எவரும் வாய்ப்பே தரவில்லை
நான் வளரமாட்டேன் என்று....!!
என்னையும் ஒருவர்
மண்ணில் விதைத்தார்,,,,
ஒருநாள் நானும்
முளைத்து வருவேன் என்று...!!
நானோ பல நாள்கள்
முயற்சி செய்தேன்...!!
இன்று
பூமிக்கு அடியில்
வேர் பிடிக்க
ஆரம்பித்து விட்டேன்...!!
விரைவில்
பூமிக்கு மேலேயும்
அவதரிப்பேன்,,
அனைவருக்கும்
பயன்தரும்
பெரிய மரமாக...!!!!
அதிகம் யாரும் பயணிக்காத பாதையில் துணிச்சலுடன் செல்லும் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் எமது கல்லூரியில் மாபெரும் பேச்சுப்போட்டி வருகிற ஜனவரி 6 அன்று நடைபெறவுள்ளது.
இப்பேச்சுப்போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளை அடிப்படையாக வைத்து 11 மற்றும் 12 - ம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளுக்கு பல்வேறு நிலைகளில் நடத்தப்படும். மேலும் சிறந்த பள்ளிக்கு சிறப்பு பரிசான LED டிவி வழங்கப்படும்.
வளர்ந்து வரும் நாட்களில் அன்று முதல் இன்று வரை ஆண் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் பெண்களின் எண்ணிக்கை மிக குறைவாக தான் உள்ளது என்பதில் ஐயமில்லை.
இளம் பெண் பேச்சாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேச்சுப்போட்டி நடைபெறும் என்பதை பெருமிதத்துடன் தெரிவிக்கிறோம். ஆர்வமுள்ள பள்ளி மாணவிகள் உங்கள் பேச்சு திறமையை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்விழாவிற்கு தமிழ் உறவுகள் தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்...