வியாழன், 2 மார்ச், 2017

பிரமிடு பற்றிய அரிய தகவல்கள்....!! 


Image result for pramit

 கிசாவின் பெரிய பிரமிடு பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதுமாகும்.

கிசாவின் பெரிய பிரமிடுவை, உலகின் மிகப் பெரிய ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பம் கிசாவின் பெரிய ஸ்பிங்ஸ் காத்துக்கொண்டு வருகின்றன.

முதல் அறியப்பட்ட பிரமிடு கட்டிட கலைஞர் இம்ஹொடெப், ஒரு பண்டைய எகிப்திய பல்துறை வல்லுநர், பொறியாளர் மற்றும் மருத்துவர்.

 பிரபலமான நம்பிக்கைக்கு முற்றிலும் மாறான, பிரமிடுகள் அடிமைகள் அல்லது கைதிகளால் கட்டப்படவில்லை, ஆனால் வழக்கமான ஊதியம் பெறும் தொழிலாளர்களால் கட்டப்பட்டது.

 பண்டைய எகிப்திய பிரமிடுகள் மிகவும் நன்கு அறியப்பட்ட பிரமிடு கட்டமைப்புகள் ஆகும்.

 130க்கும் மேற்பட்ட பிரமிடுகள் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

 3800 ஆண்டுகளுக்கும் மேலாக, கிசாவின் பெரிய பிரமிட் உலகில் மனிதரால் கட்டமைக்கப்பட்ட உயரமான அமைப்பாகும்.

 அனைத்து எகிப்திய பிரமிடுகளும் நைல் நதியின் மேற்கு கரையில் கட்டப்பட்டுள்ளது. 

 எகிப்திய பிரமிடுகளின் உள்ளே, வெப்பநிலை ஒப்பீட்டளவில் நிலையானதாக சுமார் 20 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

 பிரமிடுகளின் நான்கு முகங்கள் சற்று குழியானதாக இருக்கும், இந்த வழியில் கட்டப்பட்ட ஒன்று பிரமிடு மட்டுமே.

குன்னக்குடி வைத்யநாதன்



பிரபல வயலின் இசைக் கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன் 1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் பிறந்தார். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக் கலைஞர்கள்.

ஒருமுறை இவர்களது கச்சேரிக்கு வயலின் கலைஞர் வரவில்லை. காரணம் கேட்டதற்கு, 'ஏன் உங்கள் வீட்டு கடைசிப் பையனை வயலின் வித்வான் ஆக்கிவிட வேண்டியதுதானே!" என்றார். அதையே சவாலாக எடுத்துக் கொண்ட தந்தை 8 வயதே ஆன மகனுக்கு வயலின் கற்றுத் தந்தார்.

 வயலின் கற்றுக்கொண்டு தனது 12-வது வயதில் முதல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று தந்தைக்கு பெருமை சேர்த்தார். 1976 முதல், வயலின் இசையை கொண்டு கச்சேரி செய்தார்.

1969-ல் 'வா ராஜா வா" என்ற திரைப்படத்துக்கு முதன்முதலாக இசையமைத்தார். இசைப் பேரறிஞர், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி, கலைமாமணி உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

 'வயலின் சக்கரவர்த்தி" என்று போற்றப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் 73-வது வயதில் (2008) மறைந்தார்.

புதன், 1 மார்ச், 2017

தர்மம் என்றால் என்ன..??


                        
                        தர்மம் என்றால் என்ன ?
             





            தர்மத்தை நிலைநிறுத்த பல போர்கள் நடந்ததாக நம் இலக்கியங்கள் கூறுகின்றன. தர்மத்தை நிலை நிறுத்ததான் மஹாபாரத குருஷேத்திரப் போரும் நடந்தது. மஹாபாரதப் போரில், போர் முடிந்த பின் கிருஷ்ணன் அர்சுணனுக்கு செய்ததும் தர்ம உபதேசம் தான். கர்ணனைப் பொறுத்த வரை கொடை கொடுத்து தர்மம் செய்தார்.
             தர்மத்தை சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்தலாம். அது எப்படி என்றால், நமக்கு மற்றொருவர் எந்த காரியங்களை செய்தால் நாம் மகிழ்வாக இருப்போமோ அதை நாம் பிறருக்கு செய்ய வேண்டும். அதைப் போல நமக்கு மற்றவர்கள் எந்த காரியங்களை செய்தால் நம் மனம் வருந்தும் என்று நினைக்கின்றோமோ, அக்காரியங்களை நாம் மற்றவருக்கு செய்யாமல் இருக்க வேண்டும். இதுவே, தர்மமாகும்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

ஒன்றா, பலவா பிறப்புக்கள்?


