உங்களுக்கு எந்தெந்த உரிமைகள் தேவை என்று கருதுகிறீர்களே...அதே உரிமைகளை பிறருக்கும் வழங்குங்கள்...
சிறகடிக்க தொடங்கியவுடன் எந்த பறவை குஞ்சும், அதன் தாயிடம் கூட, இரையை பிச்சை கேட்பதில்லை...
வாழ்க்கை ஒரு வரம்.. காத்திருக்க, நினைக்க, மகிழ, வருந்த, விரல்கோர்த்து நடக்க, பழைய கதைபேச, ஊர் சுற்றித்திரிய... ஒரு உயிர்த்தோழி/தோழன் அமைந்தால்..
குறைகளை காண்பதை விட..
நிறைகளை கண்டு மகிழ்ச்சி அடைவோம்...!!!
ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..!
சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..!
இதில் யார்_பணக்காரர்...?!!
வாழ்க்கையில் வெற்றி அடையவே எல்லோரும் விரும்புகின்றனர். ஒரு சிலர் துடிக்கின்றனர் என்றும் சொல்லலாம். ஆனால் ஒரு சிலரே வெற்றிக் கனியைப் பறிக்கின்றனர். பலர் தோல்வியைத்தான் தழுவுகின்றனர்.
ஒரு சிலரால் மட்டும் எப்படி வாழ்க்கையில் வெற்றி பெற முடிகிறது? வெற்றி சூத்திரம் தான் என்ன?
வெற்றி சூத்திரம்:
வெற்றி என்னும் முக்கோணத்திற்கு கடின உழைப்பு, புத்திசாலித்தனம், வெற்றியை மட்டுமே பற்றிய சிந்தனை என்னும் மூன்று விஷயங்கள் தேவை.
"வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன்,அதற்கு நீங்கள் தான் உதவி புரிய வேண்டும் குருவே ",என்று சீடன் ஒருவன் அந்த குருவிடம் சென்று நின்றான்...
"ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?"என்று கண்ணீர் வடிததான்.
"தம்பி .. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்
எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.
"புரியவில்லை குருவே.."என்றான் அந்த சீடன்
"எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"
"எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்.."
"கழுதையைப் பின்னால் தட்டினால்?"
"தட்டியவரை எட்டி உதைக்கும்.."
"ஆனால் குதிரை..?"
"முன்னால் பாய்ந்து செல்லும்.."
"புரிந்ததா.. நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.. "
சீடன் தெளிவடைந்தான்
இதுதான் வாழ்வின் ரகசியம் கூட....
‘உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல்லட்டும்’ என்றான் மகன்.
‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ – அம்மாஆவலுடன்,
‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லுவியே, எப்படியாவது தனிக் குடித்தனம் போயிடு அப்ப தான் உனக்கு நிம்மதின்னு’ – அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டாளாம்.
‘ரொம்ப மகிழ்ச்சி. இப்பதான் மனச்சுமை குறைஞ்சது. ஏதோ கெட்ட செய்தினு சொன்னியே, அது என்னடா?’
‘நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போறதுன்னு முடிவு எடுத்திட்டோம்’
அம்மாவிற்கு அதிர்ச்சி. மனச்சுமை கூடியது. முகம் இறுகியது.யாரோ முகத்தில் அறைந்தது போல இருந்தது....