திங்கள், 23 அக்டோபர், 2017

வாழ்வின் ரகசியம்

"வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன்,அதற்கு நீங்கள் தான் உதவி புரிய வேண்டும் குருவே ",என்று சீடன் ஒருவன் அந்த குருவிடம் சென்று நின்றான்...

"ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?"என்று கண்ணீர் வடிததான்.

"தம்பி .. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்

எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.

"புரியவில்லை குருவே.."என்றான் அந்த சீடன்

"எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"

"எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்.."

"கழுதையைப் பின்னால் தட்டினால்?"

"தட்டியவரை எட்டி உதைக்கும்.."

"ஆனால் குதிரை..?"

"முன்னால் பாய்ந்து செல்லும்.."

"புரிந்ததா.. நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.. "

சீடன் தெளிவடைந்தான்

இதுதான் வாழ்வின் ரகசியம் கூட....

தொடர்புடைய படம்



நியாயம்



‘உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல்லட்டும்’ என்றான் மகன்.

‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ – அம்மாஆவலுடன்,

‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லுவியே, எப்படியாவது தனிக் குடித்தனம் போயிடு அப்ப தான் உனக்கு நிம்மதின்னு’ – அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டாளாம்.

‘ரொம்ப மகிழ்ச்சி. இப்பதான் மனச்சுமை குறைஞ்சது. ஏதோ கெட்ட செய்தினு சொன்னியே, அது என்னடா?’

‘நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போறதுன்னு முடிவு எடுத்திட்டோம்’
family க்கான பட முடிவுஅம்மாவிற்கு அதிர்ச்சி. மனச்சுமை கூடியது. முகம் இறுகியது.யாரோ முகத்தில் அறைந்தது போல இருந்தது....

நன்பனிற்க்கும் உயிர்தோழனிற்கும் என்ன வித்தியாசம் ?

நன்பனிற்க்கும் உயிர்தோழனிற்கும் என்ன வித்தியாசம் ?

நான்; இன்று தேர்வு சரியாக எழுதவில்லை. மதிப்பெண் கண்டிபாக குறைவாகதான் வரும்,மிகவும் வருத்தமாக உள்ளது!
நன்பன் ; விடு அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்.வருத்தம் வேண்டாம்!
உயிர் தோழன் ; இப்ப அதிகமா வாங்கி என்ன பன்ன போற? போட்டு விடு? வா சாப்ட போலா.பைத்தியோ!friend best friend க்கான பட முடிவு

(அவனை கவலையிலிருந்து விடுபட செய்பவன் நன்பன்! கவலையே உனக்கு இல்லை என்பவன் உயிர் தோழன்)

எ.கா2;
பாலு ; என காதல் தோல்வி அடைந்து விட்டது?
நன்பன் ; வாழ்வில் நீ இனி இதை பற்றி யோசிக்கக் கூடாது! முன்னேறி செல் யாரையும் திரும்பி பார்க்காதே!
உயிர் தோழன் ; போட நீ அவள பாக்கும்போதே தெரியு இப்புடி ஆகூனு !

விடாமுயற்சி

ஒரு குரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். சீடன் விளையாட்டாக மரத்தில் ஏறிக் கொண்டிருந்தான். அங்கே பட்டாம்பூச்சியின் வலைப்பின்னலைக் கண்டான்.அந்த பூச்சி பின்னலை விட்டு வெளியே வர திணறிக் கொண்டிருந்தது.குழப்பத்துடன் சீடன், “ரொம்ப சிரமப்படுதே! அதற்கு உதவி செய்தாகணும்!” என்ற எண்ணத்துடன் அதை நெருங்கினான்.

கண் விழித்த குரு சீடனைக் கண்டார்.“சும்மாயிரு! அதன் போக்கிலேயே விட்டு விடு!” என்று சொல்லிவிட்டு மீண்டும் உறங்கினார்.சீடனுக்கு மனம் கேட்கவில்லை. குருவுக்கு தெரியாமல், தடுமாறும் அந்த பூச்சியை பின்னல் கூட்டில் இருந்து விடுவித்தான்.ஆனால், அந்த பூச்சி பறக்க முடியாமல் தரையில் விழுந்தது.கண் விழித்த குரு சீடனை நோக்கி,“சொல்லியும் கேட்கவில்லையே! அதன் சிறகை சேதப்படுத்தி விட்டாயே! பட்டாம் பூச்சி பறக்க வேண்டுமானால், அது தானாகவே கூட்டை விட்டு வெளியே வந்திருக்க வேண்டும்” என்று கடிந்து கொண்டார்.

பட்டாம்பூச்சி மட்டுமல்ல! மனிதனுக்கும் இது பொருந்தும். வாழ்வில் குறுக்கிடும் கஷ்ட நஷ்டங்களுக்காக பிறரது உதவியை நாடக்கூடாது. அவனாகவே சமாளிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும். விடாமுயற்சியுடன் செயலாற்றினால் தான், தடைகளைத் தாண்டி உயர முடியும்.butterfly க்கான பட முடிவு

தூரம்



மாட்டுவண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.

குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.
‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’
‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.
சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டுமாட்டு வண்டிக்காரனுக்குக் கோபம். ‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.
‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.
சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்தி கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.
கற்பிப்பவன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது தானே?....mattu vandi க்கான பட முடிவு