ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

காரணங்களும், போலி சாக்குகளும் முட்டால்களுக்கே!

                   காரணங்களும், போலி சாக்குகளும் முட்டால்களுக்கே!

நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையானது மிகவும் அழகானது. அதன் அவசியம் எப்பொழுதும் ஒரு கரையில் நின்று பார்க்கும்போது தெரியாது. அத்தகையது அமையாது வாழ போராடிக்கொண்டு இருப்பவர்க்கே அதன் அத்தியாவசியம் புரியும்.குறை கூறவும், இல்லாததை பற்றி கவலை படுவதும், அடுத்தவரை பற்றி பொறாமை கொள்வதும், ஏமாற்றுத்தனமும், நயவஞ்சகமும், சுறன்டல்களும், கொண்ட இந்த உலகில் இன்னும் சிலர் தங்களை மாற்றிக்கொண்டு, தங்களை சுற்றி இருப்பவர்களையும் மாற்ற முயற்ச்சிக்கின்றனர்.


ஐன்ஸடின் கண்டு வியந்த இந்திய மனிதர்

 ஐன்ஸடின் கண்டு வியந்த இந்திய மனிதர்

இவரது பெயர் தாண்டோ கேஷவ் கார்வ்.இவர் இந்தியாவின் தலைசிறந்த சீர்திருத்தவாதியாவார்.குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியிலும், தனிமனித சுதந்திரத்திலும், விதவைகளுக்கு மறுமனம் செய்வது மற்றும் சாதி ஒளிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தியவர்.இவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் முறுட் என்ற சிறிய இடத்தில் பிறந்தார். இவரை ``மகரிஷி கார்வ் அல்லது அன்னா கார்வ் என்று அன்புடன் அழைப்பர்.தனது 14ஆவது வயதில் திருமணம் செய்தவர். பூனாவில் இருக்கும் ஃப்பெர்குசான் பல்கலைக் கழகத்தில் கணித பேராசிரியராக பணிபுரிந்தவர். தன்னை சுற்றி இருந்த விதவைகளின் அவல நிலைகண்டு அவர்களுக்கு உதவ ``வித்வ விவஹோட்டஜாக் மன்னாலி( விதவைகள் மறுதிருமண அமைப்பு) என்பதை 1883ஆம் ஆண்டு நிறுவினார்.
இவர் செய்த சாதணைகள் பற்பல,
1.இந்தியாவின் முதல் மகளீர் கல்லூரியை (ஸ்ரீமதி ந்திமாய் தாமோதர் தாக்கர்சே) நிறுவியவர் இவரே.
2.1936 இல் மாகாராஷ்ட்ராவின் சிறு கிராமங்களிலும் ஆரம்ப் பள்ளிகளை துவங்கினார்.
3.1944ஆம் ஆண்டு ``சமதா சங்” (மனித சமத்துவ குழு) நிறுவினார்.
1955ஆம் ஆண்டு பத்ம விபூஷன் மற்றும் பாரத ரத்னா வருது பெற்றார்.அந்த அதே ஆண்டு அவரது புகைப்படம் அஞ்சல் பொறிப்பிலும் வெளியிடப்பட்டது.



4.குயின் ரோடு என்ற சாலை பிற்காலத்தில் மகரிஷி காரவ் என்று மாற்றிஅமைத்தனர்.

எப்பொழுதும் நம்மை நாம் நம்ப வேண்டும்

 எப்பொழுதும் நம்மை நாம் நம்ப வேண்டும்
(அந்த பறவையின் நம்பிக்கை அதன் இறகில் அந்த கிளையில் இல்ல)

வாழ்வில் பல சூழல்களில் நாம் நமது இலச்சியத்தை அடைய இயலுமா? இயலாதா?என்று எண்ணி வருந்துவது உண்டு. நம்மால் இந்த இலக்கை அடைய இயலுமா? நமக்கு அத்தகைய திறமை இருக்கிறதா? உலகில் நம்மை விட திறமை படைத்தவர்கள் பலர் இருக்கின்றனரே? நமது இந்த குடும்ப சூழலில் நம்மால் இதனை சாத்தியப்படுத்த இயலுமா?என்று பல கோள்விகளோடே பதிலை கண்டுகொண்டு நம்மை நாம் திருத்தாமல் இருக்கிறோம். நாம் எப்போழுது நம்மீது நம்பிக்கை கொண்டு முழுமையாக நம்மை ஒரு செயலில் ஈடுபடுத்துகிறோமோ ! அப்போழுதுதான் நமக்கு வெற்றி கிடைக்கும். 

உன்னால் என்ன இயலும்!

  உன்னால் என்ன இயலும்!

நாம் அனைவராலுமே அனைத்து சாதனைகளும் புரிய இயலாது, ஆனால் நம் அனைவராலும் முயற்ச்சி என்ற ஒன்றை செய்ய இயலும். அத்தகையான விடாமுயற்ச்சியாலே பலர் இவ்வுலகில் சாதித்துள்ளனர். ஆகையால் நாம் விடாமுற்ச்சியை மேற்கொண்டால் வாழ்வில் மலரலாம்.


உறுத்தும் பொன்மொழிகளின் தமிழாக்கம்

 உறுத்தும் பொன்மொழிகளின் தமிழாக்கம்
-உங்கள் நேரத்தை உபயோகிப்பீர் இல்லை உதாசனப் படுத்துவீர்.


-உங்கள் எதிர்காலமானது நீங்கள் இன்று என்ன செய்கிறீர்கள் என்பதில் உருவாகிறது.


-வழக்கமாக என்று அவர்கள் அழைக்கும் வகையில் உருவாதலை நான் மறுக்கிறேன்.(எதிலும் வித்தியாசம் வேண்டும்)


-கற்றுக்கொள்வதை என்றும் நிறுத்தக் கூடாது ஏனெனில் வாழ்க்கை நமக்கு என்றும் கற்ப்பிப்பதை நிறுத்துவது இல்லை.


-வெற்றியாளர்கள் என்றும் வெறும் சாக்குகளை உறுவாக்குவதில்லை.


-பாதுகாப்பான தோர்வுகளை அமைப்பவர் எவரும் வாழ்வில் வளருவதில்லை.


-உங்களை வெறுப்பவர்களை நீங்கள் மதிக்க வேண்டும் ஏனெனில் உங்களை அவர்கள் தான் சிறந்தவர் என்று எண்ணுபவர்கள்.