Image result for karuppaiyil ulla kuzhanthai

 பொதுவாக இயற்கையின் நிகழ்வுகளில் ஒரே ஒரு முறை மட்டும் நடக்கக்கூடிய நிகழ்வு என்று எதுவும் இல்லை. எல்லா நிகழ்வுகளும், அனைத்திலும் திரும்பத் திரும்ப நடக்கக் கூடியவைகள் ஆகும். ஒரு முறை மழையாக பூமியில் விழுந்த நீரானது மீண்டும் பல முறை மழையாக பூமியை வந்தடையக் கூடிய ஒன்றாகும். பிறப்பு மட்டும் ஏன் ஒரு தடவையோடு நின்று விடவேண்டும்!

 ஒரு ஆத்மா என்பது ஒரு ஜீவன் ஆகும். அந்த ஆத்மாவிற்கு உடல்கள் மாறி மாறி அமைவது, அதற்கு புதுப்புது அனுபவங்களை கற்று தருவற்கு தான். ஒருவன் பள்ளிக்கு ஒரு நாள் சென்றால் அனைத்தும் கற்றுவிட முடியாது, திரும்பத் திரும்ப சென்றால் தான் கற்றுக்கொள்ள முடியும்.

 ஆத்மாவானது பரிபூரணத் தன்மை அடையும் வரையில் பிறந்துகொண்டே இருக்கும் என்பது இயற்கையின் பேரமைப்பாகிறது.

 ஒரு பிறப்புதான் உண்டு என்பது ஆத்மாவுக்குத் துவக்கமும் முடிவும் உண்டு. மனிதனுக்கு ஒரே ஜென்மத்தைக் கொடுத்து விட்டுப் பிறகு அவனுடைய பாவபுண்ணியத்துக்கு ஏற்பக் கடவுள் அவனை நரகத்திலோ, சொர்க்கத்திலோ நிரந்தரமாக வைத்து விடுகிறார் என்பதும் பொருந்தாது.

 ஒரு ஜென்மம் என்கிற குறுகிய காலத்தில் செய்த குற்றத்துக்கு முடிவில்லாத நரகவேதனை என்ற தண்டனையைக் கருணையுடையவன் விதிக்கமாட்டான். மானுட ஆட்சியிலேயே அத்தகைய கொடுமையில்லை. குற்றத்துக்கேற்ற தண்டனையும் நல்ல மானுட ஆட்சி முறையானது அளிக்கிறது.

 மறுபிறப்பு என்ற புதிய சந்தர்ப்பத்தைக் கடவுள் கொடுக்காவிட்டால் அவன் கொடியவன் என்ற குற்றத்துக்கு ஆளாவான். பேரறிவும், பேரளுமுடைய கடவுள் அப்படி ஒரு ஜென்மத்தை மட்டும் கொடுத்து மனிதனுடைய முன்னேற்றத்தைத் தடைப்படுத்த மாட்டார். பூரணமாய் ஆராய்ந்து பார்த்தால் ஜீவர்களுக்குப் பல பிறவிகள் உண்டு என்னும் கேட்பாடுதான் யுக்திக்கும் அனுபவத்துக்கும் பொருந்தும்.

பொறுமை


           


நான் படித்ததில் என் மனம் கவர்ந்த ஒரு குட்டி கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அந்த கதை;
      அது ஒரு இனிய காலைப்பொழுது. மனைவி தன் கணவருக்கும் மகனுக்கும் உணவு பரிமாறுகிறார். மகன் வேலைக்குச் செல்ல தாமதமாகிவிட்டதால் வேகமாக உணவு எடுத்துக் கொண்டு இருக்கிறார். அப்பொழுது வெளியில் ஒரு சிட்டுக் குருவி இறை தேடிக் கொண்டு இருக்கிறது. அப்பா அந்தக் குருவியை சுட்டிக் காட்டி ’இதன் பெயர் என்ன என்று?’ கேட்கிறார். அதற்கு மகன் சிட்டுக் குருவி’ என்று பதில் அளிக்கிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு தந்தை மீண்டும் மகனிடம் அந்தப் பறவையை சுட்டிக் காட்டி ‘இதற்கு பெயர் என்னவென்று?’ கேட்கிறார். சற்று பொறுமையை இழந்த மகன் ‘சிட்டுக் குருவி’ என்று கோபமாக கூறினார். மீண்டும் தந்தை அவ்வாறு கேட்க கோபமடைந்த மகன் ‘அம்மா! அப்பாவுக்கு வேலையே இல்லையா? கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்கிறார்.’ அம்மா நீங்களாவது அப்பாவிற்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு வேலைக்குச் சென்றான்.
          அவன் சென்ற பின்பு கணவன் தன் மனைவியிடம் கூறினார் ‘இது போலத் தான் அவன் சிறு வயதில் கேட்டபொழுது நான் பொறுமையை இழக்காமல் பதிலளித்தேன்.’ ஆனால் இந்த காலத்து இளைஞர்களிடம் பொறுமை என்பதே இல்லை என்று கூறினார்.
            இந்தக் கதை என் மனம் கவரக் காரணம் இதில் சொல்லப்பட்ட கருத்தே. எனவே பொறுமையுடன் செயல் பட்டால் எதையும் வெல்ல முடியும்.