வியாழன், 15 டிசம்பர், 2016

அந்தோனி லெவாய்சர்


           அந்தோனி லெவாய்சர்
                             
                                  

பெரும் ஃபிரெஞ்சு அறிவியலாளரான அந்துவான் லோரான் லாவாசியர் இரசாயனவியல் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தவராவார். 1743 இல் அவர் பாரிசில் பிறந்தபோதுஇரசாயனவியலானது இயற்பியல்கணிதம்வானவியல் ஆகியவற்றை விட பின் தங்கிய நிலையிலிருந்ததுஅப்போது இரசாயனவியலார் தனிப்பட்ட உண்மைகள் பலவற்றைக் கண்டுபிடித்திருந்தனர்ஆயினும் சிதறிய இச் செய்திகளை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு கொள்கை அமைப்பு இல்லாதிருந்ததுஅக்காலத்தில் காற்றும் நீரும் தனிமங்களே என்று தவறாகக் கருதி வந்தனர்அதைவிட மோசமான தீயின் தன்மை பற்றி முற்றிலும் தவறான கருத்து நிலவியதுஎரியக் கூடிய பொருள்களிலெல்லாம் ஃப்ளோஜிஸ்டன் எனும் ஒரு பொருள் இருப்பதாக ஊகித்தனர்எரியக் கூடியப் பொருள்கள் எரியும் போதுஃப்ளோஜிஸ்டனைக் காற்றில் வெளியேற்றியதாகவும் கருதினர்.

1754 
முதல் 1774 வரை அறிவுத் திறமை மிகு இயைபியலாளர்களான ஜோசப் பிளாக்ஜோசப் ப்ரீஸ்ட்லிஹென்றி காவன்டிஷ் போன்றோர் ஆக்சிஜன்ஹைட்ரஜன்நைட்ரஜன்கார்பன் டை ஆக்சைடு போன்று முக்கிய வாயுக்களைத் தனியாகப் பிரித்தனர்ஆயினும்ஃப்ளோஜிஸ்டன் கொள்கையை இவர் ஏற்றுக் கொண்டிருந்தமையால்தாம் கண்டுபிடித்த இரசாயனப் பொருள்களின் இயல்பை அல்லது சிறப்பை இவர்களால் கண்டறிய முடியவில்லைஎடுத்துக்காட்டாகஆக்சிஜன் என்பதை இவர்கள் ஃப்ளோஜிஸ்டன் அகற்றப்பட்ட காற்று என்றனர். (மரச்சிராய் சாதாரண காற்றில் எரிவதை விட ஆக்சிஜனில் நன்றாக எரியுமெனத் தெரிந்ததுஒருவேளை ஃப்ளோஜிஸ்டன் வெளியேறிய காற்று எரியும் கட்டையிலுள்ள ஃப்ளோஜிஸ்டன் எளிதில் ஈர்க்க முடியுமெனக் கருதினர்). அடிப்படை சரியாக அறிந்து கொள்ளும் வரை இயைபியலில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட முடியாமலிந்ததுலாவாசியர் துண்டு துக்காணிகளான இச்செய்திகளைச் சரியாக ஒருங்கிணைத்துஇயைபியல் கொள்கைகளைச் சரியான வகையில் வகுத்தார்முதலாவதுஅவர் ஃப்ளோஜிஸ்டன் கொள்கை முற்றிலும் தவறானதென்று கூறினார்ஃப்ளோஜிஸ்டன் என்று ஒரு பொருளில்லை என்றார்எரியும் பொருளும்ஆக்சிஜனும் சேர்ந்து ஏற்படும் இரசாயனக் கலப்புதான் எரிதலாகும்இரண்டாவதுநீர் ஒரு தனிமம் அன்றுஆக்சிஜனும் நைட்ரஜனும் சேர்ந்த ஒரு இரசாயனக் கூட்டுப் பொருள்காற்றும் ஒரு தனிமம் அன்றுஆக்சிஜன்நைட்ரஜன் எனும் இரு முக்கிய வாயுக்கள் கலந்த கலவையாகும்அவருடைய இக்கூற்றுகளெல்லாம் இன்று தெளிவாக விளங்குபவைஆயினும் இவை லாவாசியருக்கு முன் வாழ்ந்தவர்களுக்கோஅவருடைய காலத்தவருக்கோ தெளிவாகத் தெரியவில்லைலாவாசியர் இக்கொள்கைகளை வகுத்து அவற்றிற்குரிய சான்றுகளை எடுத்துக் காட்டிய போதிலும்பல பெரும் இயைபியலார் அவருடைய கருத்துகளை ஏற்க மறுத்தனர்

