வியாழன், 10 ஆகஸ்ட், 2017

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகுபடம்

புதன், 9 ஆகஸ்ட், 2017

பறக்காத பறவைகள் நாங்கள்



       



          ஈமு , நெருப்புக்கோழி, கிவி, பெங்குயின், ரியா, கேசோவாரி போன்றவை பறவைகளில் பறக்காத புகழ் பெற்ற பறவைகள். ஆனால் அவை ஓடுவதில் கில்லாடிகள். இந்த பறவைகள் அனைத்திற்கும் இறகுகள் இருந்தாலும் தன் உடலை தானே காற்றில் தூக்க முடியாத அளவுக்கு பெரிய உருவமைப்பை கொண்டிருப்பதால் பறப்பதில்லை. ஆனால் இவை பறக்காமல் இருப்பதற்கு இந்த காரணம் மட்டுமல்ல. அவை வேறு பறவைகளில் இருந்தோ விலங்குகளில் இருந்தோ பிரிந்து வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றன. ஆனாலும் இதற்கு உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் பறக்காத பறவை இனங்களின் வாழ்விடங்களை பொறுத்தவரை அவற்றுக்கு எதிரி இனங்களால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்பதால் பறக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இப்பறவைகளின் இறக்கைகள் காலப் போக்கில் சுருங்கிவிட்டன. அதனால் இறக்கைகள் பறவையை அந்தரத்தில் உயர்த்தும் திறன் அற்றதாகவும் மாறி விட்டது. ஆனால் அவை உறுதியான உடலையும் சக்தி மிகு கால்களையும் பெற்றிருக்கின்றன. எனவே அவை மிக வேகமாக ஓடும் திறனுடையது.

ரோஜா மலர்




          சிறுநீரக கோளாறு, மூச்சுக் கோளாறு, மலம், வாயு சிக்கல், இரத்த சோகை, கண் எரிச்சல், கண் படல வீக்கம், கண்களில் தோல் வளர்ச்சி போன்றவை குணமடையும்.
           1)சிறுநீரகத் தொந்தரவு: தினமும் ஒரு சில இதழ்கள் சாப்பிட்டால் நல்லது. அல்லது ரசமாக சாறு பிழிந்து தினமும் ஒரு மேஜைக் கரண்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
           2)அரைத் தேக்கரண்டி மஞ்சள் பொடியுடன் ஒரு 5 மிலி ரோஜா திரவத்தை கலந்து தூய்மையான மெல்லிய துணியில் வடிகட்டி இந்த திரவத்தை தொடர்ந்து கண்களில் விட்டு வந்தால் கண் தொந்தரவுகள் நீங்கும்.
          3)தினமும் 10 அல்லது 15 இதழ்களையும் அல்லது ரோஜா வடிநீர் குடித்து வர மலச்சிக்கல் மற்றும் வாயு தொந்தரவுகள் நீங்கும்.
    

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

தமிழை காப்போம்





          நம்மில் பலர் ஆங்கிலம் தான் பெரியது என்று எண்ணி தமிழ் மொழியை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்கின்றோம். ஆங்கிலம் என்பது மொழி தமிழ் என்பது நம்முடைய அடையாளம் என்பதை நாமும் மறந்து நம்முடைய சந்ததியினரும் மறக்க ஏதுவான வழியை உருவாக்கி கொண்டிருக்கிறோம். தமிழை வளர்க்க ஒரு சிறந்த வழி நம்முடைய தொலைக்காட்சியில் சன்சிங்கர், சூப்பர் சிங்கர் போன்று பாடும் நிகழ்ச்சிகளில் சினிமா பாடலை பாடுவது போல தமிழில் உள்ள “ திருக்குறள், இராமாயணம், பாரதியார், பாரதிதாசன் பாடல் தேவாரம்” போன்ற தமிழ் இலக்கிய பாடல்களை தன் சொந்த நடையில் பாடினால் தமிழ் வளர பெரிய உதவியாக இருக்கும்.