ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.:ஆறு வயதிலும் சாவு வரும்;நூறு வயதிலும் சாவு வரும்.உண்மையான பொருள்:மகாபாரதத்தில் கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் (ஐவர்) பக்கம் இருந்தாலும், கெளரவர்கள் (நூறு பேர்) பக்கம் நின்றாலும், போரின் போது இறப்பு வரும். ஆதலால் துரியோதனன் மீதுள்ள நட்பின் காரணமாக கெளரவர்களிடமே இருக்கிறேன் என்று சொன்னது.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
சட்டியில் என்ன (சோறு) இருக்கிறதோ அது தான் நமக்கு கிடைக்கும்.
உண்மையான பொருள்:
சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை. என்ன வேலைக்கு போவது என தெரியாமல் நிற்பவன் தான் போலிஸ் வேலைக்கு போவான்; வேறு வேலைக்கு போக வழி தெரியாதவன் வாத்தியார் வேலைக்கு போவான்.உண்மையான பொருள்:மற்றவருக்கு போக்கு கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை;வாக்கு கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பது சரியான பொருள்.
விருந்தும் மருந்தும் மூன்று நாள்.விருந்துக்கு சென்றால், மூன்று நாட்களுக்கு மேல் இருக்க கூடாது. மருந்து உட்கொண்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் உண்ண கூடாது. அது எந்த ஒரு தனி மனிதனையும் பாதிக்கும்.உண்மையான பொருள்:ஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய குளிர் நாட்களில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய தினங்களில் உணவை குறைவாய் உட்கொண்டு மருந்து உண்ண வேண்டும்.
புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து.மனது புண்பட்டிருக்கும் போது புகை விட்டு (புகையிலை) ஆற்றி கொள்ள வேண்டும்.உண்மையான பொருள்:புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று.மனது புண்பட்டிருக்கும் போது, தமக்கு பிடித்த வேறொரு செயலில் மனதை புக விட்டு ஆற்றி கொள்ள வேண்டும் என்பதே சரி.