லாவாசியரின் எலிமென்ட்ஸ் ஆஃப் கெமிஸ்ட்ரி (1789) எனும் சிறந்த நூல் அவருடைய கொள்கையையும் அதை எண்பிக்கும் சான்றுகளையும் தெளிவாகவும் உறுதியாகவும் விளக்கியது.இளம் தலை முறையினரான இரசாயனவியலார் அதை நம்பி ஏற்றனர்லாவாசியர் நீரும்காற்றும் இரசாயனத் தனிமங்கள் அல்லவென்று காட்டியபின்தாம் தனிமங்களல்லவென்று கருதிய பொருள்களின் பட்டியலைத் தமது நூலில் இணைத்தார்இப்பட்டியலில் சில தவறுகளிருப்பினும்இரசாயனத் தனிமங்களின் இன்றைய பட்டியலானது லாவாசியரின் பட்டியலின் விரிவான பட்டியலேயாகும்.
லாவாசியர் (பெர்த்தோல்த்ஃபூர்கருவாகியூத்தோன் தெமோர்லோ ஆகியோருடன் சேர்ந்துஇரசாயனவியலின் கலைச்சொல் தொகுதியை உருவாக்கினார்அவருடைய தொகுப்பே இன்று பயன்படுத்தப் பெறும் சொற்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளதுஅதன்படி ஓர் இரசாயனப் பொருளின் கலப்பு அதன் பெயரையே பெறுகின்றதுமுதல் முறையாக ஓரே வகையான கலைச் சொற்களைப் பயன்படுத்தியதால் உலகம் முழுவதுமுள்ள இரசாயனவியலார் தாம் கண்டுபிடித்தவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.இரசாயன எதிரியக்கத்தில் பொருண்மை மாறுவதில்லை எனும் கொள்கையை முதன்முதலாகத் தெளிவாக விளக்கியவர் லாவாசியராவார்இரசாயன எதிரியக்கம் ஒரு பொருளிலுள்ள தனிமங்களை மாற்றியமைக்கலாம்ஆனால் அவற்றில் எதையும் அழிப்பதில்லைபொருள்களின் எடை மூலக்கூறுகளின் எடையினின்று வேறுபடுவதில்லைஎதிரியக்கத்தில் ஈடுபடும் இரசாயனப் பொருள்களைக் கவனமாக எடை போடுவதன் முக்கியத்துவத்தை லாவாசியர் வலியுறுத்தியது இரசாயனவியலை ஒரு நுட்பதிட்பமான இயலாக மாற்றத் துணை புரிந்தது.
லாவாசியர் புவியமைப்பின் வளர்ச்சிக்கு ஓரளவும்உடலியல் வளர்ச்சிக்குப் பெருமளவும் தொண்டாற்றினார்கவனமாக (லாப்ளாஸின் துணையுடன்பரிசோதனைகளை நடத்திசுவாசிக்கும் செயலானது மெதுவாக எரியும் செயலுக்கு சமமென்று அவர் காட்டினார்அதாவதுமனிதரும் பிற விலங்குகளும் தாம் உட்கொள்ளும் ஆக்சிஜனைப் பயன்படுத்தி கரிமப் பொருளை மெதுவாக உள்ளே எரிப்பதன் மூலம் ஆற்றலைப் பெறுகின்றனர்இரத்தச் சுழற்சியைப் பற்றி ஹார்வி கண்டுபிடித்ததைப் போன்ற முக்கியமான இக்கண்டுபிடிப்பே லாவாசியருக்கு இப்பட்டியலில் உரிய இடத்தைத் தரக்கூடியதுஆயினும் அவர் இரசாயனவியல் கொள்கையை வகுத்ததினால் இரசாயனவியலுக்கு ஒரு சரியான பாதையை வகுத்தார் தற்கால இரசாயனவியலை நிறுவியவர் என்கிறோம்அப்பெயர் அவருக்கு மிகவும் பொருந்தும்இப்பட்டியலில் இடம்பெறும் ஒரு சிலரைப் போல்லாவாசியரும் இளைஞராக இருந்தபோது சட்டம் பயின்றார்அவர் சட்டத்தில் பட்டம் பெற்றுஃபிரெஞ்சு வழக்கறிஞர் குழத்தில் இடம் பெற்ற போதிலும்வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடவில்லைஆயினும் ஆட்சித் துறைப் பணியிலும்பொதுநலப் பணியிலும் ஈடுபட்டார்ஃபிரெஞ்சு அரச அறிவியல் கழகத்தில் செயலாற்றினார்.
அவர் ஃபெர்ம் ஜெனரால் எனும் நிறுவனத்தில் உறுப்பினராக அதன் விளைவாக, 1789 இல் ஃபிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்ட பிறகு புரட்சி அரசாங்கம் அவரைப் பற்றி ஐயப்படத் துவங்கியதுபிறகு,. ஃபெர்ம் ஜெனரால் உறுப்பினருள் 21 பேருடன் அவரையும் கைது செய்ததுபுரட்சிக் கால நீதி நுட்பமாகத் தீர்ப்பிடவில்லையெனினும் விரைவாகத் தீர்ப்பளித்ததுஒரே நாளில் (மே 8, 1794) 28 பேரும் விசாரிக்கப் பட்டுகுற்றத் தீர்ப்பிடப்பட்டுக் கொல்லப் பட்டனர்லாவாசியரை இழந்த அவருடைய மனைவி அவருடைய ஆராய்ச்சிகளில் உதவிய அறிவுடைய மங்கையராவார்.குற்ற விசாரணையின் போதுலாவாசியரைக் காப்பாற்றுவதற்காக வேண்டுகோள் விடுக்கப் பெற்றதுஅவர் நாட்டுக்கும் அறிவியலுக்கும் ஆற்றிய தொண்டுகள் எடுத்துக்காட்டப் பெற்றனநீதிபதி அவற்றையெல்லாம் ஏற்க மறுத்துகுடியரசுக்கு அறிஞர்கள் தேவையில்லை என்று சுருக்கமாகக் கூறிவிட்டார்அத்தலையை வெட்டுவதற்கு ஒரு நொடி தான் ஆனதுஆனால் அது போன்ற தலையைப் பெறுவதற்கு நூறாண்டுகளானாலும் இயலாதுஎன்று அவருடைய தோழரும் கணித மேதையுமான லாக்ரான்ஷ் கூறியதில் ஓரளவு உண்மை இருக்கின்றது.

