பொறுமையின் ஆதாயம்...
தாமஸ் ஆல்வா எடிசன் வெஸ்டர்ன் யூனியன் கம்பனி ,வணிகம் சம்பந்தமாகப் பேச அழைத்திருந்தது . அவர் கண்டுபிடித்திருந்த தந்திப்பதிவு நாடா உரிமையை அவர்கள் கேட்டிருந்தார்கள். தன் கண்டுபிடிப்புக்கு என்ன விலை கோருவதென்று எடிசன் தீர்மானித்திருக்க வில்லை அந்த நிறுவனத்தாரிடம் இரண்டு நாள் அவகாசம் கேட்டார்.
தன் மனைவி உடன் ஆலோசித்து 20,000டாலர் விலையாக கோரலாம் என்று முடிவு செய்தார்.
பிறகு, அந்த நிறுவனத்தின் சார்பாய் அவரை வரவேற்ற அதிகாரி கேட்டார் 'நல்லது மிஸ்டர் .எடிசன்,நீங்கள் என்ன விலை எதிர் பார்க்கிறீர்கள் ?என்று .
20000டாலர் அதிகமோ என அமைதியாக அமர்ந்திருந்தார்எடிசன். எடிசனின் பதிழுக்காக அதிகாரி காத்திருந்தார் ....
ஆயினும் எடிசன் வாய் திறந்து பேசவில்லை ....
அதிகாரி அதற்கு மேலும் பொறுக்கமுடியாமல் பேச முனைந்தார் .'எடிசன்! ஒரு லட்சம் டாலர்கள் ,சரியா?என்று விலை வைத்தார்.....
பொறுமையோடிருந்த எடிசனுக்கு ஆதாயம் .பொறுமை இழந்த அதிகாரியால் நிறுவனத்திற்கு இழப்பு.....
எந்த செயலையும் பொறுமையோடு செய்தால் வெற்றி நிச்சயம்...மாறாக அவசர அவசர மாக செய்தால் தோல்வி தான் மிஞ்சும்...