டென்மார்க்கைச் சேர்ந்த நீல்ஸ்போர் என்ற
அறிவியல் அறிஞர் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆனால், அவர் தன்
மாணவர்களிடம்
கட்டுரைகளை எழுதுவதற்காக குறிப்புகளை சொல்லும் போது சில நேரங்களில், ஏற்கனவே எழுதச்சொன்ன
வார்த்தைகளை
மாற்ற சொல்வார். நீண்ட நேரம் ஆராய்ச்சி செய்து சமன்பாடுகளை உருவாக்குவார். பான்னர் மீண்டும்
கட்டுரைகளை சரிபார்த்து விட்டு மேலும்
செய்திகளை
சேர்க்கச் சொல்வார். புத்தக அலமாரிக்குச் சென்று புத்தகங்களை எடுத்துக் குறிப்புகளை
எடுத்துக் கொண்டு அவற்றைக் கட்டுரைகளில்
சேர்த்து
விடுவார்.
இதற்கு நேர்மாறானவர் டிராக். அவர் எதையுமே
துல்லியமாக சிந்திக்கக்கூடியவர். தேவையான குறிப்புகளையும், வார்த்தைகளையும்
முறையாக
தயார் செய்த பின்னரே கட்டுரைகளை எழுதத் தொடங்குவார். அதன் பிறகு எந்தக் காரணத்தைக்
கொண்டும் திருத்தம் செய்ய மாட்டார்.
ஒருமுறை டிராக், நீல்ஸ்போரை பார்க்கச் சென்றார்.
நீல்ஸ்போர் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு இருந்தார். “ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள்?”
என்று
கேட்டார். அதற்கு, “ஒரு வாக்கியத்தை ஆரம்பித்தால், அதை திருப்திகரமாக முடிக்க வேண்டும்.
இல்லாவிட்டால், எனக்கு உறக்கமே வராது. நீ
இப்படி
ரிஸ்க் எடுக்க மாட்டாயா?” என்று கேலியுடன் கேட்டார்.
அதற்கு டிராக், “எனக்குப் பாடம் சொல்லிக்
கொடுத்த ஆசிரியர், ஒரு வாக்கியத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல், அதைத் தொடங்காதே
என்று
தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்” என்றார், அமைதியாக.