புதன், 14 டிசம்பர், 2016

ப்பைனல் பனிஷ்மன்ட்

                                                               ப்பைனல் பனிஷ்மன்ட்
ஒரு காலத்தில் பனக்கார நன்றிமனப்பான்மை கொண்ட மனித்தர் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் படுத்துவிட்டார்.நிறைய மருத்துவர்களை அழைத்து மருத்துவம் பார்த்தபோதும் நோய்க்கான சரியான தீர்வை எவரும் கூறவில்லை.பயத்தில் அவர் கடவுளை வங்க ஆரமைத்தார்``கனவுளே என் உயிரை நீ காப்பாற்றினால் உனக்கு நூறு எருதுகளை பளியிடுகிறேன்’’ என்று வேண்டினார்.

            கடவுளுக்கு அவர் சொல் கேட்டு அவரது மர்ம நோயை தீர்த்தார். அந்த பணக்காரின் நோய் குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பினார். எனினும்,அவரின் பணத்தை மிச்சப்படுத்துவதற்க்காக நூறு பொம்மை எருதுகளை வடிவமைத்து கோயிலுக்கு தானமாக கொடுத்து ``கடவுளே தயவு கூர்ந்து எனது இந்த கொடையை ஏற்றுக்கொள்ளுங்கள்’’ கடவுள் இவன் மீது மிகுந்த கோபமடைந்தார் நூறு உயிருடன் இருக்கும் எருதுகளை பளிகொடுப்பதாக கூறி பொம்மையை கொடுக்கிறான் என்று.ஆகையாள், கடவுள் அவனை தன்டிக்க முடிவு செய்தார்.அவனது கனவில் கடவுள் தோன்றி ``கடற்க்கரைக்கு காலை செல் நூறு பொற்காசுகள் உனக்கு கிடைக்கும்’’ என்று கூறினார்.
            அந்த பனக்காரரும் காலை கடற்கரைக்கு சென்றார் மகிழ்ச்சியுடன்.அங்கு கடற்கொள்ளயர்கள் வந்து அவரை கைது சென்றனர். கைது சென்ற அவரை வெளியுரில் விற்று நூறு பொற்காசுகள் பெற்றனர்.
                                                            (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி