சனி, 21 அக்டோபர், 2017

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்

இப்பழமொழியில் வரும் 'ஆத்துல' என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம் 'அகத்தில்' என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும் இப் பழமொழியில் வரும் பொருள் 'மனம் அல்லது நினைவு' என்பதாகும். அகத்தில் போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். 'அளந்து' என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளது. இது 'அறிந்து' என்று வரவேண்டும். இவையே இப் பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.

சரியான பழமொழி: “அகத்தில் போட்டாலும் அறிந்து போடவேண்டும். “

நமது அறிவு தெளிவாக இல்லாவிட்டால் விளைவு மோசமாகிவிடும் அல்லவா?. அதனால் தான் கருத்துக்களை நினைவில் கொள்ளும்போது தெளிவாக அறிந்தபின்னரே நினைவில்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர். இதுவே இப்பழமொழியின் உண்மையான விளக்கமாகும்.magilchi க்கான பட முடிவு

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் -தவறு.


அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். -

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.

.umbrella க்கான பட முடிவு

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - .தவறு.


நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு -

( சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு... அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். )cow க்கான பட முடிவு

படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்

படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.

படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான்
teacher க்கான பட முடிவு

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.
சரியான பழமொழி :

ஆயிரம் பேரிடம் போய் சொல்லிmarriage க்கான பட முடிவு ஒரு கல்யாணத்த பண்ணு