சொர்க்கத்தை சுற்றி வருவதற்கான முயற்சியை இந்த ஆண்டிலிருந்து எடுப்போம்....அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்
திங்கள், 31 டிசம்பர், 2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)