நம்மில் பலர் போராடி பெற்ற சுதந்திரத்தை பொறுப்பின்மை காரணமாக உதாசீனப்படுத்திகின்றனர் . இந்த சுதந்திரம் பெற எத்துணை பெறோர்கள் தன் பிள்ளைகளையும் , எத்துணை மனைவிகள் தன் கணவன்மார்களையும், எத்துணை குழந்தைகள் தன் பெற்றோர்களை இழந்தனர்.
ஆனால் நம்மில் பலர் சுதந்திரம் என்றால் என்ன என்பது அறியாமல் பல படித்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வாழ்க்கையை கேளிக்கை விருந்துகளிலும், தவறான செயல்களிலும் ஈடுபட்டு தன் அரிதினும் அரிதான வாழ்க்கையை அளித்து கொண்டு இருக்கின்றனர் . இந்த நிலை மாற வேண்டும் . இதை மற்ற நம்மால் மட்டும் தான் முடியும். தன் சொந்த நலத்தை தாண்டி தான் பிறந்த நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.
அப்துல் காலம் ஐயா கூறியது 2020 இல் இந்தியா வல்லரசு ஆகா வேண்டும் என்றால் நம்மால் இயன்ற சிறு சிறு தொண்டை நாட்டிற்காக செய்ய வேண்டும். சிறு துளி பெருவெள்ளம் என்பதுக்கேற்ப சிறு சிறு மாற்றமே நம் நாட்டின் முன்நேற்றத்திற்கு காரணமாக இருக்கும். ஆனால் சிலரோ சிறு தவறு தானே என்று செய்யும் ஒவ்வொரு செயலும் பெரிய தவறு செய்ய ஒரு சிறு பொறியாக மாறி விடும்.